Thursday, 2 October 2014

சிவப்பாய் இருப்பவன் பொய் சொல்லமாட்டான்..



 
        திருப்பூரில் கிட்டத்தட்ட அனனவருக்கு வார சம்பளம் வாங்குபவர்கள் என்பதால் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மற்ற நாட்களை காட்டிலும் வியாபாரம் நன்றாக போகும் என்று நிறைய பேர் கூறினர். நான் திருப்பூரில் கடை திறந்து முதல் ஞாயிறு என்பதால் என் எதிர்பார்ப்பும் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. எப்போதும் போல மாலை ஐந்து மணிக்கு மேல் வியாபாரம் மிதமாக சூடு பிடிக்க ஆரம்பித்தது. சுமார் ஏழு மணி அளவில் ஒரு ஐம்பது வயது மதிக்கதக்க (குடி)மகன் தள்ளாடியபடி கடைக்குள் நுழைந்தார்.


முதியவர்       :        புது கடையா?


நான்           :        ஆமாங்க, தொறந்து ஒரு வாரம்தான் ஆகிறது.


முதியவர்       :        ஓ, ஒரு வாரம் ஆச்சா..பின்ன ஏன் புது கடைன்னு சொன்னீங்க?


நான்           :        ???????


முதியவர்       :     எனக்கு ரொம்ப நாளா சளி, இருமல். டாக்டர்கிட்ட போனேன். மருந்து பொடி                             கொடுத்தார். சுத்தமான தேனில் கலந்து சாப்பிட சொன்னார். உங்க கிட்ட தேன்                             இருக்கா?

நான்           :         இருக்கு அய்யா. அரை கிலோ ரூ. 130.00


முதியவர்       :        என்னது???? எவ்வுளவு????


நான்           :        அரை கிலோ ரூ. 130.00ங்க..


முதியவர்       :        எனக்கு உடம்பு சரி இல்ல. டாக்டர் சுத்தமான தேனில் மருந்து பொடி கலந்து                   சாப்பிட சொல்லி இருக்கார். அதனால நல்ல தேனா சுத்தமான தேனா                           கொடுங்க.


நான்           :        தேனில் நல்ல தேன் கெட்ட தேன் எல்லாம் கிடையாது. இது சுத்தமான                                 தேன்தான். நம்பி வாங்கிட்டு போங்க.

முதியவர்       :        நான் என் பிரச்சனையை உங்ககிட்ட ஓப்பனா சொன்னேன். ஆனா நீங்க அதை                  புரிஞ்சிக்காம விளையாடறீங்க. நான் எப்பவுமே காதி ஃக்ராப்ட்ல இருந்துதான்                   தேன் வாங்குவேன். அங்கேயே 100ml தேன் ரூ. 120க்கு வாங்குவேன். நீங்க                            என்னடானா 1/2 கிலோ ரூ. 130 சொல்றீங்க.


நான்           :        அங்க இருக்கிற விலைக்கு நான் எதும் சொல்ல முடியாது. இங்க இருக்கிறது                   நல்ல தேன்தான். நீங்க நம்பி வாங்கலாம்.


முதியவர்       :        அதெப்படி? காதியைவிட உங்ககிட்ட விலை கம்மி. கவர்மெண்டை விட  
                                                 யாரும் கம்மியா கொடுக்க முடியாது.... அப்படினா நீங்க ஏதோ ஃபிராட்                          பண்றீங்கன்னு அர்த்தம். எனக்கு உங்க தேன் வேணாம். நான் வரேன்...


நான்           :        !!!!!!!!!!!!!!!!!

Translate