வடலூரில் சத்திய ஞான சபையை நிறுவி பசிப் பிணி
போக்கிய வள்ளலார் இராமலிங்க சுவாமிகளின் பாடல்கள் அச்சிடப்பட்டு ‘அருட்பா’ என
வெளியிடப்பட்டது. அப்போது யாழ்ப்பாணத்துப்
பெரும்புலவர் ஆறுமுக நாவலரும், மற்றும் சிலரும் வள்ளலார் மீது வழக்கு தொடர்ந்தனர்.
நாயன்மார்களின் தேவாரம், திருவாசகம் ஆகியவையே ‘அருட்பா’
என சொல்லத் தகுந்தவை என்று வள்ளலார் எழுதிய பாடல்களை ‘மருட்பா’ என்றே அழைத்தல்
தகும் எனக் கூறினார்.
வழக்கும் விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்தில் ஆஜராகும்படி வள்ளலாருக்குச்
செய்தி அனுப்பப்பட்டது. வள்ளலார் வழக்கில்
ஆஜராக நீதி மன்றத்திற்க்குள் நிழைந்தார்.
அப்போது வள்ளலார் மீது வழக்கு தொடர்ந்த ஆறுமுக
நாவலரும், மற்றவர்களும் எழுந்து நின்று அடிகளாருக்கு மரியாதை செலுத்தினர்.
நீதிபதி, ஆறுமுக நாவலரை நோக்கி, “எதிரியாகிய
வள்ளலாரை எழுந்து நின்று வணங்கியது ஏன்?” என்று வினவினார்.
அதற்கு ஆறுமுக நாவலர், “அவருடைய பாடல்கள் தான்
அருட்பா இல்லையே தவிர, அவர் உயர்ந்த சான்றோர், ஒழுக்கத்தின் திருவுருவம். எனவேதான் நான் அவருக்கு மரியாதை செலுத்தும்
நிமித்தம் எழுந்து நின்றேன்” என மனமுருகிக் கூறினார்.
உடனே நீதிபதி, “நீரே அவரை சான்றோர் என்றும்,
ஓழுக்கத்தின் திருவுருவம் என்றும் கூறுகிறீர்.
எனவே அவர் எழுதிய பாடல்களும் ‘அருட்பா’ என்பது சரிதான். எனவே வழக்கை தள்ளுபடி செய்கிறேன்.” என்றார்.