Sunday, 6 January 2019

நடையழகு


     சென்னை கமலா தியேட்டர் அதிபர் வி.என்.சிதம்பரம் சிவாஜியின் நெருங்கிய நண்பர் மற்றும் ரசிகர்.  அவர் சிவாஜியை ஒரு முறை புட்டபர்த்திக்கு அழைத்துச் சென்றார்.

     புட்டபர்த்தி சென்றபோது பொது நுழைவு வாசல் அருகே, சிறிது நேரம் அவர்களை உட்காரவைத்த பின் அழைத்து சென்றனர்.  நீண்ட தூரம் நடக்க வேண்டியிருந்தது.  பிரத்யேக வழியாக உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டவில்லை.

     புட்டபர்த்தி சாய்பாபாவிடம் இருவரும் சென்றபோது பாபா தெலுங்கில் “மெயின் நுழைவு வாயிலிலிருந்து நடக்க வைத்து விட்டேனே என்று என்று கோபம்தானே உனக்கு.  சிவாஜியின் நடிப்பில் ரொம்ப ரசிக்கத்தக்கது அவருடைய நடைதான் என்று எல்லாரும் சொன்னார்கள்.  எனக்கு உன் நடையை பார்க்கணும்னு ஆசை.  அதனால்தான் உன்னை இவ்வுளவு தூரம் நடக்க வைத்தேன்” என்றார்.

     சிவாஜிக்கு தெலுங்கு நன்றாகப்புரியும் .  பாபா சொன்னதைக்கேட்டு நெகிழ்ந்து விட்டார்.

Translate