Saturday, 28 February 2015

பட்ஜெட் 2015-16


1 லட்சத்துக்கும் மேல் உள்ள சொத்துக்களை விற்கும் போது பான் எண் அவசியம்

சட்டவிரோத பினாமி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்

பினாமி பரிவர்த்தனையை தடுக்க புதிய சட்டம் கொண்டு வரப்படும்

வருமான வரி விலக்கு ரூ.2.5 லட்சத்தில் தொடர்கிறது. எனினும், ஆண்டு வருமானம் ரூ.4,44,200 வரை உள்ளவர்களுக்கு வரிச் சலுகைகள்



ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்க்ளுக்கு சூப்பர்-ரிச் வரி அமல் படுத்தப்படுகிறது

தனிநபர் வருமான வரி உச்ச வரம்பில் மாற்றம் இல்லை; கார்ப்பரேட் வரி குறைப்பு

சேவை வரி 14% ஆக அதிகரிப்பு

தூய்மை இந்தியா, தூய்மை கங்கா திட்டத்துக்கு நிதியளிப்பவர்களுக்கு 100% வரி விலக்கு அளிக்கப்படும்

மருத்துவ காப்பீடு வரி சலுகைக்கான வரம்பு ரூ.15,000த்தில் இருந்து ரூ.25,000 அதிகரிப்பு

வருமான வரி கட்டுபவர்களுக்கு ரூ.4,44,200 வரிச்சலுகை கிடைக்கும்

2022க்குள் அனைவருக்கும் வீடு வழங்க நடவடிக்கை


வணிக நிறுவனங்களுக்கான வரி தற்போது 30% ஆக உள்ளது. இது அடுத்த நான்கு ஆண்டுகளில் 25% ஆக குறைக்கப்படும்

கர்நாடகாவில் ஐ.ஐ.டி. அமைக்கப்படும்

அருணாச்சலப்பிரதேசத்தில்(Centre for Film Production and Animation)திரைப்படத் தயாரிப்பு,அனிமேஷன் சார்ந்த கல்விமையம் அமைக்கப்படும்

ஜம்மு-காஷ்மீர், ஆந்திரப்பிரதேசத்தில் IIM அமைக்கப்படும்

ராணுவத்துக்கு ரூ.2.47 லட்சம் கோடி ஒதுக்கீடு

கல்வித் துறைக்கு ரூ.68,968 கோடி ஒதுக்கீடு 

நாடு முழுவதும் 80,000 உயர்நிலை பள்ளிகளை தரம் உயர்த்த திட்டம்

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் 2.50 லட்சம் கிராமங்களில் இணையதள வசதி செய்து தரப்படும்

தமிழகம், ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், அஸ்ஸாமில்  #AIIMS மருத்துவமனை நிறுவப்படும். பிஹாரில் எய்ம்ஸ்-க்கு நிகரான மையம் அமைக்கப்படும்

பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு ரூ.1 பிரிமீயம் தொகை செலுத்தி ரூ.2 லட்சம் காப்பீடு

ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் விபத்து காப்பீட்டுத் திட்டம் அறிமுகம். ஆண்டுக்கு ரூ.12 மட்டுமே பிரிமீயம்

நேரடி மானியத் திட்டத்தில் ஜன் தன் திட்டம், ஆதார் திட்டம் பயனாளர்கள் மொபைல் எண்ணுடன் ஒருங்கிணைக்கப்படும்

ஏப்ரல் 1 2016 முதல் (ஜி.எஸ்.டி.) சரக்கு, சேவை வரி அமலுக்கு கொண்டு வரப்படும்

தொழில் முனைவோருக்கு சிறு, குறு அளவில் கடன் வழங்கும் வகையில் முத்ரா வங்கிகள் உருவாக்கப்பட்டு ரூ.20,000 கோடி ஒதுக்கப்படும்



பட்ஜெட் தாக்கத்தினால் விலை உயரக்கூடிய பொருட்கள் - 

* குளிர்சாதனப் பெட்டிகள் (ஏசி)

* குளிர்பதனப் பெட்டிகள் (ஃபிரிட்ஜ்)

* முழுதும் கட்டுமானம் செய்யப்பட்ட இறக்குமதி வணிக வாகனங்கள்

* சிமெண்ட்

* குளிர்பானங்கள் மற்றும் மினரல் வாட்டர்

* பிளாஸ்டிக் பைகள்

* கேளிக்கைப் பூங்காக்கள் மற்றும் தீம் பார்க்குகள்

* மதுபானம்

* சிகரெட், பான்மசாலா

* மருத்துவச் செலவுகள்

* கூரியர் சேவை செலவுகள்

* உணவக செலவுக

* உடற்பயிற்சி நிலைய செலவுகள்

* சலவைச் செலவுகள்

* அழகு நிலைய செலவுகள்

* கேபிள் டிவி கட்டணம்

* விமானப் பயணம்

* ஏ/சி பேருந்து பயணம்

* அழகுசாதனப் பொருட்கள்

* செல்பேசி கட்டணங்கள்

* மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் சினிமா பார்க்கும் செலவு

* மருந்துகள்

* தகவல் தொழில்நுட்பப் பொருட்கள்



பட்ஜெட் தாக்கத்தினால் விலை குறையக்கூடிய பொருட்கள் - 

தோல் காலணிகள் மீதான உற்பத்தி வரி குறைக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ.1000த்திற்கும் மேல் விலையுள்ள தோல் காலணிகளுக்கு உற்பத்தி வரி 12%-லிருந்து 6% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் கொஞ்சம் கூடுதல் விலையுள்ள காலணிகளின் விலை இறங்க வாய்ப்புள்ளது.

உள்ளூரில் தயாரிக்கப்படும் மொபைல் போன்கள், எல்.இ.டி./எல்.சி.டி. பொருட்கள் (விளக்குகள் உட்பட)

சூரிய ஒளி வாட்டர் ஹீட்டர்கள்

பேஸ்மேக்கர்கள், ஆம்புலன்ஸ் சேவைகள்

டேப்லட் கணினிகள்

அகர்பத்திகள்

மைக்ரோவேவ் அடுப்புகள்

மேலும், மருத்துவக் காப்பீட்டு திட்டங்கள், பிற காப்பீட்டுத் திட்டங்கள் மீதான செலவுகள் குறைய வாய்ப்புள்ளது.

உணவுப்பொருட்களில் பிஸ்கட்கள், பழச்சாறு, பதனிடப்பட்ட உணவுப் பொருட்கள், தங்கம் ஆகியவை விலைகள் குறைய வாய்ப்புள்ளது.


மக்களுக்கு பயன் அளிக்கும்
மக்களுக்கு எந்தவித பயனும் இல்லை
மக்களுக்கு உகந்தது அல்ல

Thursday, 26 February 2015

மரியாதை





திருமண மண்டபத்துக்குள் நுழைந்தவுடன் “வாங்க சார்..” என்று வரவேற்ற வேலு வின் மகனைப் பார்த்து லேசாய் எரிச்சலடைந்தேன்.

பதினாறு வயதிருக்கும். அவன் மட்டும் தனியே நின்று வரவேற்றுக் கொண்டிருந்தான். அருகில் பெரிய மனிதர்கள் யாருமில்லை.

‘வர்றவங்கள வாசல்ல நின்னு வரவேற்கணும்கிற பண்பு தெரியாம என்ன விசேஷம் நடத்துறாங்க... சின்ன பையனை நிறுத்தியிருக்கிறாங்களே’ என்று நினைத்துக் கொண்டேன்.

“அப்பா எங்கேப்பா..?’’ வேலுவின் மகன் சுரேஷிடம் கேட்டேன்.

“சாப்பாட்டு கூடத்துல நிக்கிறாங்க சார்’’ என்றான்.

மேடையில் இருந்த புதுமணத் தம்பதியருக்கு வாழ்த்துச் சொல்லிவிட்டு வேலுவைத் தேடி சாப்பாட்டு கூடத்துக்கு போனேன். என்னைப் பார்த்ததும் ஓடோடி வந்த வேலு, கையைப் பிடித்து அழைத்துப் போய் உபசரித்தார். சாப்பிட்டு முடிந்ததும் அவரிடம் கேட்டேன் “நீங்க வாசல்ல நின்னு வரவேற்க வேண்டாமா?”

“இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு வீட்டுக்கு வர்றவங்கள எப்படி வரவேற்கிறது; எப்படி உபசரிக்கிறதுன்னு தெரிய மாட்டேங்குது. என் மகன் அப்படி இருக்கக் கூடாது. வந்தவங்கள வாங்கன்னு கூப்பிட்டு உபசரிக்கிற பண்பாடு அவனுக்கு வரணும். அதனாலதான் அவன அங்க நிறுத்தி வைச்சிருக்கேன். எனக்கு அப்புறம் எனது உறவுகளையும் நண்பர்களையும் போற்ற வேண்டியது அவன்தானே சார். அதனால தான் கல்யாண பத்திரிகை கொடுக்கப் போறப்பவே அவனயும் எல்லா இடத்துக்கும் கூட்டிட்டுப் போனேன்.

கல்யாணத்துக்கு வந்தவங்க எல்லாரும் நிச்சயம் என்னைய பாக்காம போக மாட்டாங்க. அதே மாதிரி அவனும் எல்லாரையும் நிச்சயம் பாக்கணும். அதனால தான் அவன அங்க நிறுத்திட்டு நான் இங்க நிக்கிறேன்” என்று வேலு சொல்ல.. அவரிடமிருந்து புதிய விஷயம் ஒன்றை நான் கற்றுக் கொண்டேன்.

ரயில்வே பட்ஜெட் 2015


புதிய ரயில்கள் இல்லை; கட்டண அதிகரிப்பு இல்லை | தூய்மைக்கு முக்கியத்துவம் |

ரயில்வே உதவி எண் '138', அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் இயக்கப்படும்

பயணிகள் பாதுகாப்பு தொடர்பான புகார்களை பதிவு செய்ய கட்டணமில்லா சேவை எண் '182' அறிமுகப்படுத்தப்படுகிறது

முன்பதிவு செய்யாத பயணிகள் நிலையத்துக்குள் நுழைந்த 5 நிமிடங்களுக்குள் டிக்கெட் பெறும் வகையில், 'ஆபரேஷன் 5- மினிட்'

இனிமேல் 60 நாட்களுக்கு பதிலாக 120 நாட்களுக்கு முன்னதாகவே ரயில் டிக்கெட் முன் பதிவு செய்யலாம் 

அனைத்து ரயில்களிலும் பொது வகுப்புப் பெட்டிகளிலும் மொபைல் சார்ஜர் வசதி செய்யப்படும் 

பயணிகள் மேல் அடுக்கு படுக்கையில் சுலபமாக ஏற வசதியாக ரயில் பெட்டிகளில் மடக்கு ஏணி வழங்கப்படும் 

நாடு முழுவதும் 400 ரயில் நிலையங்களில் வை-ஃபை சேவை வழங்கப்படும்

சரக்கு ரயில் கட்டணமும் உயர்த்தப்படவில்லை 

ரயில் புறப்படும், வரும் நேரம் குறித்து பயணிகள் மொபைல் போனுக்கு குறுந்தகவல் அனுப்பப்படும் 

முன் பதிவு செய்யும் பயணிகள் #IRCTC இணையதளத்தில் தங்கள் உணவுக்கான ஆர்டரையும் பதிவு செய்யலாம்

புறநகர் ரயில்களில் ஏ.சி. பெட்டிகள் அமைக்கப்படும் 

ரயில்வே கார்டுகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்படும்

விவசாயிகளுக்காக கிசான் யாத்ரா ரயில் சேவை துவக்கப்படும் 

வயது முதிர்ந்தோர், ஊனமுற்றோர் வசதிக்காக வீல் சேர்களை ஆன்லைனில் புக் செய்து கொள்ளும் வசதி

Wednesday, 25 February 2015

மைதா இல்லா பரோட்டா


தேவையான பொருட்கள்



கோதுமை மாவு – ஒன்றரை கப் அல்லது இரண்டு கப் 
நெய் – ஒரு மேஜைக் கரண்டி 
பால் – ஒரு மேஜைக் கரண்டி 
உப்பு – தேவையான அளவு 
தண்ணீர் – தேவையான அளவு 


செய்முறை: 

கோதுமை மாவுடன் முதலில் நெய், உப்பு சேர்த்து நன்றாகப் பிசையவும். பிறகு பால், தேவையான அளவு தண்ணீர்விட்டு சிறிது தளரப் பிசைந்துகொள்ளவும். அந்த மாவினை நன்றாக அடித்து மீண்டும் பிசைந்துவிட்டு, மாவினை ஈரத் துணியால் அரை மணி நேரம் மூடி ஊறவிடவும். 

ஊறிய மாவினை சிறிய சப்பாத்திகளாக 10 அல்லது 12 முறை மடித்து மடித்து மீண்டும் சப்பாத்தியாகத் திரட்டவும். இதை சூடான தோசைக்கல்லில் போட்டு நெய்விட்டு வாட்டி எடுத்தால், லேயர் லேயராக சூப்பர் பால் பரோட்டா ரெடி. 



இதை அடித்துப் பிசைந்து மடித்துத் திரட்டுவதில்தான் இதன் சாஃப்ட் ரகசியம் உள்ளது.

Tuesday, 24 February 2015

சோழநாட்டு ஊர்கள்





பழைய பெயர்


புதிய பெயர்
வெண்ணிப் பறந்தலை
கோவில் வெண்ணி
நொச்சிநியமம்
நொச்சியம்
பெரும் புலியூர்
பெரம்பலூர்
திருக்கற்குடி
உய்யக் கொண்டான்
நங்கைவரம்
நங்கவரம்
குழித்தலை
குளித்தலை
திருவளர்குடி
அல்லூர்
திருக்கண்ணப்புரம்
கிருஷ்ணாபுரம்
புளியங்காடு
திண்டிவனம்
மருந்திறைக் கோவில்
வைத்தீஸ்வரன் கோயில்
திருவேரகம்
சுவாமிமலை
பெரும்பற்றபுலியூர்
சிதம்பரம்
சுவேதாரண்யம்
திருவெண்காடு
திருப்புள்ளையூர்
திருநாகேஸ்வரம்

மொழி அறிவோம்!




  • சாம்பார், தலித், ரவா கேசரி, கில்லாடி ஆகிய சொற்கள் அனைத்தும் மராத்தி மொழிச் சொற்க்கலாக்கும்.




  • கடுதாசி என்ற சொல் போர்ச்சுகீசியச் சொல்.




  • கக்கூஸ் என்ற சொல் டச்சு மொழிச் சொல்.




  • வக்கீல், அமீனா, ஜப்தி, கிஸ்தி, ஜக்தி, சன்னல் உருது மொழிச்சொல்.




  • ஆயி என்ற தமிழ்ச்சொல் மராத்திக்குப் போயிருக்கிறது.




  • அஸால்ட் (ASSAULT) என்ற ஆங்கில வார்த்தை 'அலட்சியம்' என்ற பொருளில் தமிழுக்கு வந்துள்ளது.

வடிவம்



வல்லாரை கீரை மூளை வடிவத்தைப் போலிருக்கும்

 


காலிஃப்ளவர் மூளையைப் போலிருக்கும்

 

அக்ரூட் பருப்பு வளைந்து நெளிந்து ஏறக்குறைய மூளை போலிருக்கும்



Thursday, 19 February 2015

உங்கள் கணினியை வேகமாக இயங்க வைக்க ஐந்து எளிய வழிகள்!!



உங்கள் கணினியின் திறன் எப்படியிருந்தாலும் அதன் செயல்பாட்டை மேம்படுத்த பிபிசி தமிழோசை ஐந்து எளிய வழிகளை பரிந்துரைக்கிறது.

" ஆனா இப்போதானே வாங்கினேன்" என்று நீங்கள் அலுத்துக்கொள்ளலாம். உண்மையில் அதை ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, கணினி கடைகள் பழைய கணினிகளைக் கொடுத்துவிட்டு புதிய கணினிகளை தள்ளுபடி விலையில் விற்றபோது ( அல்லது அது போன்ற ஒரு சந்தர்ப்பத்தில்) அதை நீங்கள் வாங்கியிருப்பீர்கள்.

" ஏன் இந்த கணினியின் பல்வேறு ப்ரொக்ரேம்களைத் திறக்க இவ்வளவு நேரமாகிறது " என்று நீங்கள் உங்கள் தலைமுடியைப் பிய்த்துக்கொள்ளுமளவுக்கு அலுப்புடன் உங்களையே கேட்டுக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் பல நேரிட்டிருக்கும்.



நீங்கள் தகவல் தொழில்நுட்ப வல்லுநர் இல்லை, தினசரி சட்டையை மாற்றுவது போல கணினியை புதிது புதிதாக மாற்றிக்கொண்டிருக்க முடியாது என்ற நிலையில், உங்கள் கணினியைப் பராமரிக்க சில எளிய வழிமுறைகள் இதோ. கணினிகளைப் பற்றிய அறிவு உங்களுக்கு எந்த அளவு இருந்தாலும் பிரச்சனை இல்லை.

இதன் அர்த்தம் என்ன என்று கூட உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் இது கணினியைப் பராமரிப்பதற்கு எந்த அளவுக்கு முக்கியம் என்பதை அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.

கணினியில் உள்ள கோப்புகளுக்கிடையே இருக்கும் தகவல்களை உங்கள் கணினி படித்து, பயணம் செய்யும் வேகத்தை இந்த "தகவல் விரிசல்களை ஒட்டும்" வேலை விரைவுபடுத்துகிறது. தகவல்களை ஒழுங்காக அடுக்குவதன் மூலம் அதை கணினி செய்கிறது.

புதிதாக வாங்கிய நவீன வன் தட்டுகள் கூட காலம் செல்லச்செல்ல மந்தமடைகின்றன. இதற்குக் காரணம் கோப்புகள் கணினியில் சேமிக்கப்படும் முறைதான்.



இந்த வன் தட்டு புதிய கோப்புகளை எழுதவும், கழிக்கவும் செய்யும்போது, அந்த கோப்புகள் துண்டுதுண்டாக, வன் தட்டின் வெவ்வேறு இடங்களில் சேமிக்கப்படுகின்றன. எல்லா தரவுகளும் ஒன்றாக வைக்கப்படுவதில்லை.இது கோப்புகளை நாம் அணுகுவதை மேலும் சிக்கலாக்குகிறது.

எனவே உங்கள் கணினியின் வன் தட்டெங்கும் தகவல்கள் கொத்துக் கொத்தாகப் பரவிக் கிடப்பதை ஒழுங்கு செய்வதன் மூலம், கணினியில் காலியாக இருக்கும் இடத்தை ( கணினியில் நினைவுக் கொள்திறன்- memory capacity என்ற அளவில்) உங்களால் அதிகரித்துக் கொள்ள முடியும். மேலும், தகவலை அணுகுவதையும் இது எளிதாக்கும்.

இதைச் செய்வது ஒன்றும் அவ்வளவு கடினமானதல்ல. இதைச் செய்யவென்றே உருவாக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்கள் இருக்கின்றன -- ஸ்மார்ட் டிப்ராக் 3 ( மைக்ரோசாப்ட் விண்டோஸ் 8.1 கணினிகளுக்கு) மற்றும் ஐடிப்ராக் ( ஆப்பிள் ஓ.எஸ் எக்ஸ் கணினிகளுக்கு)

2. தேவையற்ற கோப்புகளை அழித்தல்

இப்போதெல்லாம் 200 GBக்குக் குறைவான அளவுள்ள கணினியின் வன் தட்டை எளிதில் நிரப்பி விட முடியும். ஒரு வன் தட்டு நிரம்ப நிரம்ப, அந்தக் கணினி எந்த ஒரு வேலையையும் செய்து முடிக்கக் கஷ்டப்படும்.

உங்கள் கணினியில் ஒரு வேளை ஏராளமான , நீங்கள் பயன்படுத்தாத பழைய கோப்புகள் இருக்கலாம். அவை உங்கள் கணினியில் இடத்தை ஆக்ரமித்துக் கொண்டிருக்கும்.

எது அது மாதிரி பழைய தேவையற்ற கோப்பு என்பதை அறிந்து கொள்வது , புதிய செயலி (app) ஒன்றை தரவிறக்கம் செய்வது போல எளிதான வேலைதான்.

சந்தையில் கணினிகளுக்காக ( பி.சி மற்றும் மேக் கணினி ஆகிய இரண்டுக்குமே) பல்வேறு ப்ரோக்ராம்கள் இருக்கின்றன. பி.சி கணினிகளுக்கு ஸ்பேஸ் ஸ்னிஃப்ஃபர் (SpaceSniffer) மற்றும் விண்டிர்ஸ்டாட் (WinDirStat) போன்ற ப்ரொக்ராம்களை வைத்து உங்கள் வன் தட்டில் எந்த கோப்புகள் அதிக இடத்தை ஆக்ரமித்துக்கொண்டிருக்கின்றன என்பதைக் கண்டறிய முடியும்

உங்கள் கணினி ஓஎஸ் எக்ஸ் உலவியில் இயங்கும் மேக்கிண்டோஷ் கணினியாக இருந்தால், இதைச் செய்வது இன்னும் எளிது. ஃபைண்டர் ( Finder) என்ற தேடல் வசதியைப் பயன்படுத்தி இதைச் செய்யலாம். இது நீங்கள் உங்கள் மேக் கணினியில் எல்லாக் கோப்புகளையும் நேரடியாக பார்த்து அழிக்க உதவும். செயலிகள், நிரல்கள், வன் தட்டுகள், கோப்புகள், டிவிடி ட்ரைவ்கள் போன்றவை உட்பட . நீங்கள் உங்கள் கோப்புகள் மற்றும் ஃபோல்டர்களை இங்கிருந்தே ஒழுங்குபடுத்திக்கொள்ளலாம். மேக் கம்ப்யூட்டரில் எங்கு வேண்டுமானாலும் தேடிப்பார்த்து உங்களுக்கு வேண்டாத எந்த விஷயத்தையும் அழித்துவிடலாம்.



3.தானே தொடங்க ஆரம்பிக்கும் நிரல்களைத் தவிருங்கள்

இது உங்கள் கணினியை வேகப்படுத்தும் மிக வேகமான வழிகளில் ஒன்று. குறிப்பாக, கணினியை தொடங்குவதை துரிதப்படுத்துவதற்கு.

உங்கள் கணினியில் அது தொடங்கும்போதே இயங்கத் தொடங்கும் நிரல்கள் என்ன என்பதைப் பார்த்து, அது அதே நேரத்தில் செயல்படத் தொடங்கவேண்டியதில்லை என்று நீங்கள் நினைத்தால், அதைத் தடுப்பது சாத்தியம்தான்.

ஒ.எஸ்.எக்ஸ் , அதன் ஆக்டிவிட்டி மானிட்டர் (Activity Monitor) மூலமும், விண்டோஸ் அதன் "டாஸ்க் மேனேஜர்" மூலமும் இதை செய்ய அனுமதிக்கின்றன. உங்களிடம் மேக் கணினி இருந்தால், "சிஸ்டம் ப்ரெஃப்ரென்ஸஸ்"ஐப் பார்த்து, பின்னர் அதிலிருந்து "யூசர்ஸ் அண்ட் குரூப்ஸ்" என்ற வழியைத் தேர்ந்தெடுத்து, பின்னர் நீங்கள் நிறுத்த விரும்பும் நிரல்களை தேர்ந்தெடுக்கலாம்.

உங்களிடம் பி.சி கணினி இருந்தால், இலவசமாகக் கிடைக்கும் "ஆட்டோரன்ஸ்" என்ற கருவையைப் பயன்படுத்தலாம். இது தானாக இயங்கத் தொடங்கும் நிரல்களைக் கட்டுப்படுத்துகிறது.

4. வைரஸ்கள் மற்றும் கெட்ட நிரல்களை அழித்தல்

வைரஸ்களுக்கு எதிரான மென்பொருள் இல்லாமலேயே கணினியை பராமரிக்க முடியும் என்று சிலர் வாதிடுகிறார்கள். இந்த வைரஸ்களுக்கு எதிரான மென்பொருட்கள் கணினி நினைவு மற்றும் அதன் செயல்படு திறனை அதிகம் பயன்படுத்துகிறது என்றும் , குறிப்பாக பழசாகிவிட்ட கணினிகளில் இந்தப் பிரச்சனை இருக்கிறது என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.

ஆனால் வல்லுநர்களாக இல்லாதவர்களுக்கு, பிரச்சனை ஏற்பட்ட பின் வருந்துவதைக் காட்டிலும் முன்னரே பாதுகாப்பாக இருப்பதே சாலச் சிறந்தது. எனவே வைரஸ்களுக்கு எதிரான மென்பொருளை வைத்துக்கொள்வது நல்லது.



உங்கள் கணினிக்கேற்ற வைரஸ் எதிர்ப்பு மென்பொருளை நீங்கள் தேர்ந்தெடுக்கவேண்டும். மைக்ரோசாப்ட்டின் செக்யூரிட்டி எசென்ஷியல்ஸ், பாண்டா க்லவுட் வொய் அவிரா போன்றவைகளை வைத்துக்கொள்ள குறைந்த அளவு கணினி நினைவாற்றலும் , செயல்படு சக்தியும்தான் தேவைப்படும். பி.சி கணினிகளுக்கு இது போன்ற பொருத்தமான மென்பொருட்கள் ஏராளமாக இருக்கின்றன.

மேக் கணினிகள் வைரஸ்களால் பாதிக்கப்படுவதில்லை என்ற புனைவு வெகுவாகப் பரவியிருந்தாலும், ஆப்பிள் கணினிகள் இயல்பாகச் செயல்படுவதைக் காட்டிலும் மெதுவாக இயங்கினால், நீங்கள் சந்தேகப்படவேண்டும்.

அவாஸ்ட் (Avast) அல்லது சோஃபோஸ் (Sophos ) வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை நீங்கள் கணினியில் வைத்துக்கொள்ளவேண்டும் . இவை இலவசமாகக் கிடைக்கும் மென்பொருட்கள்.

5. இணையச் செயலிகளைப் பயன்படுத்துங்கள்

கூகிள் டாக்குமெண்ட்ஸ்( Google Docs) , அடோபி பஸ்வோர்ட்( Adobe’s Buzzword) , ஸோஹோ (Zoho) அல்லது பீப்பெல் ( Peepel) போன்ற செயலிகள் இருக்கும் போது மைக்ரோசாப்டின் ஆபிஸ் நிரலை ஏன் கணினியில் நிறுவ வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.

உங்கள் உலவியில் இயங்கக் கூடிய இணையச் செயலிகளால் ஏறக்குறைய எல்லா வேலைகளையும் செய்ய முடியும்.

அவைகளுக்கு இரண்டு அனுகூலங்கள் இருக்கின்றன. ஒன்று அவைகளை இயக்குவது மெலிதான வேலை, இரண்டு, அவை வன் தட்டை அதிகம் ஆக்ரமிப்பதில்லை.



இந்த ஐந்து வழிமுறைகளை நீங்கள் முயன்று பாருங்கள். அப்படியும் உங்கள் கணினி விரைவாக இயங்கத் தொடங்கவில்லையெனில், அதன் பிறகு ஒருக்கால் நீங்கள் கணினி தொழில்நுட்ப வல்லுநர் ஒருவரை அழைப்பது பற்றியோ அல்லது புதிய கணினி வாங்குவது பற்றியோ முடிவு செய்யலாம் !

Wednesday, 18 February 2015

எந்த கீரை சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்?



கொத்தமல்லி கீரை-----------மூளை, மூக்கு சம்பந்தமான சகல வியாதிகளும் குணமாகும். பசியைத் தூண்டும்.



அரைக்கீரை------------ நரம்பு தளர்ச்சியை போக்கும். தாய்ப்பால் பெருகும்.



வள்ளாரை---------- நினைவாற்றலை அதிகமாகும். யானைக்கால் நோய் குணமாகும்.



அகத்திக்கீரை------------- மலச்சிக்கலைப் போக்கும்.




முளைக்கீரை------------ பல் சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும்.




பொன்னாங்கன்னி-----------இரத்தம் விருத்தியாகும்.




தர்ப்பைப் புல்: ---------இரத்தம் சுத்தமாகும். கஷாயம் வைத்து பருகவும்.




தூதுவளை:----------- மூச்சு வாங்குதல் குணமாகும்.




முருங்கை கீரை: -------பொறியல் செய்து நெய்விட்டு 48 நாட்கள் சாட்பபிட தாது விருத்தியாகும்.




சிறுகீரை: ----------நீர்கோவை குணமாகும்.




வெந்தியக்கீரை--------: இருமல் குணமாகும்




புதினா கீரை:------ மசக்கை மயக்கம், வாந்தி குணமாகும்.




அறுகீரை:------- சளிக்காய்ச்சல், டைபாய்டு குணமாகும்.





தினம் ஒரு வெற்றிலை மற்றும் பசலை கீரை உண்டு வந்தால் தாய்ப்பால் நன்றாக சுரக்கும்.


காதல் Vs திருமணம்


ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும்உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.

அதற்கு அந்த ஞானி, "அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப்போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது." என்றார்.

கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, "எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? " என்று கேட்டார்.

சீடன் சொன்னான், "குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள்தென்பட்டன. 


அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது.

"புன்முறுவலோடு ஞானி சொன்னார்,"இது தான் காதல்!".பின்னர் ஞானி, "சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது.

"சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார், "இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா? 

"சீடன் சொன்னான், "இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன். 


நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை".

இப்போது ஞானி சொன்னார், "இது தான் திருமணம்!".

Translate