Friday, 30 January 2015

Engineer Vs Doctor


A Mechanic was removing the engine parts from a motorcycle when he saw a famous heart surgeon in his shop. He went to him and said "Look at this engine.. I opened its heart, took the valves out, repaired and put them back..but why do I get such a small salary and you are paid more?"




The Doctor smiled at the mechanic and came closer to his ear and said.."Try the same when the engine is running.."
.
.
.
.
.
.
.
continuation....

Engineer Revenge...
.
.
.
.
.
.
.
The Mechanic smiled back came close to Doctor's ear and said "I can pick any dead engine and make it alive....but can you???"


Monday, 19 January 2015

குஜராத் ஏன்?


2 வருடங்களுக்கு ஒரு முறை குஜராத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கிறது. இதில் சில லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் குவிகின்றன. 

2013-ம் ஆண்டு நடந்த மாநாட்டில் 17,700 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. சமீபத்தில் முடிந்த மாநாட்டில் 22,000 விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன.


சர்வதேச முதலீட்டாளர்கள் குஜராத்தில் குவிவது ஏன்?



# சர்வதேச அளவில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களின் பட்டியலில் அகமதாபாத் மற்றும் சூரத் ஆகிய நகரங்கள் இருக்கின்றன.

# 7517 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்திய கடற்கரையில் குஜராத்தில் மட்டும் 1600 கி.மீ அளவுக்கு கடற்கரை இருக்கிறது.

# குஜராத்தில் அதிக விமானநிலையங்கள் இருக்கின்றன.

# 16 உள்நாட்டு விமான நிலையங்களும் 1 சர்வதேச விமான நிலையமும் இருக்கின்றது.

# ஜோதிராம் யோஜனாவின் கீழ் குஜராத்தில் இருக்கும் அனைத்து கிராமங்களுக்கும் 24 மணிநேரமும் மின் வசதி செய்யப்பட்டிருக்கிறது.

# ஆசியாவில் மிகப்பெரிய சூரிய மின் உற்பத்தி நிலையம் குஜராத்தின் சரங்கா என்னும் இடத்தில் இருக்கிறது. இது 600 மெகாவாட் உற்பத்தி திறனுடையது.

# இந்தியாவின் முதல் தனியார் துறைமுகம் குஜராத்தில் (பிபாவவ்) இருக்கிறது. முந்த்ரா துறைமுகம் முழுவதும் எந்திர மயமாக்கப்பட்டது.

# நிர்வாகவியல் கல்லூரியான ஐஐஎம் அகமதாபாத்தில் இருக்கிறது. இது ஆசியாவின் 4 வது இடத்தில் இருக்கிறது.

# இந்தியாவின் பல நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் ஐஐஎம் அகமதாபாத்தில் படித்தவர்கள். ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம்ராஜன், தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன், ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் கேவி காமத், மறைந்த சி.கே பிரகலாத் உள்ளிட்டோர் முன்னாள் மாணவர்கள்.

# இந்தியாவில் அதிக மக்கள் பேசும் மொழிபட்டியலில் குஜராத்தி மொழி 7-வது இடத்தில் இருக்கிறது. 5.46 கோடி நபர்கள் குஜராத்தி பேசுகிறார்கள்.

# குஜராத்தில் வாழும் 43% மக்கள் நகர்ப்புறங்களில் வாழ்கிறார்கள்.

# இந்தியாவின் முக்கியமான பங்குச்சந்தையான பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் குஜராத்தியர்களால் உருவாக்கப்பட்டது.

# குஜராத் மாநிலத்தில் இருக்கும் 27 நதிகள் இணைக்கப் பட்டிருக்கின்றன. 98.86% குஜராத் கிராமங்கள் சாலை மூலம் இணைக்கப் பட்டிருக்கின்றன.

# பருத்தி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்தியாவில் முதலிடத்தில் குஜராத் இருக்கின்றது.

# இந்திய ஜிடிபியில் குஜராத்தின் பங்கு 7.14%

Sunday, 18 January 2015

:-) வாய் உள்ள பிள்ளை பிழைக்கும் :-)


ஆயக்கலைகள் அறுபத்து நான்கில் பேச்சுக்கலையும் ஒன்று. மற்றக் கலைகளைக் கற்றுக்கொள்கிறோமோ இல்லையோ இந்தக் கலையைக் கற்றுக் கொண்டால்தான் வாழ்க்கை வசப்பபடும்.

யாரிடம் எதைப் பேசுவது, எந்தச் சூழலில் எப்படிப் பேசுவது போன்றவை தெரிந்து பேசினாலன்றி பிழைக்க முடியாது என்ற நிலையில் பிறந்ததாகத்தான் இருக்க வேண்டும் "வாயுள்ள பிள்ளை பிழைக்கும்' என்ற பழமொழி.

மண்ணுக்குள் வைரம்போல எத்தனை திறமைகள் நமக்குள் மறைந்துகிடந்தாலும், அவற்றை சந்தர்ப்பம் பார்த்து பிறருக்குத் தெரியப்படுத்த பேச்சு முக்கியம். நம்மைப் பற்றி நாமே பேசாவிடில் வேறுயார்தான் பேசப் போகிறார்கள்?

நம்மைப் பற்றி நாமே பேசுவதை சிலர் சுய தம்பட்டம் என்று கூறுவார்கள். சரி, நம்மைப் பற்றியே பேசினால் சுய தம்பட்டம் என்கிறார்களே என அதைக் கைவிட்டு, பிறரைப் பற்றிப் பேசினால் புறணி பேசுகிறான் என்பார்கள். அதனால், பேசாதிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தால், அதனை ஆணவம் என்பார்கள்.

பேசிக்கொண்டேயிருந்தால் வாயாடி; அடுத்தவர் பேசும்வரை காத்திருக்காமல் முந்திக்கொண்டு பேசினால் முந்திரிக் கொட்டை; பேசுபவரின் பேச்சை அலசி ஆராய்ந்தால், எதிர்த்துப் பேசுபவன், பேச்சை ஆமோதித்தே பேசிக் கொண்டிருந்தால் ஜால்ரா.

ஆக, ஒருவரது நாக்கை வைத்து மற்றவர்கள் நாக்கு பலவிதமாகப் பேசுகிறது என்பதே உண்மை.

"பேசாத பேச்சுக்கு நீ எஜமான், பேசிய பேச்சு உனக்கு எஜமான்' என்பது பொன்மொழி. கடுகு சிந்தினால்கூட அள்ளிவிடலாம். காற்றில் விதைத்த பேச்சுகளை அள்ளுவது இயலாத காரியம்.

பேச்சுக்கு உருவமில்லை. ஆனால் ஆறடி உருவ மனிதனையும் அது நிலைகுலையச் செய்துவிடுகிறது. மென்மையான இதயத்தில் காயமேற்படுத்தவும் காயம்பட்ட இதயத்தை மயிலிறகாய் வருடிவிடவும் பேச்சுக்குத் தெரியும்.

பேச்சு - மருந்தா, விருந்தா என்பது அது பேசப்படும் விஷயத்தைப் பொறுத்தது.

பேசிப்பேசியே ஏற்படும் பிரச்னைகளுக்குப் பேசிப்பேசியே தீர்வும் காணலாம். இது விநோதமான முரண்தான்!

சிலருக்குப் பேசுவதற்கு ஏதேனுமொரு தலைப்பு கொடுத்தால் மிக அருமையாகப் பேசுவார்கள்.

பலருக்குத் தலைப்பே தேவையில்லை. பல மணி நேரம் கடந்தும் பேச்சுப் பாதையில் பயணம் செய்துகொண்டிருப்பார்கள். கேட்போருக்குத்தான், காதுகளுக்கு இயற்கை கதவைப் படைக்காமல் விட்டதே என நொந்துகொள்ளத்தோன்றும்.

பேச்சுப் பற்றிப் பேசும்போது, "நிறைகுடம் தளும்பாது; குறைகுடம் கூத்தாடும்' என்ற பழமொழியும் நினைவுக்கு வரும். தளும்பாத குடம் நிறைகுடமாக மட்டுமல்ல, வெறுங்குடமாகவும் இருக்கலாம்!

பேசிப்பேசியே ஆட்சியைப் பிடித்தவர்கள் நமது தலைவர்கள். மாநிலத்தில் மட்டுமல்ல மத்தியிலும் பல எடுத்துக்காட்டுகள் உண்டு.

நூறு நாளிலோ, ஆறு மாதங்களிலோ மாயாஜாலம் நிகழும் எனப் பேசி ஆட்சியைப் பிடிக்கிறார்கள். ஆனால், அதன்பிறகும் பேசுகிறார்கள், தாங்கள் பேசியதை ஏன் செய்துமுடிக்க முடியவில்லை என்பதுகுறித்து.

இதனால் அவர்களைப் பற்றி எதிர்க்கட்சியினர் பேசத் தொடங்கிவிடுகின்றனர்.

"மேடை ஏறிப் பேசும்போது ஆறுபோலப் பேச்சு; கீழே இறங்கிப் போகும்போது சொன்னதெல்லாம் போச்சு' என்றார் கண்ணதாசன்.

சிலருக்கு எதிர்க்கட்சி வரிசையிலிருந்தால் ஒரு பேச்சு, அரியணை ஏறிவிட்டால் மற்றொரு பேச்சு.

இப்படி ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் மாறிமாறி முன்னுக்குப்பின் முரணாகப் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருக்கும் மக்கள் ஐந்தாண்டு முடிவில் பேசாமல் செயலில் காட்டிவிடுகின்றனர்.

பல பிரச்னைக்கு ஓயாத பேச்சுகள் காரணமாக இருப்பதைப்போல பேசாதிருப்பதும் பல நேரங்களில் பல பிரச்னைகளுக்கு காரணமாகிவிடும். வாய்ப்பு கிடைத்தும் வாய் திறவாதிருப்பதும் தவறுதானே!

காதலிக்கும்போது மணிக் கணக்கில் செல்போனிலும் நேரிலும் பேசிப்பேசியே பொழுதைக் கழிப்போரில் சிலர், திருமணத்துக்குப் பிறகு வார்த்தைகள் அனைத்தும் வற்றிப்போன மனநிலைக்கு வந்துவிடுகின்றனர்.

அதனால் "என்ன பேச?" என்றோ, "என்னத்தைப் பேசி என்ன ஆகப் போகிறது' என்றோ ஏகாந்த நிலைக்கு உள்ளாகி விடுகின்றனர்.

பலர், "பேசியதால் வந்த வினைப்பயனை அனுபவித்தவர்கள்போல, "பேசாதிருப்பதே நன்று' என்ற மெளன நிலையைக் கடைப்பிடிக்கத் தொடங்கிவிடுகின்றனர். சில நேரங்களில் அவர்களையும் மீறி பேசத் தொடங்கினால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, குடும்ப விவகாரம் மற்றவர்களுக்குப் பேச்சுப்பொருளாகி விடுகிறது.

தங்களுடைய குழந்தை ஒரு வயது தாண்டியும் பேசாதிருந்தால் அதைப் பற்றிப் பேசியே பல்வேறு மருத்துவர்களை மன வருத்தத்துடன் தேடி அலையும் பெற்றோர், அதே குழந்தை சற்று வளர்ந்து அதிகம் பேசத் தொடங்கிவிட்டால் உடனே வாயை மூடு என திருவாய் மலர்வதைப் பார்க்கலாம்.

தனியார் தொலைக்காட்சிகளிலும் இரவு, பகல், அதிகாலை, அந்திப்பொழுது என காலநேரம் எதுவும் பார்க்காமல் சலிப்பேயில்லாமல் பேசுகின்றனர்.

அதிலும், நான்கு பேரோ, மூன்று பேரோ சேர்ந்து பேசும் "நேரலை' நிகழ்ச்சிகள் அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் உண்டு.

இப்படி பல "நேரலை' பார்த்தும் நமக்கு ஒன்றும் "நேரலை' (நேரவில்லை) என்பது ஆச்சரியம்தான்! பேசிக்கொண்டேயிருக்கும் அஃறிணை தொலைக்காட்சிகள். அதன் முன் மெளனமாகவே அமர்ந்திருக்கும் உயர்திணை மக்கள்!

யாருக்கும் பயனற்ற நுனிக்கரும்பு பேச்சைவிட, அனைவரையும் நல்வழிப்படுத்தும் அடிக்கரும்பு பேச்சே எப்போதும் ஏற்றது.

திருக்குறள்

            133 அதிகாரங்களையும் 1330 குறள்களையும் கொண்ட திருவள்ளுவர் எழுதிய திருக்குறளின் சிறப்புகள் -



ü  "தமிழ்" என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை

ü  திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துகள் 42,194

ü  247 தமிழ் எழுத்துக்களில் 37 எழுத்துகள் பயன்படுத்தப்படவில்லை

ü  திருக்குறளில் இடம் பெற்ற இரண்டு மலர்களின் பெயர்கள் அனிச்சம், குவளை

ü  திருக்குறளில் இடம் பெற்ற ஒரே ஒரு பழம் நெருஞ்சிப்பழம்

ü  திருக்குறளில் இடம் பெற்ற ஒரே விதையின் பெயர் குன்றிமணி

ü  திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிர் எழுத்து "ஒள"

ü  திருக்குறளில் இடம் பெற்ற இரண்டு மரங்கள் பனை, மூங்கில்

ü  திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஒரே எழுத்து "ணி". 1705 தடவை பயன்படுத்தப்பட்டுள்ளது

ü  திருக்குறளில் பத்து முறைக்கு மேல் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள் "வீ, "


ü  திருக்குறளில் இடம் பெறாத எண் : ஒன்பது

Monday, 12 January 2015

The Best Converstaion


Swami Vivekananda : I can't find free time. Life has become hectic

Ramakrishna Paramahansa : Activity gets you busy. But productivity gets you free.

Swami Vivekananda : Why has life become complicated now?

Ramakrishna Paramahansa : Stop analysing life..  It makes it complicated. Just live it.



Swami Vivekananda : Why are we then constantly unhappy?

Ramakrishna Paramahansa : Worrying has become your habit. That's why you are not happy.

Swami Vivekananda : Why do good people always suffer?

Ramakrishna Paramahansa : Diamond cannot be polished without friction. Gold cannot be purified without fire. Good people go through trails, but don't suffer.
With that experience their life become better, not bitter.

Swami Vivekananda : Do you mean to say such experience is useful?

Ramakrishna Paramahansa : Yes, In every term, Experience is a hard teacher. She gives the test first and then the lessons.

Swami Vivekananda : Because of so many problems, we don't know where we are heading..

Ramakrishna Paramahansa : If you look outside you will not know where you are heading. Look inside. Eyes provide sight. Heart provides the way.

Swami Vivekananda : Does failure hurt more than moving in the right direction?

Ramakrishna Paramahansa : Success is a measure as decided by others. Satisfaction is a measure as decided by you.

Swami Vivekananda : In tough times, how do you stay motivated?

Ramakrishna Paramahansa : Always look at how far you have come rather than how far you have to go. Always count your blessing, not what you are missing.

Swami Vivekananda : What surprises you about people?

Ramakrishna Paramahansa : When they suffer they ask "Why me?" When they prosper, they never ask "Why me?"

Swami Vivekananda : How can I get the best out of life?

Ramakrishna Paramahansa : Face your past without regret. Handle your present with confidence. Prepare for the future without fear.

Swami Vivekananda : Sometimes, I feel prayers are not answered..

Ramakrishna Paramahansa : There are no unanswered prayers. Keep the faith and drop the fear. Life is a mystery to solve, not a problem to resolve.

If Your’e A 90s Indian Kid, Then These 24 Items Will Make You Cry With Nostalgia


If you grew up in late 80s or 90s, you are much fortunate than today’s kids of idiotic generation. Ask me why? Because you enjoyed your real childhood before smart phones, tablets, facebook, selfies, and other technologies took over it and completely ruined it.

Here are some 90s stuff  we all definitely had when we were kids. And if you still remember any of these, trust me, you had an awesome childhood.

1. Big Fun and Big Babol, your favourite chewing gums. Remember, how you used to compete with your friends to blow the largest bubble with bubble gum.


2. You could get many of these candies with just Rs 2. And Parle G was the only brand we knew that time, be it biscuit or toffee.


3. Every morning before you went to school you made sure your HERO fountain pen is filled with this ink.



4. Chewing this helped you concentrate in class? LOL


5. This NATRAJ geometrical box was one of your treasures during school days.


6. Remember this?


7. You listened to those 90s memorable songs only on this.



8. And you loved to collect as many of these audio cassettes.


9. During monsoons, you made many of these paper boats and enjoyed racing among your friends.


10. And once you had this toy gun, you started behaving like a boss.


11. Is there anyone who didnt like playing brick games? Your Sundays and holidays were never complete without this.


12. Everyone of us owned these white Bata shoes. The more the shoes were white, the more we were happy. Sometimes, we used ‘chalk’ to paint it and make it more whiter.
If you notice, these white shoes are a fashion now a days. Things remain the same, but the way we use it is different.



13. And you were pretty excited to wear a pair of this new  black shoes when your school reopened after vacation.


14. And these disco-dancing shoes…



15. This was the sole beverage we knew! Mango frooti, fresh and juicy…


16. When there was load shedding, lantern helped you on your tough days during exams.



17. Sketch pens, Camel water colours….all these made us artistic. We all considered ourselves a great painter. :)


18. Collecting cards of our favourite WWF characters was our real hobby.



19. You survived the hot summer days in school with this MILTON  water bottle. Your parents always assured you carry this. How sweet!


20. Now, you can’t find this “switch box” anymore in your house.


21. That excitement you felt while receiving letters can’t beat today’s email and phone calls. And yes, that’s TV antenna on the right.  It helped us watch our favourite classic DD serials and other shows.


22. GI JOE:  If you owned at least three of them, you were lucky. Snake Eyes and Storm Shadow were my favorite. :) What was yours?



23. During exams, this wood clipboard was your weapon. You wrote down those difficult Maths and Science formulas here and it helped you hide notes. Cheaters. :)


24. And if you didn’t get chance to play any of these two, your childhood was boring.



And kids these days…


Saturday, 10 January 2015

பான் கார்டு அவசியமாவது ஏன்?

பான் கார்டு (Permanent Account Number) ஏன் எடுக்க வேண்டும் என்கிற கேள்வி எழுவது இயல்பானதுதான். பான் கார்டு குறித்து அறிந்தவர்கள் கூட அது வருமான வரி கணக்குத் தேவைகளுக்குத்தான் என்று நினைத்துக் கொள்கின்றனர்.

வரி கட்டாதவர்கள் நமக்கு அது எதற்கு என்று அதைப் பொருட்படுத்துவதில்லை. ஆனால் இது வருவான வரி செலுத்துவதற்கான எண் மட்டுமல்ல, அல்லது வரிக் கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு மட்டும் தேவையான விஷயமும் கிடையாது. இந்திய குடிமகன் ஒவ்வொருவரது பண பரிவர்த்தனைகளும் பாதுகாப் பானதாகவும், நம்பகமானதாகவும் இருக்க உதவுவது பான் கார்டுதான்.

நிரந்தர கணக்கு எண் கொண்ட பான் கார்டு 10 எழுத்துக்களைக் கொண்ட ஒரு குறியீடு. இந்த எண் நிரந்தரமானது. அடிக்கடி மாற்றத்தக்கது அல்ல. முகவரி மாறினாலோ அல்லது வேறு மாநிலத்திற்கு சென்றால்கூட இந்த எண்ணை மாற்றிக்கொள்ள வேண்டிய தேவை இல்லை. வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள், இந்தியாவில் பரிவர்த்தனையில் ஈடுபட்டாலும் பான் கார்டு அவசியம்.



மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள என்எஸ்டிஎல் அமைப்பு இந்த பான் எண்ணை வழங்குகிறது. பான் கார்டு பயன்படுத்துவதன் மூலம் வங்கி, பண, வரி பரிவர்த்தனைகள், கடன், முதலீடு, பண மதிப்பு கொண்ட வாங்கி விற்கும் நடவடிக்கைகள் போன்ற அனைத்தையும் ஒரு கண்காணிப்பில் அரசு கொண்டு வருகிறது.

இதன் மூலம் வரி ஏய்ப்பு மறைமுகமாகத் தடுக்கப்படுகிறது. தவிர இந்திய குடிமகன் என்பதற்கான அடையாள ஆவணமாகவும் பல இடங்களில் பான் கார்டு பயன்படுகிறது. தனிநபர் அல்லது நிறுவனம் குடும்ப அமைப்பு என யார் பெயருக்கு வேண்டுமானாலும் பான் கார்டு வாங்கலாம்.

ஆனால் ஒருவர் பெயரில் அல்லது ஒரு நிறுவனம் பெயரில் வாங்கப்பட்ட பான் கார்டை வேறொருவருக்கு மாற்ற முடியாது. பான் கார்டு வழங்கும் முறை மிக துல்லியமானது. தவறான தகவல்கள், ஆவணங்கள் கொடுத்து ஒருவர் ஒரு பான் கார்டிற்கு மேல் வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகவும் கருதப்படும்.

எப்படி வாங்குவது?

பான் கார்டு வாங்கும் நடைமுறை வெகு எளிதானது. பான் எண் வாங்குவதற்கு என்று வயதுவரம்பு கிடையாது. வருமான வரி கட்ட வேண்டும் என்கிற அவசியமில்லை. எந்த நிறுவனத்திலும் பணியாற்ற வேண்டும் என்கிற தேவையுமில்லை. ஆதார் அடையாள அட்டை போல, அங்கீகாரம் பெற்ற அரசின் அமைப்பு வழங்கும் வரிக்கணக்கு எண். நீங்கள் வருமான வரி கட்டினாலும், கட்டவில்லை என்றாலும் உங்களுக்கு என்று ஒதுக்கப்படும் எண் இது.

பிறந்த குழந்தைக்குக் கூட பான் எண் வாங்க முடியும். குறிப்பிட்ட வயது வரை பெற்றோர் அல்லது பாதுகாவலர் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

பான் கார்டு வாங்கிக் கொடுக்கும் முகவர்களிடம் தேவையான விவரங் களை கொடுத்தால், அவர்கள் என்எஸ் டில்எல் நிறுவனத்தில் விண்ணப்பம் செய்வார்கள். அங்கிருந்து நேரடியாக உங்கள் வீட்டு முகவரிக்கு பான் கார்டு அனுப்பப்பட்டு விடும். நேரடியாக ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் செய்தும் பான் கார்டு வாங்கலாம்.

இதற்கு முகவரிச் சான்று, அடையாளச் சான்று, வயது சான்று போன்ற ஆவணங்களும், உங்களது புகைப்படமும் இணைக்க வேண்டும்.

பான் எண் எப்படி ஒதுக்கப்படுகிறது?

முதல் ஐந்து எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்கும். அதில் முதல் மூன்று எழுத்துக்கள் அகர வரிசையில் AAA-வில் ஆரம்பித்து ZZZ-ல் முடியும். நான்காவது எழுத்து விண்ணப்பதாரர் குறித்த குறியீடு. அதாவது குழுமம் (கம்பெனி) என்றால் - C , தனி நபர் -P, ஹிந்து கூட்டு குடும்பம்(HUF) - H , நிறுவனம் - F , தனி நபர்களின் கூட்டு (AOP) - A , அறக்கட்டளை - T , பாடி ஆப் இண்டிவிஜூவல்ஸ் (BOI) - B ,

லோக்கல் அதாரிட்டி - L , செயற்கையான நீதிமன்ற நடவடிக்கை சார்ந்த நபர் - J , அரசு - G.

ஐந்தாவது எழுத்து தனிநபர் என்றால் அவரது குடும்பப் பெயரின் முதல் எழுத்து அல்லது குறிப்பிட்ட விண்ணப்பதாரரின் பெயரிலுள்ள முதல் எழுத்து. அடுத்த நான்கு எழுத்துக்கள் 0001-ஆரம்பித்து 9999 வரை வரிசையாகச் செல்லும்.

கடைசி எழுத்து அகர வரிசைச் சார்ந்த சரிபார்ப்பு எழுத்து.

எப்படி விண்ணப்பம் செய்வது?

பான் கார்டுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ 105 ஆகும். காசோலை, வங்கி வரைவோலை மற்றும் ஆன்லைன் பேங்கிங் வழியாகவும் செலுத்தலாம். காசோலை NSDL - PAN என்கிற பெயரில் மும்பையில் மாற்றத்தக்க வகையில் இருக்க வேண்டும். வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கான கட்டணம் 971 ரூபாய். இதே இணையதளத்தின் மூலம் வழி பான் கார்டு திருத்தங்களையும் மேற்கொள்ளலாம். கட்டணங்களில் மாற்றமில்லை.

ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் செய்ய இணையதள முகவரி:

https://tin.tin.nsdl.com/pan/

எறும்புகள் என்னும் பொறியியல் நிபுணர்கள்

கான்கிரீட் கூரைப்பகுதியில் நீர்க்கசிவு என்பது பழைய கட்டிடங்களில் மட்டுமல்ல புதுக் கட்டிடங்களிலும் இருக்க வாய்ப்பு உண்டு. என் உறவினர் ஒருவரின் வீட்டில் போர்டிகோவும், வாயிலும் இணையுமிடத்தில் மழை நீர் அதிக அளவில் கசிந்துகொண்டிருந்தது. கசிவு என்பதைவிட கான்கிரீட் தளத்தின் வழியாக நீர் கொட்டியது என்பதுதான் சரி.

போர்டிகோ சுவரோடு இணைக்கப்பட்டுள்ளதே தவிர, மேற்கொண்டு பளு தாங்க ஒரு தூண்கூட இல்லை. தூண் இல்லாத போர்டிகோ சுவரோடு இணையுமிடத்தில் நீர்க்கசிவு என்றால் உறவினர் எந்த அளவுக்கு அச்சமடைந்திருப்பார், கலக்கமடைந்திருப்பார் எனபதைக் கூறவே வேண்டாம். ஏனெனில் அதிக எடையுள்ள போர்டிகோ பெயர்ந்து விழுவது மட்டுமல்ல உயிர்ப்பலிகூட நேரிடலாம்

எறும்புகளின் அணிவகுப்பு

திறமை, அனுபவம் வாய்ந்த மேஸ்திரியை வைத்து ஆய்வு செய்து, போர்டிகோ தளத்தின் மேற்புறத்தில் இருந்த சிமெண்ட் பூச்சு படிவம் முழுவதையும் உளியால் பெயர்த்துவிட்டு, மீண்டும் நன்றாகப் பூச்சு படிவம் (Plastering) செய்தார். போர்டிகோ தளம் முழுவதையும் நிறைக்கும் விதமாக பாத்தி அமைத்து நீரைத்தேக்கி நீராற்றம் (Curing) செய்தார். நீர்க்கசிவு எதுவுமில்லை என்று உறவினரும் மன சமாதானம் அடைந்தார்.

ஆனால் அடுத்த மழையின்போது நீர்க்கசிவு முன்பைவிட அதிகமானதைப் பார்த்து அதிர்ச்சியாகி என்னை அழைத்துக் காட்டினார். என்னாலும் எதுவும் கண்டுபிடிக்கவோ, எதுவும் கூறவோ முடியவில்லை. போர்டிகோவைத் தாண்டி மேலே ஏறி மொட்டை மாடிப் பகுதியில் இதைப் பற்றிப் பேசிக்கொண்டு நின்றோம். அப்போது மழைக்குப் பின் நாம் சாதாரணமாக எங்கும் காணும் எறும்புப் படையெடுப்பு ஒன்று வரிசையாகப் போய்க்கொண்டிருந்ததைப் பார்த்தோம்.



தரைப்பகுதியிலிருந்து, சுவர் வழியாக மேலே ஏறி போர்டிகோ பகுதியையும் தாண்டி மொட்டை மாடித்தரையில் சுமார் 10 அடி தூரம் சென்று கைப்பிடிச் சுவரை ஒட்டிய ஓரிடத்தில் மாடித்தரையின் உள்ளே புகுந்து கொண்டும், வெளிவந்து கொண்டுமிருந்தன. அந்த இடத்தைப் புறங்கை விரலால் தட்டிப் பார்த்ததில் தரையின் உட்புறம் இறுக்கமாக இல்லாமல் வெற்றிடமாக இருக்கும் சத்தம் கேட்டது.

அங்கு சிமெண்ட் பூச்சைப் பெயர்த்துவிட்டுப் பார்த்தால் உள்ளே சிறிய சுரங்கப் பாதையே அமைக்கப்பட்டிருந்தது. எறும்புகள் இவ்விதம் செய்வது, உணவைச் சேமிக்கவும், வெய்யில் படாமல் தப்பித்துக் குளிர்ச்சியான இடத்தில் வசிப்பதற்கும்தான்.

எறும்புகள் தந்த ஆலோசனை

அங்கு முன்பு இருந்த பூச்சில், சிமெண்ட் கலவை நேர்த்தியாக இல்லை, நீராற்றம் சரிவரச் செய்யப்படவில்லை. ஆகையால் மேலே சொன்ன குறைபாடு நிகழ்ந்துள்ளதைக் கண்டுபிடித்தோம். ஒரே ஒரு சட்டி சிமென்ட் கலவையைக் கொண்டு எங்களாலேயே சுலபமாகக் குறைபாடு சரிசெய்யப்பட்டுவிட்டது. கிட்டத்தட்ட மூவாயிரம் ருபாய் செலவுசெய்து மூன்று ஆட்களைக்கொண்டு ஏற்கனவே செய்யப்பட்ட வேலை விழலுக்கு இறைத்த நீர்போல ஆனது.

இன்னுமொரு பிரச்சினையைக்கூட எறும்புகள் நமக்கு எளிதாகக் காட்டிக் கொடுத்துவிடும். வீட்டில் நிலைவாசல் படி, மர ஜன்னல்கள், மரத்தினாலான கப்போர்டுகளை நம் கண்களில் படாமல்; அடிப்பகுதி வழியாகவும் மற்றும் பின்புறமாகவும் கரையான்கள் அரிக்கத் தொடங்கும். கூடவே மண்ணால் புற்று அமைக்கும்.

எறும்புகள் தொடக்கத்திலேயே கரையான்களை எதிர்த்துப் போரிட்டுப் புற்றுகளைக் கலைத்து மண்ணை வெளியேற்றும். கரையான்கள் கை ஓங்கும்வரை போரிடும். குறைந்த அளவில் மண் வெளிப்படும்போதே பார்க்க நேர்ந்தால் உடனே கரையான் தடுப்பு முறைகளைக் கையாண்டு கரையான் தாக்குதல்களை முறியடித்துச் சேதங்களைத் தவிர்க்கலாம்.

எறும்புகளைப் போற்றுவோம்

கட்டிடத்தின் வெளிப்புறத் தரையில் மண் அரிப்பு ஏற்படுவது, சிமெண்ட் கெட்டிப்படாமல் நீர்க்கசிவு உண்டாவது, கரையான் தாக்குதல்கள் போன்ற, நம் கண்களுக்குச் சுலபமாகப் புலப்படாத - கட்டிடத்துக்கு ஊறுவிளைவிக்கும் கடுமையான பிரச்சினைகளைக்கூட, நமக்குச் சர்வ சாதாரணமாக எடுத்துக்காட்டும் எறும்புகளைச் சிறந்த பொறியியல் நிபுணர்கள் என்றுகூடச் சொல்லலாம். எறும்புகளின் பொறியியல் பார்வையைக்கண்டு வியந்தோம்.

இனிமேல் மருந்து போட்டுக் கொல்லாமல், விரட்டாமல் நம் வீட்டு வாசல்களில் அரிசி மாவுக் கோலம் போட்டு நம் தொழில்நுட்ப நண்பர்களை, நம் பாரம்பரிய கலாச்சார முறைப்படி வரவேற்போம். எறும்பு தின்றால் கண் தெரியும் என்ற பழமொழி எவ்வளவு அர்த்தம் பொதிந்தது! மண்புழுவை விவசாயிகளின் நண்பன் என்றால் எறும்பைக் கட்டிடங்களின் நண்பன் என உறுதியாகச் சொல்ல வேண்டும்.

Wednesday, 7 January 2015

இட்லி வாங்கலையோ இட்லி!!

இது ஒரு உண்மை சம்பவத்தை ஒட்டி எழுதப்பட்ட ஒரு உவமைக்கதை
ஒரு ஊர்ல ஒரு இட்லிகாரம்மா இருந்தாங்களாம். பொழுதன்னைக்கும் இட்லி சுட்டு விக்கிறதுதான் அவுங்க பொழப்பு. ஊர்ல எத்தனையோ ஹோட்டல் இருந்தாலும் அந்தம்மா சுடுற இட்லி நல்லா பெருசாவும், டேஸ்டாவும், வெல கம்மியாவும் இருக்குறதால கூட்டம் அள்ளுச்சாம். இதனால நெறைய பேர் ஹோட்டல்ல சாப்புடுறத விட்டுட்டு இங்க வந்து சாப்பிட ஆரம்பிச்சிட்டாங்களாம். ஆளாளுக்கு ஒரு பிரச்சனைனா ஏரியா கவுன்சிலருக்கு அந்தம்மா வெளியூர்க்காரி, அவங்க கடைல சாப்புடக்கூடாதுனு கூட்டம் போட்டு கத்திகினு இருந்தாராம்.
அந்தம்மாவ பாத்துட்டு நெறைய பேர் அதே மாதிரி அந்தூர்ல வரிசையா இட்லிகடையா தொறந்தாங்களாம். அங்கயும் கம்மி வெலையில பெரிய இட்லி தர்ரதால எல்லா இட்லிலயும் ஊர்சனம் போட்டி போட்டு இட்லி வாங்குனாங்களாம். என்னதான் ஹோட்டல்லலாம் யாபாரம் கொறஞ்சாலும், "சீ, ரோட்டுக்கடைலலாம் எவனாவது இட்லி சாப்புடலாமா"ன்னு வயித்தெரிச்சலோட பொலம்பிட்டே தொடர்ந்து ஹோட்டல்ல சாப்புடுற மக்களும் இருந்தாங்க. கவுன்சிலரும் அப்பப்ப இந்த அந்நிய இட்லிகடைகளால தான் இந்தியா நாசமா போவுதுனு பொலம்பிட்டு போவாறாம்..
கொஞ்சம் கொஞ்சமா மொதமொதல்ல இட்லிக்கடை போட்ட அம்மாவுக்கு வியாபாரம் கொறைய ஆரம்பிச்சதாம். சரி இன்னும் கொஞ்ச நாள் சமாளிக்கலாம்னு அந்தம்மா லாபத்த கொறச்சி, நெதமும் முப்பது பேருக்கு இட்லி இலவசம்னு ஏதேதோ பண்ணி பாத்திச்சாம். ஆனாலும் பெருசா எதுவும் லாபம் பாக்க முடியாததால, திடீர்னு ஒருநாள் நெதமும் வைக்கிற அளவுக்கு இனி வைக்கமுடியாது; அதனால கொஞ்சம் பேருக்கு இட்லி கெடைக்காதுன்னு போர்டு போட்டுருச்சி..
இட்லி கெடைக்காதவங்கல்லாம், இத்தன வருசமா உன்ன நம்பிதான் வாழ்றேன்.. அதனால நீதான் எனக்கு இட்லி கொடுக்கனும்னு போராட்டம் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. இதுதான் சாக்குன்னு மேட்டர்குள்ள வந்த கவுன்சிலர் குண்டாவுல இருக்குற ஒவ்வொரு இட்லியும் அடுத்தவனோடதுனு பஞ்ச் பேச ஆரம்பிச்சிட்டாராம். அந்தம்மா நாசமா போனாலும் பரவாயில்ல இவங்களுக்கெல்லாம் இட்லி கொடுத்தே ஆகனும்னு அவரும் போராட்ட களத்துல இறங்கிட்டாரு. அகில ஒலக இட்லி சாப்புடுவோர் சங்கம்னு ஒன்னு ஆரம்பிச்சா சரியாப்போடும்னு யாரோ வதந்தி கெளப்பிவிட ஊரெல்லாம் அதே பேச்சா ஆகிப்போச்சி. ஹோட்டல்ல சாப்பிடுற மக்கள்லாம் நாதான் அப்பவே சொன்னனேன்னு அருணாச்சலம் படம் வீகே ராமசாமியாட்டம் ஃபீல் பண்ணாங்க..
சாப்டா உங்கடைல தான் சாப்புடுவேன்னு கோஷ்டி ஒருபக்கம், நீ என்ன வேணும்ணா சொல்லு நாஞ்சொல்றதுதான் ரைட்டுனு கவுன்சிலர் ஒருபக்கம், ஏன் இட்லி சாப்டுறதுக்கு மட்டும் சங்கம் வைக்கக்கூடாதுன்னு விவாதிக்கிற டீக்கடை பெஞ்சு ஒருபக்கம்னு ஊரே அல்லோலப்பட அந்தம்மா மட்டும் நீங்கெல்லாம் என்னனாலும் பண்ணிக்கோங்கன்னு இட்லி விக்கிற வேலைய மட்டும் பாத்துட்டு இருந்துச்சாம்
இட்லிக்காரம்மாவ TCS-னோ, இட்லிய IT வேலைன்னோ, கவுன்சிலர கம்யூனிஸ்ட்கள்னோ நீங்க புரிஞ்சிக்கிட்டீங்கன்னா அரசியல் அவ்வளவு தான் மக்களே!!

Translate