Monday, 17 December 2018

சிலை சொல்லும் செய்தி!


குதிரை மீது அமர்ந்திருக்கும் வீரர்களின் சிலைகளை நம்மில் பலர் பார்த்திருப்போம்.  அதற்கு பின்னால் சில தகவல்கள் உண்டு.  அதை காண்போம் –


பூங்காவிலோ, பொது இடத்திலோ இரண்டு முன்னங்கால்களைத் தூக்கியபடி நிற்கும் குதிரையின்  மீது ஒருவர் அமர்ந்திருப்பதுபோல சிலை இருந்தால், அவர் போர்க்களத்தில் வீர மரணம் எய்தினார் என்று பொருள்.


முன்னங்கால்களில் ஒன்றை மட்டும் தூக்கிய நிலையில் இருக்கும் குதிரையில் அந்த வீரர் அமர்ந்திருந்தால், போர்க்களத்தில் படுகாயம் அடைந்து இறந்தார் என்று பொருள்.


நான்கு கால்களும் தரையில் பதிந்து சாதாரண நிலையில் இருந்தால், குதிரையில் மீது இருக்கும் வீரர் இயற்கையான முறையில் மரணம் எய்தினார் என்று பொருள்.

Wednesday, 12 December 2018

அடையாளம்!


அமெரிக்க நாட்டுப் பெண்மணி ஒருவர் சுவாமி விவேகானந்தரை தன் வீட்டிற்கு அழைத்திருந்தார்.  அழைப்பை ஏற்ற விவேகானந்தர் பெண்மணியின் வீட்டிற்குச் சென்றார்.

அந்தப் பெண்மணி விவேகானந்தரிடம், “இறைவனை எல்லை கடந்தவர்!.. எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவர் என்கிறீர்கள்!.. ஆனால் அருவமாகிய பரம்பொருளுக்கு உங்கள் நாட்டில் உருவம் வைத்து வழிபடுகிறீர்கள்!.. எதற்காக?... இதை எப்படி ஏற்பது?.. என்று கேட்டார்.

விவேகானந்தர் அப்பெண்மணியின் வீட்டில் மாட்டப்பட்டிருந்த ஒரு முதியவரின் ஓவியத்தைக் காட்டி, “இது யார்?” என்று கேட்டார்.

“அது என் தந்தையார்...” என்று பதில் கூறினால் அந்தப் பெண்மணி.

“வெறும் மரத்தாலான சட்டமும், சில வண்ணக் கலவைகளைக் கொண்டு எழுதிய ஓவியம்தானே அது?.. உயிரற்ற ஒரு ஜடப் பொருள்தானே.. அதெப்படி உன் தந்தையாராக இருக்க முடியும்?..” என்று கேட்டார்.

“சரி.. இது என் தந்தை அல்ல.. ஆனால் என் தந்தையை நினைவுப்பூட்டுகிற ஒரு புனிதமான அடையாளம் அல்லவா?..” என்றார் அந்த பெண்மணி.

“அது போலத்தான்!..” எங்கள் நாட்டில் உள்ள விக்கிரங்களும்!.. அவை இறைவனை நினைப்பூட்டுகிற,... பக்தியோடு சிந்தையில்தாங்கிநிற்க.. ஏற்படுத்தப்பட்ட அடையாலங்களாகத் திகழ்கின்றன!..”

அந்த பெண்மணி விவேகானந்தரின் கருத்தைப் புரிந்து கொண்டதற்கு அடையாளமாக புன்னகை புரிந்தார்!



Saturday, 20 October 2018

அசல்

லண்டனில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடாகியிருந்தது.  நிகழ்ச்சியில் சார்லி சாப்ளின் போல வேடமிட்டுக் கொண்டு அவரைப்போலவே நடித்துக்காட்ட வேண்டும் என்பதுதான் நிபந்தனை.  யார் சார்லி சாப்ளின் போல தத்ரூபமாக நடிக்கிறாரோ அவருக்கு முதல் பரிசு.  மூன்று பரிசுகள் வரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.  ஆர்வமுள்ள பலர் அதில் கலந்து கொண்டார்கள்.  கடைசி நேரத்தில் விருப்பம் தெரிவித்து ஒரு இளைஞர் விண்ணப்பத்திருந்தார்.  அந்த நிகழ்ச்சியில் அந்த இளைஞரும் பங்கேற்றார்.

நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.  பங்கேற்ற அனைவரும் வெளுத்து வாங்கினர்.  சபையில் ஒரே ஆரவாரம்.  எல்லோரும் சார்லி சாப்ளின் போல அற்புதமாக நடித்துக்காட்டினர்.

கடைசியில் முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு பெற்றவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.  கை தட்டல்! ஆரவாரம்! மூன்றாம் பரிசு கடைசி நேரத்தில் கலந்துகொள்ள விண்ணப்பித்த இளைஞருக்கு அறிவிக்கப்பட்டது.  அந்த இளைஞரும் மகிழ்ச்சியுடன் மூன்றாம் பரிசினை பெற்றுக்கொண்டார்.

     மூன்றாம் பரிசு பெற்றுக்கொண்ட அந்த இளைஞர் வேறு யாருமில்லை.  அவர்தான் உண்மையான் சார்லி சாப்ளின்.

சொல்லாததற்கு காரணம்!

விவேகானந்தர் இந்தியாவிலிருந்து ஆன்மீகச் சொற்பொழிவுக்காக அமேரிக்கா சென்றிருந்தார்.  அங்கு அவர் சில நாட்கள் தங்க வேண்டியிருந்தது.  அவர் வெள்ளையர்களை விட சற்று கருப்பாக இருந்ததால் சில அமெர்க்க வெள்ளையர்கள் அவரை “நீக்ரோ” இனத்தவர் என நினைத்தனர்.  அந்நாளில் நீக்ரோக்கள் அமெரிக்காவில் கேவலமாக நடத்தப்பட்டார்கள்.  விவேகானந்தர் தன்னை யாராவது நீக்ரோ என்று கூறினால் அதை அவர் மறுத்து பேசுவதில்லை.
     
     சுவாமிஜி மற்ற நீக்ரோக்களைப் போலவே பல இடங்களில் தாழ்வாக நடத்தப்பட்டார்.  ஒரு நாள் அவர் அமெரிக்காவில் உள்ள ஒரு சலூனுக்குப் போனார்.  அவரை நீக்ரோ என நினைத்த சலூன்காரர், அவரை வெளியே போக உத்தரவிட்டார்.  அவரும் அமைதியாக வெளியேறினார். மற்றொரு சமயம் அவரை நீக்ரோ என்று நினைத்து, ஒரு ஹோட்டலில் அவருக்கு தாங்குவதற்கு இடம் தர மறுத்தனர்...வெளியே போ!.. என்று துரத்தினர்.  அப்போதும் அவர் நீக்ரோ அல்ல என்று சொல்லவில்லை.

     நீண்ட நாட்களுக்கு பிறகு மேலைநாட்டு சீடர் ஒருவர் சுவாமிஜியிடம், “நீங்கள் நீக்ரோ அல்ல... என்று சொல்லியிருக்கலாமே!... ஏன் சொல்லவில்லை?...”

     “அப்படியானால் நீக்ரோ என்னைவிடத் தாழ்வானவன் என்பதை நானே ஒப்புக்கொள்வது  போல ஆகாதா?”... மனிதரில் பேதத்தை என்னால் பார்க்க முடியாது... மேலும் அதனால் கிடைக்கும் சலுகைகள் எனக்கு பிடிக்காது...! அது ஒருவனை கீழே தள்ளிவிட்டு இன்னொருவன் முன்னேறுவது போலாகும். நான் அதற்காக இந்த உலகில் பிறக்கவில்லை” என்றார்.

Monday, 15 October 2018

Why Brahmins avoid Onions & Garlic?



Brahmin is a caste in Hinduism, where majority of the people are priests and scholors. Brahmins are those people who are known to preach their culture. They are bound to their traditions and always are close to god by performing their daily set of pujas and vratas.

Brahmins can be further divided into Vaishnavas who follow Lord Vishnu, Sri Vaishnavas who are the devotees of Lord Lakshmi Narayana anddo not pray Lord Shiva and Smarthas who preach Lord Vishnu and Lord Shiva. Apart from the strict culture and traditional beliefs, Brahmins follow a certain food style too. They do not consume any spicy foods. Most importantly, brahmins do not consume onions and garlic.

In the ancient times, people never ate onions and garlic. These two vegetables were never brought to any Brahmin's house. Though, off late, this concept has been changed. However, many people in the Smartha, Iyengar and Madhava families do not consume onions or garlic even to this day. As a part of naivedya that is served for the lord, the food items are never prepared using onions and garlic

Based on Ayurveda

Based on Ayurveda, the foods that we eat can be divided into three groups. Satva, rajas, and tamas.

Satvic foods provide mental peace, it keeps our mind calm, helps us speak the truth and always keeps our mind under control. This is the main reason as to why Brahmins preferred eating only Satvic foods. Foods that come under the category of rajas can make you want and desire worldy pleasures. Onions are known to increase your sexual feelings. This is one of the main reasons as to why onions were restricted in the earlier times. The qualities that we get when we eat foods in the Tamas category, such as onions and garlic, is that our mind becomes evil, we tend to be more angry and our mind can never be got under control.

This is why people always avoided eating onions and garlic. Though some people believe that garlic helps to cure certain health disorders; however, Brahmins found alternative ayurvedic medicines to cure the same diseases. Since human beings have been known to be evolved from monkeys, these rules and beliefs were applied to tame our ever-diverting minds. Rather, we humans do not have a control over our minds. So, by avoiding foods like onions, garlic, meat, etc, Brahmins believe that it is a step towards attaining peace and fulfilling the purpose of their life. Hence, they refrain from doing any such activities that might divert their attention away from God.

விரதமே மகத்தான மருத்துவம்


விரதமே மகத்தான மருத்துவம்

நம்மாழ்வார்

''எத்தனையோ வருஷங்களுக்கு முன்னாலேயே, 'உணவே மருந்து; மருந்தே உணவுன்னு திருமூலர் சொல்லிட்டுப் போயிட்டார். இந்த அற்புதமான வாக்கை ஆராதிக்கத் தவறியவர்கள்தான் எண் சாண் உடம்பில் எண்ண முடியாத வியாதிகளோடு அலையறாங்க. வாழ்க்கையில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று நோயே வராமல் வாழ்வது. இரண்டாவது, நோய் வந்த பின் வருந்தியபடியே வாழ்வது. முதல் வகையில் இணைந்துவிட்டால், நமக்கு இன்னல்கள் இருக்காது.

'மருந்துஎன வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்என்ற குறளிலேயே நோய் அண்டாமல் வாழ்வதற்கான வழி சொல்லப்பட்டு இருக்கிறது. உண்ட உணவு சீரணமாகிவிட்டதை அறிந்து, அதன் பிறகு உண்டால் அந்த உடம்புக்கு மருந்து என்ற ஒன்றே தேவை இல்லை எனச் சொல்லி இருக்கிறார் வள்ளுவர்.

எதை, எப்போது, எப்படி உண்ண வேண்டும் என்பதே நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. நாம் உண்ணும்போது முதலில் உணவை விழுங்குறோம். ஆனால், அப்படி விழுங்கக்கூடாது. பற்களால் நன்றாக அரைத்து, கூழாக்கி உமிழ்நீரோடு சேர்த்து உள்ளே தள்ளவேண்டும். இதைத்தான், 'நொறுங்கத் தின்றால் நோய் தீரும்!எனப் பழமொழியாகச் சொன்னார்கள்.

அளவு கடந்து உணவு உண்பவர்கள் நோய்களை எதிர்கொள்ளவேண்டி இருக்கும். நாம் உண்ணும் உணவுக் கழிவுகள் உடம்பில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் கொஞ்சம் கொஞ்சமாகத் தேங்குகிறது. இதன் அளவு அதிகரிக்கும்போது நோய் உண்டாகிறது. சரி, அதை எப்படிக் களைவது? இதற்கான சுலபமான வழி, உண்ணாநோன்பு. இதைத்தான் 'விரதம்என்ற பெயரில் கடைபிடித்தார்கள் நமது முன்னோர்கள். 'நோயிலே படுப்பதென்ன கண்ண பரமாத்மா, நோன்பிலே உயிர்ப்பதென்ன கண்ண பரமாத்மாஎனப் பாடினார்களே... அந்த நோன்புதான் உண்ணாநோன்பு. இறக்கும் தருவாயில் இருப்பவனைக்கூட உயிர்த்தெழுச் செய்யும் சக்தி உண்ணாநோன்புக்கு இருக்கிறது. இதைத்தான் ஆங்கிலத்தில் 'தெரப்பூட்டிங் பாஸ்ட்டிங்' என்று சொல்கிறார்கள். இன்றைக்கு சர்வதேச அளவில் இந்தச் சிகிச்சை பிரபலமாகி வருகிறது. உண்ணாநோன்பு இருக்கும்போது நம் உடலுக்குள் இருக்கும் தேவையில்லாத கழிவுகள் தன்னாலே வெளியேறி விடுகின்றன. உடல் தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்ள நாம் அனுமதிக்க வேண்டும்.

அடுத்ததாக, எதைச் சாப்பிட வேண்டும் என்பது மிகவும் முக்கியம். நம் உணவில் காய்கறிகள், கீரைகள், பழங்கள் ஆகியவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். 'வெந்ததைக் குறைத்தால் வேதனையை குறைக்கலாம்என்பார்கள். அதாவது வேகவைத்த உணவைக் குறைத்துக்கொண்டு பச்சைக் காய்கறிகள், பழங்களை உண்ண வேண்டும். நான் 35 வயதில் கண்ணாடி அணிந்தேன். 60 வயதில் அதை அகற்றிவிட்டேன். இப்போது கண்ணாடியைப் பயன்படுத்துவதே இல்லை. பொடி எழுத்துக்களைக்கூட என்னால் துல்லியமாக வாசிக்க முடியும். இதற்குக் காரணம் எனது உணவுப் பழக்கங்கள்தான்!'' -விழி விரியவைக்கும் அளவுக்கு ஆச்சரியமாகப் பேசுகிறார் நம்மாழ்வார். அடுத்து, மூலிகைகளை நோக்கி நீள்கிறது பேச்சு.

 ''இயற்கை நமக்குக் கொடுத்த அருட்கொடை மூலிகைகள்.

நாம் பயிர் செய்யாமலேயே நமக்கான உணவாக சில மூலிகைகளை இயற்கை உற்பத்தி செய்கிறது. உதாரணமாக, பிரண்டை. இதைத் துவையல் செய்து சாதத்தில் குழம்புக்குப் பதிலாக பிசைந்து உண்ணலாம். தூதுவளை, மொசுமொசுக்கை இலைகளைச் சேர்த்து ரசம் வைத்து உண்டால் நாள்பட்ட சளி தீரும். வாய்ப்புண்ணை ஆற்ற மணத்தக்காளி, வெட்டுப் புண்களை ஆற்ற வெட்டுக்காயப் பச்சிலை, அனைத்துக் கும் சிறந்த ஆவாரை, துளசி என மூலிகைகளின் அதிசய ஆற்றல் கொஞ்சநஞ்சம் அல்ல.

நம்மைச் சுற்றி வளர்ந்துகிடக்கும் எண்ணில்லா மூலிகைகளை நாம் சரியாகப் பயன்படுத்தினாலே பாதி நோய்கள் காணாமல் போய்விடும்!'' எனச் சொல்லும் நம்மாழ்வார், உடலின் மகத்துவத்தையும், யோகாவின் சிறப்பையும் சொல்லத் தொடங்கினார்.

''இயற்கை ஒருபோதும் தவறு செய்வதில்லை. உடல் ஒருபோதும் தன் கடமையை நிறுத்துவதில்லை. பசி வந்தால் உணவு, தாகம் எடுத்தால் தண்ணீர், சோர்வு வந்தால் உறக்கம் என உடல் சரியான சமிக்ஞைகளை நமக்கு கொடுத்தவண்ணம் இருக்கிறது. அதன்படி உணவு, உறக்கத்தை நாம் கடைப்பிடித்தாலே உடலுக்கு எந்தவிதமான சிக்கலும் வராது. பலர் உடம்பு வலிக்காக மாத்திரை, மருந்துகளை உட்கொள்கிறார்கள். வலி என்பது உடம்பு தன் உள்ளே இருக்கும் நச்சுப் பொருட்களை வெளியேற்றும் முயற்சி. அதைத் தடுக்கக்கூடாது.

50 வயது வரை உடம்புதான் உன்னதம் என நினைக்கும் மனது, அதற்குப் பிறகு ஆன்மாவை ஆராதிக்கிறது. ஆன்மா இந்த உடம்புக்குள்ளேதானே இருக்கிறது! அதனால், உடலைப் பராமரிப்பதும் அவசியம். இது இரண்டையும் ஒரே நேரத்தில் பராமரிக்க உதவுவதுதான் யோகா. நான் நீண்ட காலமாக யோகா செய்து வந்தாலும், 'ஈஷாபயிற்சியில்தான் அதை முறைப்படுத்தினேன். தினமும் காலையில் நடைப்பயிற்சி, மூச்சுப் பயிற்சி, யோகா செய்கிறேன்.

ஈஷா யோகா பயிற்சியின்போது நடந்த நேர்காணலில், 'யோகா செய்வதன் மூலம் நோய்கள் குணமாகும் என்றால், எதற்காக இத்தனை மருத்துவர்களும், மருத்துவமனைகளும் இருக்கின்றன?’ என சத்குருவிடம்  கேட்டேன். 'நாட்டில் தினமும் ஆயிரக் கணக்கில் விபத்துகள் நடக்கின்றன. விபத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டவர் களுக்கு யோகா சொல்லிக் கொடுக்க முடியாது அல்லவா? அவர்களுக்குத் தேவை, அவசர சிகிச்சை. அதற்காகத் தான் மருத்துவர்களும், மருத்துவமனை களும்!என்று அவர் அமைதியாகச் சொன்னார்.

அவர் சொன்னது உண்மைதான். ஆங்கில மருத்துவத்தை அவசரத்தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாத்திரை, மருந்துகளைத் தொடர்ச்சியாக உட்கொள்ளும்போது, அதுவே உடம்பில் பல உபத்திரவங்களை உண்டாக்குகிறது.

மொத்தத்தில், சரியான பழக்க வழக்கங்களும், உடலைப் பேணும் உணவு முறையும், ஆரோக்கியமான சுற்றுச்சூழலும் இருந்தாலே நோய்க்கு 'நோ என்ட்ரிபோட்டுவிடலாம்!'' எனச் சொல்லும் நம்மாழ்வார் இறுதியாக இப்படிச் சொல்கிறார் வாழ்வியல் மந்திரத்தை.

''கணியன் பூங்குன்றனார் சொன்ன 'தீதும், நன்றும் பிறர் தர வாராஎன்கிற வரி நம் உடலுக்கும் உள்ளத்துக்கும் ஒருசேர வழிகாட்டக்கூடியது. அந்த வரிகளை மனதில் ஏற்று இயற்கையை வணங்கி, உடலை ஆராதிக்கக் கற்றுக் கொண்டால் வாழ்வின் சிறப்புக்குக் குறைவே இருக்காது!''






Translate