நேற்று (அக்டோபர் 2) பெருந்தலைவர் மறைந்த நாள்.1967 தேர்தலிலே விருதுநகர் தொகுதியில் பெருந்தலைவர் தோற்றுப் போனார். கலங்கவில்லை. தோத்துட்டோம் மக்கள் எதிர்பார்ப்பு வேறயா இருந்திருக்கு. அதனால் தான்
இந்தத் தோல்வி. ஒரு 6 மாதம்
திமுக ஆட்சியை விமரிசிக்க மாட்டேன். புதிதாக ஆட்சிக்கு வருபவர்களுக்கு வாய்ப்பளிக்கணும் எடுத்த உடனே
அவர்களைக் கேள்வி கேட்கக்
கூடாது என்றார்.நம்ம பாடு
பட்டுக் கொண்டு வந்த
சுதந்திரம். நம்ம கொண்டு
வந்த ஜனநாயகம் வெற்றி அடைஞ்சிருக்கு . அதனால
தன் நாம தோத்திருக்கோம்.நாம
தேர்தல நேர்மையா
நடத்தியிருக்கோம்ங்கது நிரூபணமாயிட்டுல்லா என்ன
நான் சொல்றதுன்னார்.
6 மாதம் கழித்து
அவர் திமுக ஆட்சி
பற்றிக் கேள்வி கேட்டபோது. கருணாநிதி என்ன சொன்னார்
என்பதனை உங்களுக்கு நினைவூட்ட வேண்டிய கடமை என்க்கிருக்கின்றது. ஒரு
குழந்தை பேசாமல் இருந்தது. அது முதன்
முதலாக தம் அம்மவிடம்
வாய் திறந்த போது
அம்மா நீ எப்போது
தாலி அறுப்பாய் என்று கேட்டது
.அதே போல்தான் காமராசர் பேசுகின்றார். என்றார். எதற்கு எனக்குக்
கருணாநிதியை அறவே பிடிக்காது
என்பதற்கு இது ஒரு
காரணம். அவரது உவமை
உயிரற்றது. ஆமாம் திமுக
ஆட்சி எப்படி பெருந்தலைவருக்கு அம்மா ஆக முடியும். அது மட்டுமல்ல
காமராசர் மீண்டும் முதலமைச்சர் ஆக ஆசைப்
படுகின்றார் என்று வேறு
குற்றஞ் சுமத்தினார். அந்த ஒரு
முறைதான் பெருந்தலைவர் கடுமையாக பதில் சொன்னார்.
நீயெல்லாம் அந்தப் பதவியில உட்கார்ந்த பிறகு நான் அதிலே உட்கார ஆசைப் படுவேனா என்று.
சென்னையில் படிஅரிசிப் போராட்டத்தை காங்கிரசார் நடத்திய போது வன்முறையாளர்களுக்கு காவலர்கள் உடை தந்து அவர்களை வைத்து கருணாநிதி வன்முறையைக் கட்டவிழ்த்த போது தேவதாஸ் என்கின்ற ஒரு காங்கிரஸ் தொண்டர் உயிரிழந்தார். பலர் காயமுற்றனர். கடற்கரைக் கூட்டத்திலே பெருந்தலைவர் மேடையிலே அமர்ந்துள்ளார். கவியரசு கண்ணதாசன் பேசிக் கொண்டிருக்கின்றார். ரத்தக்
காயம் பட்டவர் களை மேடைக்கு
வருமாறு கவிஞர் அழைக்கின்றார். பெருந்தலைவர் கவிஞரைக் கடிந்து கொள்கின்றார். ஏற்கனவே ஒருத்தன் செத்துப் போயிட்டான். அவன் குடும்பத்திற்கு நான் என்ன பதில்
சொல்லண்ணு யோசிச்சிட்டிருக்கேன். அடிபட்டவன ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போங்க.
ஒங்க பழய இட
அரசியல் இங்க வேண்டாம்ன்னார். மீண்டும்
கவிஞர் காவல் துறை
அதிகாரி ஷெனாயைக் கண்டித்துப் பேசியவர் தொடர்ந்து அவர் குடும்பத்தைப் பற்றி ஏதோ சொல்ல
ஆர்ம்பித்தார். பெருந்தலைவர் கடுமையாகக் கடிந்து கொண்டார். அவர் போலீஸ் அதிகாரி அவரப் பேசுங்க. அவர் குடும்பத்த எப்படிப் பேசல்லாம். நிறுத்துங்கன்னு சத்தம் போட்டார். அவர் தான்பெருந்தலைவர்.