Monday, 29 December 2014

கொஞ்சம் சிரிங்க பாஸ்!

1. ஆண்களுக்கு - உங்க மனைவியை ஒரு அறையிலும், உங்க வீட்டு நாயை ஒரு அறையிலும் 2-3 மணி நேரம் பூட்டி வையுங்கள்...பின்பு கதவை திறந்ததும் யார் உங்களைப் பார்த்து சந்தோஷப்படுறாங்க, யார் கடிக்கிறாங்கனு தெரியும்!


2. பெண்களுக்கு - உங்க கணவனை ஒரு அறையிலும், உங்க வீட்டு நாயை ஒரு அறையிலும் 2-3 மணி நேரம் பூட்டி வையுங்கள்...பின்பு கதவை திறந்தால் நாய் சந்தோஷத்தில் ஓடி வரும், ஆனா உங்க கணவர், நிம்மதியாக உறங்கிக்கொண்டிருப்பார்!


3. ...வாழ்க்கையின் மிக முக்கியமான ஊக்கம் - உங்க மனைவியின் படத்தை ஸ்க்ரீன் சேவராக வையுங்கள். உங்களுக்கு பிரச்சனை வரும்போதெல்லாம் அதை கூர்ந்து பார்த்து இதை கூறுங்கள்...."இதை நான் கையாளும்போது, என்னால் எதையும் கையாள முடியும்..." மனதுக்கு புது உற்சாகம் கிடைக்கும்!




4. ...மனைவியின் மீது கணவன் கவனம் செலுத்த அவள் சோகமாக இருந்தால் போதும்; கணவன் மீது மனைவி கவனம் செலுத்த அவன் சந்தோஷமாக இருந்தால் போதும்!

தமிழன்டா!


ஒரு அயல் நாட்டில்... ஒரு ரஷ்யன்.. ஒரு சீனன்.. ஒரு தமிழன்..மூவரும் 
மது அருந்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனர்...!

அவர்களுக்கு 50 சவுக்கடிகள்.. தண்டனையாக அளிக்க உத்தரவிடப்பட்டது..!
ஆனால்.. அதற்கு முன்.. அவர்கள் வேண்டுவது 'இரண்டு' செய்யப்படும் என சொல்லப்பட்டது..!



முதலில்.. ரஷ்யன்..!!
"எனக்கு.. 50 சவுக்கடிகளில் பாதியாக
குறைத்து.. 25 ஆக கொடுங்கள்..!" என்றான்..!
ஒப்புக்கொள்ளப்பட்டது..!
இரண்டாவது என்ன..? என்று கேட்டனர்..!
"என் முதுகில்.. ஒரு பெரிய தலையணை..ஒன்றை கட்டுங்கள்..!"
என்றான்..! அவ்வாறே செய்யப்பட்டது..!!
பத்து சவுக்கடியில்.. தலையணை கிழிந்து அவன்.. பலமான காயத்துக்கு..ஆளானான்..!

அடுத்து... சீனன்..!!
"எனக்கும் 50 சவுக்கடியில்.. பாதியாக குறைத்து 25 அடி கொடுங்கள்" என்றான்..!
ஒப்புக்கொள்ளப்பட்டது..!! 
இரண்டாவது...
"என் முதுகில்..இரண்டு தலையணைகளை கட்டுங்கள்..!"
என்றான்..!
அவ்வாறே செய்யப்பட்டது..!
15 சவுக்கடிகளில்.. தலையணைகள் கிழிந்து அவன்.. முதுகு பிளந்தது..!!

அடுத்து.. தமிழன்..!
அமைதியாக சொன்னான்..
"எனக்கு 50 சவுக்கடியை... 75 ஆக உயர்த்துங்கள்..!" என்றான்..!
அங்கிருந்த அனைவரும்.. அதிர்ச்சியுடன்.. அவனை பார்த்தனர்.! 
ஒப்புக்கொள்ளப்பட்டது..!
இரண்டாவது என்ன..? என்று கேட்கப்பட்டது..!!
சொன்னான்....
"எனக்கு தண்டனை கொடுத்த.. நீதிபதியை.. என் முதுகில் தூக்கி கட்டுங்கள்..! என்றான்..!!!

Friday, 19 December 2014

Cycle Mechanic Develops Helicopter


BALASORE: He does not know much about aero-dynamics or the Bernouilli principle. He, however, claims to have developed an helicopter that can fly at a speed of at least 50 km per hour and at a height of one km above the surface.

Sk Mahasin (28) of Khaparapada area in Balasore town has prepared the one-seater helicopter by using the engine of a Rajdoot motorcycle, iron bars, poles, rods, plates, chains, pinions and resin sheets.

What sets him apart from others is that he has no knowledge and education about the mechanics of a helicopter.

It took seven years for Mahasin, a cycle mechanic by profession, to complete his dream project. He has spent around Rs 2 lakh on the project.

“The venture started some time in 2004 when I was working as a mechanic in a cycle shop. It was my childhood dream to fly in the sky which led me to invent this,” he said.

Mahasin said unlike other helicopters, this copter would take off after running nearly half-a-km on the runway. “Pinions and gear help the engine to take off. It has four wings which help it sustain in the air. They are shaped in such a way that the air underneath gets slower than the air above the wing. This generates a bigger pressure on the lower part of the wing than on the upper part,” he said.

On his initial days of struggle, he said, his thoughts actually took shape after he purchased a Rajdoot motorcycle at Rs 8,000. After six months of ride, he dismantled it and used its engine to make the helicopter.



Mahsin started the project with his savings of Rs 50,000 and later, borrowed Rs 1.2 lakh from local micro-finance companies to complete it.

The journey so far has not been a bed of roses for him. His parents - Sk Hasin and Khatiza Bibi - were never sure of his endeavour. His friends discouraged him as well. “I was disappointed initially but when the project started taking shape, I never looked back,” he said.

Mahasin is readying to go for a test ride near a sea beach here on Monday and has sought permission from the district administration.

“Earlier, I tested the helicopter and it flew at a height of six feet. Its mileage is about 50 km. I will go for a complete flight and gauge its performance once I get the clearance from the administration,” he added.

Sunday, 7 December 2014

இது "நல்ல' வாழைப்பழமல்ல!

முன்பெல்லாம் டாக்டர்கள் தினமும் ஒரு வாழைப்பழமாவது சாப்பிடுங்கள், உடம்புக்கு ரொம்ப நல்லது என்பார்கள். ஆனால் தற்போது மரபணு மாற்று பெரிய மஞ்சள்  வாழைப்பழத்தை சாப்பிடவே வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள்.

காரணம் தற்போது பெரும்பாலானோர் உடலில் - தொண்டையில் அலர்ஜி, சைனஸ், தும்மல், வயிற்றுக் கோளாறு, வயிற்றுவலி, சிறுநீரகக் கற்கள், அடிக்கடி தலைவலி, ஃபுட் பாய்சன்... என்று கடுமையாக அவதிப்படுகிறார்கள். இவர்களை நோயாளிகளாக மாற்றியது இந்த மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழங்கள்தான்.

இயற்கையான வாழைப்பழம் பழுத்தால் இரண்டொரு நாளில் அழுகிவிடும். இயற்கையான மஞ்சள், பச்சை நாடன், ரஸ்தாளி, மலைப்பழம், தேன்கதளி, நாட்டுப்பழம், நாட்டுச்சக்கைப்பழம், கற்பூரவள்ளி, ஏலக்கி ஆகிய வாழைப்பழங்கள் மணமாகவும், நல்ல ருசியாகவும் இருக்கும். இந்த பழங்கள் உடம்புக்கு சத்தாகவும் , மற்ற உணவை செரிமானமாக்கவும் பயன்படும். மலச்சிக்கலால் அவதிப்படுவோரும் தினமும் இரவில் வாழைப்பழம் சாப்பிடுவார்கள்.

இந்த இயற்கையான வாழை ரகங்களில் நோய் தொற்று ஏற்படும். இவற்றை பூச்சுக் கொல்லிகளைப் பயன்படுத்தி நோயை கட்டுப்படுத்துவார்கள். ஆனால் பூச்சிக் கொல்லிகளை அழிப்பதற்கு பதிலாக, பூச்சிகளை கொல்லும் விஷச்சத்தை வாழை மரத்தின் மரபணுவில் செலுத்தி அமெரிக்க விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர். இதைத்தான் நாம் பி.டி.வாழை என்று அழைக்கிறோம்.


"கேவின்டிஷ்' என்ற பெயருடன் இந்த மரபணு மாற்று வாழைப்பழம் நம்மூரில் திருட்டுத்தனமாக விற்கப்படுகிறது.  இப்பழங்களில் விஷத்தன்மை மிக அதிகமாக இருப்பதால் அமெரிக்காவில் இந்த வாழைப்பழத்தை பயிரிடவோ, விற்கவோ தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்த கேவின் டிஷ் மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழம் பெங்களூரு வாழைப்பழம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் விற்கப்படுகிறது. மாதக்கணக்கில்  வைத்திருந்து விற்றாலும் கெட்டுப்போகாது என்ற ஆசை வார்த்தை கூறி வியாபாரிகள் இந்த மரபணுமாற்று கேவின்டிஷ் வாழைப்பழத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த வாழைப்பழம்  ருசியாக இருக்காது. அதனால் மதுரை, சேலம், கோவை, நெல்லை போன்ற மற்ற நகரங்களில் இதனை யாரும் விரும்புவதில்லை.


செயற்கையாக மலட்டுத்தன்மை ஆக்கப்பட்ட இந்த வகையான மரபணு மாற்று  காய்கறிகள், பழங்கள்   தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மலட்டுத்தன்மை ஏற்படுவதோடு, கேன்சர், செரிமான கோளாறு, தோல்நோய், சிறுநீரக நோய்கள், அலர்ஜி போன்றவை உண்டாக்கும்.

WHY TO VISIT TEMPLES ???


There are thousands of temples all over India in different size, shape and locations but not all of them are considered to be built the Vedic way. Generally, a temple should be located at a place where earth's magnetic wave path passes through densely. It can be in the outskirts of a town/village or city, or in middle of the dwelling place, or on a hilltop. The essence of visiting a temple is discussed here.
Now, these temples are located strategically at a place where the positive energy is abundantly available from the magnetic and electric wave distributions of north/south pole thrust. The main idol is placed in the core center of the temple, known as "*Garbhagriha*" or *Moolasthanam*. In fact, the temple structure is built after the idol has been placed. This *Moolasthanam* is where earth’s magnetic waves are found to be maximum. We know that there are some copper plates, inscribed with Vedic scripts, buried beneath the Main Idol. What are they really? No, they are not God’s / priests’ flash cards when they forget the *shlokas*. The copper plate absorbs earth’s magnetic waves and radiates it to the surroundings. Thus a person regularly visiting a temple and walking clockwise around the Main Idol receives the beamed magnetic waves and his body absorbs it. This is a very slow process and a regular visit will let him absorb more of this positive energy. Scientifically, it is the positive energy that we all require to have a healthy life.


Further, the Sanctum is closed on three sides. This increases the effect of all energies. The lamp that is lit radiates heat energy and also provides light inside the sanctum to the priests or *poojaris* performing the pooja. The ringing of the bells and the chanting of prayers takes a worshipper into trance, thus not letting his mind waver. When done in groups, this helps people forget personal problems for a while and relieve their stress. The fragrance from the flowers, the burning of camphor give out the chemical energy further aiding in a different good aura. The effect of all these energies is supplemented by the positive energy from the idol, the copper plates and utensils in the *Moolasthan*am / *Garbagraham*. *Theertham*, the “holy” water used during the pooja to wash the idol is not plain water cleaning the dust off an idol. It is a concoction of Cardamom,*Karpura* (Benzoin), zaffron / saffron, *Tulsi* (Holy Basil), Clove, etc...Washing the idol is to charge the water with the magnetic radiations thus increasing its medicinal values. Three spoons of this holy water is distributed to devotees. 

Again, this water is mainly a source of magneto-therapy. Besides, the clove essence protects one from tooth decay, the saffron & *Tulsi* leafs protects one from common cold and cough, cardamom and *Pachha Karpuram* (benzoin), act as mouth fresheners. It is proved that *Theertham* is a very good blood purifier, as it is highly energized. Hence it is given as *prasadam* to the devotees. This way, one can claim to remain healthy by regularly visiting the Temples. This is why our elders used to suggest us to offer prayers at the temple so that you will be cured of many ailments. They were not always superstitious. Yes, in a few cases they did go overboard when due to ignorance they hoped many serious diseases could be cured at temples by deities. When people go to a temple for the *Deepaaraadhana*, and when the doors open up, the positive energy gushes out onto the persons who are there. 
The water that is sprinkled onto the assemblages passes on the energy to all. This also explains why men are not allowed to wear shirts at a few temples and women are requested to wear more ornaments during temple visits. It is through these jewels (metal) that positive energy is absorbed by the women. Also, it is a practice to leave newly purchased jewels at an idol’s feet and then wear them with the idol’s blessings. This act is now justified after reading this article. This act of “seeking divine blessings” before using any new article, like books or pens or automobiles may have stemmed from this through mere observation.

Energy lost in a day’s work is regained through a temple visit and one is refreshed slightly. The positive energy that is spread out in the entire temple and especially around where the main idol is placed, are simply absorbed by one's body and mind. Did you know, every Vaishnava(Vishnu devotees), “must” visit a Vishnu temple twice every day in their location. Our practices are NOT some hard and fast rules framed by 1 man and his followers or God’s words in somebody’s dreams. All the rituals, all the practices are, in reality, well researched, studied and scientifically backed thesis which form the ways of nature to lead a good healthy life.
The scientific and research part of the practices are well camouflaged as “elder’s instructions” or “granny’s teaching’s” which should be obeyed as a mark of respect so as to once again, avoid stress to the mediocre brains.

Friday, 5 December 2014

வாந்தி நல்லதா கெட்டதா?




வாந்தி என்பது ஒரு தனிப்பட்ட நோயல்ல. நோய் வருவதற்கான ஓர் அபாய அறிவிப்பு. குறிப்பாக, வயிறு சரியில்லை என்பதை நமக்குத் தெரிவிக்கும் எச்சரிக்கை மணியாக இதை எடுத்துக்கொள்ளலாம். உடலில் வாந்தி ஓர் அனிச்சைச் செயல் போல் ஏற்படுகிறது. மூளையின் பின்பகுதியில் உள்ள ‘முகுள’த்தில் வாந்தி மையம் உள்ளது. இது தூண்டப்படும்போது வாந்தி வருகிறது.


நம் வயிற்றுக்குள் மோசமான பாக்டீரியாவோ, ரசாயனமோ புகுந்துவிட்டது என வைத்துக்கொள்வோம். இந்த விஷயத்தை இரைப்பைச் சுவரில் உள்ள சென்ஸார் செல்கள் உடனே உணர்ந்து, ‘வேகஸ்’ நரம்பு வழியாக முகுளத்துக்குத் தகவல் அனுப்பும். வாந்தி எடுத்தால்தான் பிரச்சினை சரியாகும் என்று முகுளம் தீர்மானித்துவிட்டால், அந்தச் செய்தியை வாந்தி மையத்துக்கு அனுப்பிவைக்கும். உடனே அது ‘வாந்தி எடு’, ‘வாந்தி எடு’ என்று வயிற்றை அவசரப்படுத்தும். இந்தக் கட்டளைகள் பிரெனிக் நரம்பு, வேகஸ் நரம்பு, தண்டுவட நரம்பு, பரிவு நரம்பு, மூளைமைய நரம்புகள் வழியாக வயிற்றுக்கு வந்து சேரும்.


பேட்டரி சார்ஜ் தீர்ந்த கார் நடுவழியில் நின்றுபோனால், சம்பந்தமில்லாத நான்கு பேர் உதவிக்கு வந்து அதைத் தள்ளிவிடுகிற மாதிரி, இரைப்பை சிரமப்படும்போது, இரைப்பைக்குச் சம்பந்தமில்லாத வயிற்றுத் தசைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து சிறுகுடலையும் இரைப்பையையும் அழுத்தும். அப்போது உணவுக் குழாயும் இரைப்பையும் இணையும் இடத்தில் உள்ள ‘வால்வு’ திறந்துகொள்ள, இரைப்பையில் உள்ள உணவு, நச்சு, அமிலம் எதுவானாலும் ‘ஓவ்’ என்ற பெரிய சத்தத்துடன் வெளியேற்றப்படும். இதுதான் வாந்தி. பெரும்பாலும் வாந்தி வருவதற்கு முன்னால் வாயில் எச்சில் ஊறுவது, வயிற்றைப் புரட்டுவது, புளித்த ஏப்பம் போன்ற முன்னறிவிப்புகளை வயிறு நமக்குத் தெரிவிக்கும்.



வாந்தி நல்லதா, கெட்டதா?

வயிற்றில் தேவையில்லாமல் இருக்கிற உணவையோ, நச்சுப்பொருளையோ வெளியே தள்ள ஒரு சில முறை வாந்தியெடுப்பது நல்லதுதான். அதற்காக ஒரு நாளில் நான்கு அல்லது ஐந்து முறை தொடர்ச்சியாக வாந்தி எடுத்தால், உடலில் இருக்கும் தண்ணீர்ச் சத்து குறைந்து, உடல் உலர்ந்து, ரத்த அழுத்தம் குறைந்துவிடும். இதனால் தலைசுற்றல், மயக்கம் வரும். குறிப்பாக, குழந்தைகள் சில முறை வாந்தி எடுத்தாலே சோர்வடைந்துவிடுவார்கள். இது ஆபத்து.

முக்கியக் காரணங்கள்...

கெட்டுப்போன உணவைச் சாப்பிடுவது, ஒத்துக்கொள்ளாத உணவைச் சாப்பிடுவது, அளவுக்கு அதிகமாக உணவைச் சாப்பிடுவது, இரைப்பைப் புண், இரைப்பையில் துளை விழுவது, முன் சிறுகுடல் அடைப்பு, உணவுக் குழாய்ப் புற்றுநோய், இரைப்பைப் புற்று. வயிற்றுப்போக்கு, காலரா, சீதபேதி, குடல்புழு, குடல்வால் அழற்சி, மஞ்சள் காமாலை, கணைய அழற்சி, பித்தப்பை பிரச்சினைகள், சிறுகுடல் அடைப்பு, சிறுகுடல் துளை, சிறுநீர்ப் பாதை அழற்சி, சிறுநீரகக் கல், வலி நிவாரணி மாத்திரைகள், புற்றுநோய் மருந்துகள் போன்றவை வாந்தியை ஏற்படுத்தும்.

காதும் ஒரு காரணம்தான்!

காதடைப்பு, காது இரைச்சல், காதில் சீழ் போன்ற காதுப் பிரச்சினைகளாலும் வாந்தி வரும். காதில் ‘வெஸ்டிபுலர் அப்பாரட்டஸ்’ என்று ஓர் அமைப்பு உள்ளது. இதுதான் நம்மை நடக்கவைக்கிறது; உட்காரவைக்கிறது; உடலைச் சமநிலைப்படுத்துகிறது, இந்த அமைப்பு தூண்டப்படும்போது வாந்தி வரும். இதனால்தான் பேருந்தில் பயணிக்கும்போது, கடல் பயணம்/விமானப் பயணங் களின்போது வாந்தி வருகிறது.

கர்ப்பகால வாந்தி!

கர்ப்பிணிகளுக்கு முதல் மூன்று மாதங்களில் சில ஹார்மோன்களின் அளவு திடீர் திடீரென்று ஏறி இறங்குவதால், மசக்கை வாந்தி வருகிறது. முதல் நாள் இரவில் நிறைய மது குடித்தவர்களுக்கு மறுநாள் எழுந்திருக்கும்போது வாந்தி வருவதுண்டு. சிலருக்கு மாரடைப்பு ஏற்படும்போது ஆரம்ப கட்டத்தில் வாந்தி வருகிறது. தவிர, மூளைக்காய்ச்சல் போன்ற கடுமையான காய்ச்சல் ஏற்பட்டால் வாந்தி வரும். ஒற்றைத் தலைவலி, தலையில் அடிபடுதல், மூளையில் கட்டி, மூளை நீர் அழுத்தம் போன்றவற்றாலும் வாந்தி ஏற்படும். பூச்சிக் கடி, பாம்புக் கடி போன்ற விஷக் கடிகளின்போதும் வாந்தி வரும். ஊசி மருந்து, மாத்திரை அலர்ஜி ஆனாலும் வாந்தி வருவது நிச்சயம்.

உளவியல் காரணங்கள்...

சிலருக்குக் கவலை, கலக்கம், பயம், பதற்றம், பரபரப்பு, மன அழுத்தம் போன்ற காரணங்களால் வாந்தி உண்டாவது வழக்கம். இந்த வாந்தி பெரும்பாலும் காலையில் எழுந்தவுடன் அல்லது காலை உணவு சாப்பிட்ட பின்பு ஏற்படும். பகல் நேரப் பணிகளில் பிரச்சினைகளை எதிர்கொள்ளப் பயப்படுபவர்களுக்கு இம்மாதிரி வாந்தி வரும். உதாரணமாக, பள்ளிக்குச் செல்லப் பயப்படும் குழந்தைகள் காலையில் சாப்பிட்டதும் வாந்தி எடுப்பது இவ்வகையைச் சேர்ந்தது.

சின்னச் சின்னக் காரணங்கள்...

பார்வை, நுகர்தல், தொடுதல் போன்றவையும் வாந்தியை வரவழைக்கும். பள்ளி/கல்லூரி விடுதிகளில் பல்லி விழுந்த பாலைப் பார்த்தால் மாணவர்கள் எல்லோருக்கும் வாந்தி வருவது, துர்நாற்றம் வீசும் இடங்களைக் கடக்கும்போது உண்டாகும் வாந்தி, பல் தேய்க்கும்போது பல்துலக்கித் தொண்டையைத் தொட்டுவிட்டால் வாந்தி வருவது போன்றவை இதற்குச் சில உதாரணங்கள்.

என்ன செய்யலாம்?

வாந்தியை நிறுத்துவதற்குப் பல மருந்துகள் உள்ளன. என்றாலும், வாந்திக்கு என்ன காரணம் என்று தெரிந்து, அதற்குரிய சிகிச்சையைப் பெற்றால்தான் வாந்தி சரியாகும். அதற்கு மருத்துவர் உதவியை நாடுவதே நல்லது.

வாந்தியைத் தடுக்க வழி!

# உடலுக்கு ஒத்துக்கொள்ளாத உணவையும் கெட்டுப்போன உணவையும் சாப்பிடாதீர்கள்.

# அவசர அவசரமாகச் சாப்பிடாதீர்கள். அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடாதீர்கள்.

# அஜீரணத்துக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கிற கொழுப்பும் எண்ணெயும் மிகுந்த நொறுக்குத் தீனிகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

# வாந்தி எடுத்து உடல் நீர்ச்சத்து இழப்பதைத் தடுக்க, ‘ஓ.ஆர்.எஸ்’ எனப்படும் உப்பு சர்க்கரைக் கரைசலைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்கலாம். அல்லது காய்ச்சி ஆறவைத்த ஒரு லிட்டர் தண்ணீரில் 20 கிராம் சர்க்கரையையும் 5 கிராம் உப்பையும் கலந்து ஒவ்வொரு டீஸ்பூனாகக் குடிக்கலாம்.

# பயண வாந்திக் கோளாறு உள்ளவர்கள் பேருந்துப் பயணம் செய்வதற்கு அரை மணி நேரம் முன்பு ‘அவோமின்’ போன்ற வாந்தியைத் தடுக்கும் மாத்திரையை டாக்டர் ஆலோசனைப்படி பயன்படுத்தலாம்.

அம்மா


வாயில் டூத் பிரஷ்ஷுடன் வாசலில் கிடக்கும் செய்தித்தாளை எடுக்க வந்தான் சங்கர்.


“என்ன சங்கர் சார், ரெண்டு நாளா வீட்ல யாரும் இல்லையா என்ன?... வீடு மூடியே இருந்துச்சே?... சொல்லிக்காம எங்க போயிட்டிங்க?” செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு செல்வம் கேட்டார்.

“புதன்கிழமை கிழமை நைட் என் பையன் பயங்காட்டிட்டான் சார்!... மணி ரெண்டு இருக்கும். திடீர்ன்னு வயித்து வலி தாங்காம துடிக்கிறான். என்ன பண்றதுன்னு ஒண்ணும் புரியலை. நாங்க ரெண்டு பேரும் ரொம்ப பயந்துட்டோம். உடனே ஹாஸ்பிடலுக்கு அழைச்சுட்டு போனா, அவங்க ஸ்கேன் எடுக்கணும்னு சொல்லிட்டாங்க. அப்புறம் அந்த டெஸ்ட், இந்த டெஸ்ட்ன்னு ரெண்டு நாள் அவங்க எல்லா டெஸ்டையும் எடுத்துப் பார்த்தாங்க. அப்புறம் ‘பயப்படும்படி ஒண்ணும் இல்லை’ன்னு சொல்றதுக்குள்ள எங்களுக்கு உயிரே போயிடுச்சு. அவனுக்கும் வயித்து வலி தானா போயிடுச்சு. 

நேத்து சாயங்காலம்தான் டிஸ்சார்ஜ் பண்ணி அழைச்சுட்டு வந்தோம். ரெண்டு நாள்ல எழுபதாயிரத்துக்கு மேல செலவாயிடுச்சு. பணம் போனா போகட்டும், பையனுக்கு ஒண்ணுமில்லைன்னு சொல்லிட்டாங்களே... அது போதும் சார்!” சங்கர் பெருமூச்சு விட்டான்.

“என்ன பேசறீங்க நீங்க?... ரெண்டு மாசத்துக்கு முன்னாடி இப்படித்தான் என் பையனும் வயித்து வலி வந்து துடிச்சான். உங்களை மாதிரியே நாங்களும் பயந்தப்ப, உங்க அம்மாதான், ‘அது சூட்டு வலியா இருக்கும். தொப்புள்ல நல்லெண்ணை வைங்க. சட்டுன்னு சரியாடும்’ன்னு சொன்னாங்க. நம்பி வைச்சோம். பத்தே நிமிஷத்துல அவன் விளையாட கிளம்பிட்டான். ஏன்... இதை உங்க அம்மா உங்களுக்கு அன்னைக்கு சொல்லலையா?...” செல்வம் கேட்டார்.

அம்மா இப்போது முதியோர் விடுதியில் இருக்கிறாள் என்பதை அவரிடம் சங்கர் எப்படிச் சொல்வான்...?

பிரேஸ்லெட்


வரவர ஞாபகமறதி அதிகமாகிக்கொண்டே போகிறது. இரவில் இரண்டாவது காட்சி சினிமாவுக்கு செல்வதே தவறு. அதுவும் டூ வீலரில் பெட்ரோல் இருக்கிறதா இல்லையா என்று கவனிக்காமல் செல்வது அதைவிட பெரிய தவறு என்று மனதுக்குள் புலம்பிக்கொண்டே டூவீலரை உருட்டிக்கொண்டு சென்றேன். 

இரவு 2 மணி ஆகிவிட்டதால் என்னைத் தவிர யாரும் இல்லை. மனதுக்குள் ஒருவித அச்சம். இன்னும் ஒரு தெருவைத் தாண்டிவிட்டால் வீடு வந்துவிடும். அந்த நேரத்தில் குறுக்கு சந்தில் இருந்து ஓடிவந்த ஒருவன் முரட்டுத்தனமாக என் மீது மோதினான். வண்டியோடு சேர்த்து நானும் கீழே விழுந்தேன். 

ஒரு நிமிடத்தில் சுதாரித்து எழுந்த நான், என் கையைப் பார்த்தேன். ஐயோ என் பிரேஸ்லெட்!
சில அடிதூரம் ஓடிவிட்ட அவனை என் பலம் முழுவதையும் திரட்டி ஓடிப்போய் பிடித்து நான்கு அடி கொடுக்கவும் பிரேஸ்லெட்டைக் கொடுத்துவிட்டு ஓடிவிட்டான்.



இந்த விஷயத்தை முதலில் மனைவியிடம் கூறவேண்டும் என்று நினைத்து அவளை எழுப்ப, நான் பேசும் முன்பு அவளே பேசத் தொடங்கினாள்.

“என்னங்க உங்களுக்கு வரவர ஞாபகமறதி அதிகமாயிட்டே போகுது. காலையில பிரேஸ்லெட்ட வீட்டிலேயே விட்டுட்டு போயிட்டீங்க” என்றாள்.

மேஜை மீதிருந்த பிரேஸ் லெட் என்னைப் பார்த்து சிரித்தது :-)

Thursday, 4 December 2014

2050 தமிழகம் ஒரு கற்பனை


  • சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 110-வது வயதை முன்னிட்டு பிறந்த நாளான டிசம்பர் 12-ஆம் தேதி அரசியலுக்கு வருவது பற்றி தெளிவான ஒரு முடிவு எடுக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது.

  • முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையை ஆறு மாத காலத்திற்குள் சுமூகமாக தீர்த்து வைக்க மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

  • 35 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன மலேசிய விமானத்தை ‘கேப்டன்’ விஜயகாந்த் கண்டுப்பிடித்தார்.

  • ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான சாந்தனு, பேரறிவாளன், முருகன் ஆகியோரது தீர்ப்பு வழக்கு ஒத்திவைப்பு.

  • உலகிலேயே அதிக மக்கள் தொகை உள்ள முதல் நாடான சீனாவின் சாதனையை இந்திய முறியடித்தது.

  • நாளை முதல் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவிப்பு. 10,000, 20,000, 50,000 ரூபாய் மட்டுமே செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • பால் விலை லிட்டருக்கு 800 ரூபாய் குறைப்பு. தாய்மார்கள் மகிழ்ச்சி.

  • எந்த நிலையிலும் மருதநாயகம் படம் வெளியாகும். கமலஹாசன் தனது பேரனின் திருமண விழாவில் அறிவித்தார்.

  • இலங்கை கடற்படையினரால் 11 மீனவர்கள் சிறைப்பிடிப்பு. தமிழக கடலோரப் பகுதிகளில் பதட்டம் நீட்டிப்பு. வைகோ, நெடுமாறன் கண்டனம்.

  • அரசு வழங்கி வரும் மாணவ, மாணவிகளுக்கான இலவச கார் வழங்கும் திட்டத்தில், ஊழல் நடந்துள்ளதாக எதிர் கட்சியினர் வெளி நடப்பு.

  • தாது மணல் விவகாரம் குறித்து ‘சகாயம்’ ஐ.ஏ.எஸ் அறிக்கையின் மீதுள்ள விசாரணை ஒத்திவைப்பு.

  • தஞ்சாவூர் மாவட்டத்தில் வாழ்ந்த ஒரு விவசாயம் குடும்பம் கண்டுப்பிடிப்பு.

Friday, 28 November 2014

Green Tea








கிரின் டீ (Green Tea) பிரியர்கள் கவனிக்க வேண்டியவை...

(நாள் ஒன்றுக்கு பத்து கிராமிற்கு மேல் பருகினால்)
கஃபேன் என்னும் நச்சு பொருள் கலந்ததுள்ளதால் வயறு சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்ப்படுத்தும்
அடிக்கடி சிறுநீர் கழிக்கும் தன்மை மற்றும் வயிற்று போக்கு ஏற்ப்படுத்தும்
கருச்சிதைவு உண்டாக்க வாய்ப்புகள் அதிகம்.
கஃபேன் தாய்பாலில் கலக்கும் தன்மை கொண்டது, ஆகவே சிசுவிற்கு பாதிப்பு உண்டாக்கும்
உட்கொள்ளும் உணவில் உள்ள இரும்புச்சத்துக்களை கிரகிக்க விடாது

ஏதேனும் மருந்து, மாத்திரை தொடர்ந்து உட்கொள்பவர்கள் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் அருந்த கூடாது

அன்னை தெரசா!



நோபல்பரிசு வழங்கி முடித்த பின் பரிசு பெற்றவர்களைப் பாராட்டும் விதமாக மிக உயரிய விருந்து நடைபெறுவது சம்பிரதாயம். ஆனால் இதை மாற்றி ஒரு புதுமை செய்தார் அம்மையார்.

அவருக்கு நோபல்பரிசு கிடைத்த போது முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளும் அந்த விருந்தின் செலவை தன்னிடம் கொடுத்தால் 400 ஏழைகளுக்கு ஒரு வருட சாப்பாட்டிற்க்கு வழி பிறக்கும் என பரிசுக் கமிட்டியை கேட்டுக் கொண்டார். அவர் வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அந்த அம்மையாரின் பெயர் - அன்னை தெரசா!!



Translate