Tuesday, 31 August 2021

சிந்தனைகள் அழகானால் வாழ்க்கையே அழகாகும்!!

ஒரு டீக்கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம், டீயை விடவும் சூடாக இருந்தது...


இருவடை எடுத்து ஒருவடை என்பார்

திருவோடு ஏந்தி தெருவோடு போவார்..!


மாஸ்டர் டீ போடுகிற நேரத்தில், தட்டிலிருக்கும் வடையில் இரண்டை கபளீகரம் செய்து விட்டு, ஒரு வடை தான் என்று காசு கொடுப்பவர்களை கண்டிப்பதற்காக எழுதப்பட்ட வாசகம் இது. சுவாரஸ்யமாக இருக்கிறது என்றாலும் வடை எடுக்கிற எல்லோருக்கும் இது சங்கடத்தையே ஏற்படுத்தும்.. 


இதைப் படிக்கும்போது உங்களுக்குள் ஏற்படும் மன உணர்விற்கும், இனி வரும் வரிகளை படிக்கும்போது ஏற்படும் மன உணர்விற்கும் உள்ள வித்தியாசத்தினை கவனியுங்கள்...


ஒரு ஆட்டோவில், டிரைவர் சீட்டின் முதுகில் எழுதப்பட்ட வாசகம்.., 


உங்களின் வழிச் செலவு, எங்களின் வாழ்க்கை செலவு


✍️இந்த வாசகம், இறங்கிய பின் யாரையும் பேரம் பேசவிடாது,  மீட்டருக்கு மேல் ஐந்து ரூபாய் போட்டுக் கொடுங்க சார் என்கிற வார்த்தைக்கும் இந்த வாசகத்திற்கு எத்தனை வேறுபாடு. அதனால் தான் சொல்கிறேன், சொல்லும் விதத்தில் வெல்லலாம்...!! 


ஒரு மொத்த விற்பனை மீன் கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம்..,, 


‘மீன் சாப்பிட வேண்டாம் என்று நினைத்தேன்,  மீனவன் சாப்பிட வேண்டாமா..?? 


✍️வார்த்தைகளில் இல்லை வெற்றி

அது வெளிவரும் விதத்தில் தான் வெற்றி இருக்கிறது...!! 

✍️டீக்கடையின் வரிகளும், ஆட்டோவில் எழுதப்பட்ட வரிகளும் ஒரே விஷயத்தை தான் சொல்கிறது ஆனால் சொல்லப்பட்ட விதம் தான் அதில் வித்தியாசம் சொல்ல வந்ததை அழகாக சொல்வது ஒரு கலை...!! 


நினைக்கும் விஷயங்களை எல்லாம் பேசாமல், அதை செம்மை படுத்தி பேசிப்பாருங்கள்.. வெற்றி நிச்சயம்...!! 


ஒரு ஹோட்டலில் எழுதி மாட்டி இருக்கும் வாசகம்...

‘வீட்டு சமையலுக்கு ஒரு நாள் விடுமுறை விடுங்கள்..


✍️ எண்ணங்கள் அழகானால் வார்த்தைகள் அழகாகும்...!! 

✍️ வார்த்தைகள் அழகானால் சிந்தனைகள் அழகாகும்...!! 

✍️ சிந்தனைகள் அழகானால் வாழ்க்கையே அழகாகும்..!!

Wednesday, 14 July 2021

பல் துலக்க மட்டுமல்ல டூத் பேஸ்ட்...

 


வெள்ளி பாத்திரங்கள், ஆபரணங்கள் பளிச்சிட ஒரு மெல்லிய காட்டன் துணியில் டூத் பேஸ்ட் தடவி மெதுவாக பாலீஷ் செய்வது போல் தேய்த்தால் புதிதுபோல் இருக்கும். இது வைர நகைகளுக்கும் பொருந்தும்.

பூண்டு, வெங்காயம், மீன் இவற்றை கையாளும் பொழுது கைகளில் இருந்து ஒரு வித வாடை வரும். சிறிது டூத் பேஸ்ட் எடுத்து தேய்த்து விட்டு கழுவினால் வாடை நீங்கும்.

சி.டி./ டி.வி.டி.களில் கோடுகள் விழுந்தால் ஒரு துளி டூத் பேஸ்ட் கோட்டிங் கொடுத்து மெல்லிய துணியால் துடைத்து விடுங்கள்.

துணிகளிலும், கார்பெட்களிலும் படிந்த கனமான கறைகளை டூத் பேஸ்ட் மூலம் நீக்க முடியும். பேஸ்ட்டை கறை படிந்த இடங்களில் தடவி நன்றாக தேய்த்தால் கறைகள் நீங்கும்.

Thursday, 17 June 2021

கடவுள் என்பவர் யார்?

 




சக்தி மிக்க மூலிகை

 


உங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள இந்த குறியீடுகளுக்கு என்ன அர்த்தம் தெரியுமா?


நாம் பயன்படுத்தும் ரேஷன் அட்டை ஒரே மாதிரியாக இருந்தாலும் அதில் பல வித்தியாசங்கள் உள்ளது. அதில் சில குறியீடுகளை அரசாங்கம் வைத்திருக்கும். அதற்கான அர்த்தங்கள் பலருக்கும் தெரிவதில்லை. அதைப்பற்றி இதில் தெரிந்து கொள்வோம்.

ரேஷன் அட்டை நமக்கு ஒரு அடையாள அட்டையாக இருந்து வருகிறது. தற்போது ஸ்மார்ட் கார்டு என்ற பெயரில் ஒரு அட்டையை கொடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் ஐந்து வகையான ரேஷன் கார்டுகள் உள்ளன. குடும்ப வருவாயைப் பொறுத்து அவை வகை படுத்தப்பட்டுள்ளது. எல்லா ரேஷன் கார்டும் ஒன்று போல் இருந்தாலும், அதன் குறியீட்டு மூலம் தான் எந்த வகை அட்டை என்பதை அறிய முடியும்.

PHH (Priority house hold) - முன்னுரிமை உள்ளவர்கள்:

உங்கள் ரேஷன் கார்டில் PHH என்று குறிப்பிடப்பட்டு இருந்தால் நியாய விலைக் கடையில் 8 கிலோ அரிசியை மாதத்திற்கு பெற்று கொள்ளலாம். இந்த வகையில் மட்டும் 76,99,940 கார்டுகள் உள்ளன.

PHH - AAY ( Priority house hold- Antyodaya Anna Yojana):

இந்த வகையான ரேஷன் கார்டுகள் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு தரப்படும். இவர்களுக்கு 35 கிலோ அரிசி குறைந்த விலையில் வழங்கப்படும். மேலும் இந்த வகையான அட்டைகள் விதவை, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், கடும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோருக்கு வழங்கப்படும். இந்தக் கார்டை 18,64,600 குடும்பங்கள் பயன்படுத்தி வருகின்றனர்.


NPHH ( Non Priority House Hold) - முன்னுரிமை இல்லாதவர்கள்:

உங்கள் ரேஷன் கார்டில் NPHH என்று குறிப்பிடப்பட்டு இருந்தால் நியாய விலைக் கடையில் அரிசி உட்பட அனைத்துப் பொருட்களை வாங்க முடியும். இந்த வகையில் மட்டும் 90,08,842 கார்டுகள் உள்ளன.


NPHH-S:

ரேஷன் கார்டில் NPHH-S எனக் குறிப்பிட்டு இருந்தால் அரிசியை தவிர சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை மட்டும் வாங்கலாம். இந்த கார்டை 10,01,605 குடும்பங்கள் வைத்துள்ளனர்.


NPHH-NC:

ரேஷன் கார்டில் இந்தக் குறியீடு இருந்தால் எந்த ஒரு பொருளும் கிடைக்காது. ஒரு அடையாள அல்லது முகவரிச் சான்றாக மட்டுமே பயன்படுத்த முடியும்.

ஆதார் எண்ணை வைத்து வாங்கப்பட்ட மொபைல் எண் அறிய வேண்டுமா?


உங்கள் பெயரில் உங்களது ஆதார் எண்ணை  வைத்து வாங்கப்பட்ட அனைத்து சிம் கார்டுகளின் விவரங்கள் கீழே உள்ள தளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். அவற்றுள் உங்களுக்கு தெரியாமல் உங்கள் ஆதார் எண்ணை திருட்டுத்தனமாக பயன்படுத்தும் சிம் கார்டுகளை நீங்கள் தடை செய்ய முடியும். இது இந்திய அரசின் ஒரு நல்ல சேவை. 


https://tafcop.dgtelecom.gov.in/


மேலே உள்ள தளத்தை உங்கள் மொபைலில் ஓபன் செய்து உங்கள் மொபைல் எண்ணை டைப் செய்து வரும் OTP யை உள்ளீடு செய்ய உடனே உங்கள் ஆதார் எண்ணைக் கொண்டு வாங்கப்பட்டுள்ள அனைத்து சிம் கார்டுகளின் எண்களும் உங்களுக்கு தெரியும். அவற்றில் எதை வேண்டுமானாலும் நீங்கள் தடை செய்ய முடியும். நல்ல சேவை. இன்றே பயன்படுத்துங்கள்.

Monday, 24 May 2021

Psychologists Recommendations

 


ரச வகைகள்...










இட்லி டிபிஸ்...

இட்லியை குறுக்குவாட்டில் வெட்டி அதில் தக்காளிச் சட்னி அல்லது புதினா சட்னி தடவி மூடினால் அருமையான இட்லி சாண்ட்விச் தயார்.

இட்லி தட்டில் சிறிது மாவை விட்டு அதன் மேல் கெட்டி உருளைக்கிழங்கு மசாலா வைத்து மேலும் சிறிது மாவால் மூடி வேக வைத்தால் ஸ்டஃப்டு இட்லி தயார்.

கோபி மஞ்சூரியன் செய்வது போலவே இட்லித் துண்டுகளை வறுத்துப் போட்டு இட்லி மஞ்சூரியன் செய்யலாம்.

புளித்த இட்லி மாவை இட்லிகளாக வார்த்து விரல் பருமனுக்கு வெட்டி பொரித்தெடுத்து, உப்பு, மிளக்காய் பொடி, கரம் மசாலாத்தூள் தூவினால் இட்லி பிங்கர் சிப்ஸ் தயார்.

இட்லியை துண்டுகளாக்கி காய வைத்து பொரித்தால் கூழ் வத்தலைவிட சுவையாக இருக்கும்.

Sunday, 23 May 2021

ஆரோக்கியம் காக்க...

தினமும் காலையில் 1 - 2 சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடித்தால் எந்த நோயும் அணுகாதபடி உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.

முருங்கைக் கீரையை சமைத்து சாப்பிட்டாலும், சூப் வைத்து குடித்தாலும் இலையை காய வைத்து பொடியாக்கி எலுமிச்சை, தேன், வெல்லம் சேர்த்து டீ போட்டு குடித்தாலும் இடுப்பு வலி போன்ற வலிகள் குறைவதோடு, கண்பார்வை நன்கு தெரியும், ரத்த விருத்தி மற்றும் இரும்பு சக்தி கிடைக்கும்.

அதிக இருமல் ஏற்படும்போது ஒரு தேக்கரண்டி தேன் சாப்பிட்டால் இருமல் குறையும்.

குழந்தைகளுக்கு வரும் இருமலை வெற்றிலைச்சாறு மற்றும் சுண்ணாம்பு கலந்த கலவையை தொண்டை பகுதியில் தடவுவதன் மூலம் குணமாக்கலாம்.

வெற்றிலையை உணவுக்குப் பின் உண்டால் நல்ல செரிமானம் ஆகும்.  வெற்றிலையுடன் மிளகு சேர்த்துத் தயாரிக்கப்படும் கஷாயம் உணவு செரிமானத்துக்கும் சளி, கபம் போன்ற வற்றுக்கும் விஷ முறிவுக்கும் அருமருந்து.

வாரம் ஒருமுறை பாகற்காயை உணவில் சேர்த்து வந்தால் வயிற்றிலுள்ள பூச்சிகள் மடிந்துவிடும்.  நீரழிவு நோய் கட்டுக்குள் இருக்கும்.

அசைவ உணவிற்கு பிறகு சிறுதுண்டு வெல்லம், பனங்கற்கண்டு, கருப்பட்டி இவற்றில் ஏதாவது ஒன்றை சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.

வேப்பம்பூவை நெய்யில் வதக்கி, சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அல்சர் நோய் குணமாகும்.

பேரீச்சம்பழத்தில் கொட்டை நீக்கி சிறுதுண்டுகளாக நறுக்கி பாலில் சேர்த்து கலந்து, தேன், ஏலக்காய், குங்குமப்பூ கலந்து குடித்து வர உடலுக்கு தேவையான இரும்பு சத்து கிடைக்கும்.

நாணய ரகசியம்

 இந்திய ரூபாய் நோட்டுக்கள் நாசிக் நகரத்தில் அச்சிடப் படுகிறது என்பது அனைவருக்கும் தெரியும்.  ஆனால் இந்திய நாணயங்கள் எங்கே தயாரிக்கப்படுகின்றன?  இந்திய நாணயங்கள் இந்தியாவில் நான்கு இடங்களில் தயாரிக்கப்படுகின்றன.  தில்லி, மும்பை கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களே அவை.  நாம் புழங்கும் நாணயங்களில் அவற்றின் குறியீடுகள் உள்ளன எனபது உங்களுக்கு தெரியுமா?


நாணயங்களின் அடியில் தயாரிக்கப்பட்ட ஆண்டு குறிப்பிட்டிருக்கும் அல்லவா?... அதன் அடியில் ஒரு குறியும் இடம் பெற்றிருக்கும்.  அந்தக் குறியை வைத்து அந்த நாணயம் எந்த ஊரில் தயாரிக்கப்பட்டது என்பதை அறிய முடியும்.  


நாணயத்தில் உள்ள ஆண்டுக்கு கீழே ஒரு புள்ளிக் குறி இருந்தால் அது டெல்லியிலும், டைமண்ட் குறி இருந்தால் அது மும்பையிலும், நட்ச்சத்திரக் குறி இருந்தால் அது ஹைதராபாத்திலும், எந்தக் குறியீடும் இல்லாமலிருந்தால் அது கொல்கத்தாவிலும் தயாரிக்கப்பட்டது என்று அர்த்தம்.

Smile with Short stories


 

Language Translator

 


Monday, 26 April 2021

தி மார்ஷ்மெல்லோ டெஸ்ட்

 

பொதுவாக நாம் மேற்கொள்ளும் எந்தவொரு செயலிலும், அந்த செயலை உணர்ந்து, அதன் விளைவுகளைப் புரிந்து பிறகு அதைச் செய்வது ஒன்றுபிடித்தமான செயலை, விளைவுகளைப் பற்றி பெரிதும் கவலைப்படாமல் திருப்தியாக செய்வது மற்றொன்று.

 

மார்ஷ்மெல்லோ... முட்டையின் வெள்ளைக்கரு, சர்க்கரைப்பாகு மற்றும் ஜெலாடின் சேர்ந்த நம்ம ஊர் பஞ்சு மிட்டாய் போன்ற ஒரு மிருதுவான இனிப்புப் பண்டம். மேலை நாடுகளில் குழந்தைகளுக்கு மார்ஷ்மெல்லோ என்றால் கொள்ளைப் பிரியம்.

 

அப்படி நமக்குப் பிரியமான உணவை உண்பதில் உள்ள பொறுமைக்கும் அறிவாற்றலுக்குமிடையே உள்ள தொடர்பை விளக்க, இந்த மார்ஷ்மெல்லோக்களைக் கொண்டு, அமெரிக்கக் குழந்தைகளிடையே ஒரு சோதனையைச் செய்துள்ளார் அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக மனவியல் நிபுணரான பேராசிரியர் வால்ட்டர் மிஷல்.

 

பேராசிரியர் மிஷல் தனது பரிசோதனைக்குத் தேர்ந்தெடுத்தது நான்கிலிருந்து ஐந்து வயதிற்குட்பட்ட 32 குழந்தைகளைபதினாறு ஆண் குழந்தைகள், பதினாறு பெண் குழந்தைகள் என்று சரிசமமாகத் தேர்ந்தெடுத்துவிட்டார். ஒவ்வொரு குழந்தையையும், ஒரு தனி அறையில், ஒரு மேஜைக்கு முன் அமரச்செய்து, அவர்கள் முன்னே ஒரு மார்ஷ்மெல்லோவை கைக்கு எட்டும்படி வைத்துவிட்டார். "நான் திரும்பி வருவதற்குள் இதை நீ தொடாமல் இருந்தால் உனக்கு இதுவும், இதோடு சேர்த்து இன்னொன்றும் என இரண்டு மார்ஷ்மெல்லோவை பரிசாகத் தருவேன்!" என்றபடி அறையை விட்டு வெளியேறி இருக்கிறார்.

 

எதிர்பார்த்தது போல, சில குழந்தைகள் பேராசிரியர் கதவை மூடி வெளியேறியவுடன் உடனடியாகப் பாய்ந்து மார்ஷ்மெல்லோவை தின்றுவிட்டன. சில குழந்தைகள் கொஞ்சம் காத்திருந்து பிறகு ஆசையைக் கட்டுப்படுத்த முடியாமல் தின்கின்றன. ஆனால், சில குழந்தைகள் மட்டுமே ஆடிப்பாடி தமது கவனத்தை திசை திருப்பி கடைசிவரை மார்ஷ்மெல்லோவைத் தொடாமல் இரண்டாவது மார்ஷ்மெல்லோவை வென்றனவாம். இதில் ஆண் பெண் பேதங்கள் இல்லாமல் இரண்டு குழந்தைகளும் இருந்தன என்றும் அந்த ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

 

"இப்போதே ஒரு பரிசுகாத்திருந்தால் இரண்டு பரிசுகள்" என்று 1972-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த எளிய பரிசோதனைக்குப் பிறகு, இந்த ஆராய்ச்சியில் கலந்து கொண்டவர்களை 40 வருடங்களாகத் தொடர்ந்து கவனித்து, பிறகு வெளியிடப்பட்ட பரிசோதனை தொடர்ச்சியின் முடிவுகள், பெரும் ஆச்சரியத்தைத் தந்தன.

 

இரண்டாவது மார்ஷ்மெல்லோவை காத்திருந்து பெற்றுக் கொண்ட குழந்தைகள் வளர்ந்தபோது, அவர்களிடையே கற்கும் திறன் அதிகமாக இருந்திருக்கிறது. அதனால் அவர்கள் கூடுதல் மதிப்பெண்கள் பெற்றதோடு, அவர்களிடையே உடற்பருமன், பற்சிதைவு போன்ற உபாதைகள் குறைவாகவும் இருந்திருக்கிறது. மேலும், மது, புகை போன்ற போதை பழக்கவழக்கங்களுக்கு அடிமையாதல் குறைவாகவும், அனைத்திற்கும் மேலாக வாழ்க்கையில் சிக்கல்களை எதிர்கொள்ளும் ஆற்றல் அதிகமாக இருந்ததாகவும் மிஷலின் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்க 'தி மார்ஷ்மெல்லோ டெஸ்ட்' உலகப் பிரசித்தி பெற்றது.

 

இவர்கள் இப்படி, செயல்பட்டதை, ‘காக்னிட்டிவ் கன்ட்ரோல்’ (Cognitive Control) என்று அழைக்கும் மனவியல் மருத்துவர்கள் அதை எளிமையாக விளக்குகின்றனர். பொதுவாக நாம் மேற்கொள்ளும் எந்தவொரு செயலிலும், அந்த செயலை உணர்ந்து, அதன் விளைவுகளைப் புரிந்து பிறகு அதைச் செய்வது ஒன்றுபிடித்தமான செயலை, விளைவுகளைப் பற்றி பெரிதும் கவலைப்படாமல் திருப்தியாக செய்வது மற்றொன்று.

 

மார்ஷ்மெல்லோ பரிசோதனையில், இந்தக் குழந்தைகள் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல், அலுத்துக் கொள்ளாமல் செய்வதைத் திருப்தியாய் செய்தன. அதனால் இவர்களுக்குக் கிடைத்த பரிசுகள் இரண்டு, பலன்கள் பல மடங்கு என்பது விளங்குகிறது என்கிறார்கள்.

 

ஆக, இது குழந்தைகளுக்கான டெஸ்ட் மட்டுமல்லஇதேபோல நமக்குப் பிடித்த ஒரு மார்ஷ்மெல்லோவைத் தேர்ந்தெடுத்து நமக்கும் ஒரு டெஸ்ட் வைத்துக்கொள்வோம். நமக்கும் இந்த Delay in Gratification… அதாவதுபொறுமையை காத்தல்என்ற குணம் இருக்கிறதா என்று பார்த்துக் கொள்வோம்.

 

ஏனென்றால், உங்களது ஆசையைக் கட்டுப்படுத்தி, உங்களது பொறுமையை சிறிது நீடித்தால், ஷாப்பிங்கின் போது உங்களது பணத்தை நீங்கள் சேமிக்கலாம்உங்களது ஆசையைக் கட்டுப்படுத்தி, உங்களது பொறுமையை சிறிது நீடித்தால், சினிமா, கிரிக்கெட், சமூக வலைதளங்களில் தூக்கத்தை தியாகம் செய்வதைத் தவிர்க்கலாம். உங்களது ஆசையைக் கட்டுப்படுத்தி, உங்களது பொறுமையை சிறிது நீடித்தால், விடியற்காலையில் எழுந்து, இன்னும் இரண்டு உடற்பயிற்சிகளை கூடச் செய்யலாம்... என இன்னும் பலவற்றையும் இந்த மார்ஷ்மெல்லோ டெஸ்ட் புரிய வைக்கிறது.

 

ஆம்ஆசைக்கும், பொறுமைக்கும் இடையேயுள்ள ஒரு சிறு இழையில் தான், திருப்தி எனும் மந்திரமும், அதனூடே அழகிய வாழ்க்கையும் உள்ளது!

 

Thursday, 1 April 2021

ரிசர்வ் வங்கியின் வரலாறும், அம்பேத்கர் ஆலோசனையும்!


இன்று முட்டாள்கள் தினம், அறிவிலிகள் தினம் என சமூக ஊடகங்களில் நண்பர்களைக் கிண்டல் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால், இன்றுதான் இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கப்பட்டது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.


டாக்டர் அம்பேத்கர் `இந்திய ரூபாய் - பிரச்னைகள், தீர்வுகள்' என்ற புத்தகத்தை எழுதி இருந்தார். இந்தப் புத்தகம் பொருளாதாரம் குறித்த அரிய பல ஆலோசனைகளை முன்வைத்தது. இது அப்போது ஆண்ட ஆங்கிலேயர்களை ஆச்சர்யப்படுத்தியது. இந்தப் புத்தகத்தின் சாரத்தை அதில் இடம்பெற்று இருந்த பரிந்துரைகளை, இந்திய கரன்சி மற்றும் நிதிக்கான ராயல் குழுவுக்கு 1925-ல் டாக்டர் அம்பேத்கர் சமர்ப்பித்தார். இதனை ஆராய்ந்த அக்குழு ஆச்சர்யப்பட்டது. அவர் முன்வைத்த அத்தனை பரிந்துரைகளையும் முழுமையாக அந்தக் குழு ஏற்றுக்கொண்டது. இதை அடிப்படையாக வைத்து `ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934'-ஐ அது உருவாக்கியது.


ஏப்ரல் ஒன்றும் ரிசர்வ் வங்கியும்

இதையடுத்து 1935 ஏப்ரல் 1 அன்று ரிசர்வ் வங்கி தொடங்கப் பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், 1949-ம் ஆண்டு இந்த வங்கி நாட்டுடைமை ஆக்கப்பட்டது.  அம்பேத்கர் வரையறுத்த வரைமுறைகள், சட்டதிட்டங்கள் மற்றும் நிர்வாக அமைப்பின்படிதான் இந்திய ரிசர்வ் வங்கி அமைக்கப் பட்டிருக்கிறது.

முதலில், கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படத் தொடங்கி, தற்போது மும்பையைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது, ரிசர்வ் வங்கி.  இதில் என்ன சுவாரஸ்யம் என்றால், இந்திய ரிசர்வ் வங்கி இந்தியாவுக்கு மட்டுமல்லாமல், மேலும் இரண்டு நாடுகளுக்கு மத்திய வங்கியாகச் செயல்பட்டிருக்கிறது.

சரி, அதைத் தெரிந்துகொள்வதற்கு முன், இந்திய ரிசர்வ் வங்கியை நிர்வகிப்பது யார் எனத் தெரிந்துகொள்வோம்.  ஒரு ஆளுநர், 4 துணை ஆளுந‌ர்கள், நிதி அமைச்சகப் பிரதிநிதிகள் இருவர், அரசால் நியமிக்கப்படும் இயக்குந‌ர்கள் 10 பேர் மற்றும் நான்கு மண்டலங்களின் மூலம் 4 பேர். ஆக மொத்தம் 21 இயக்குந‌ர்கள் கொண்ட மத்திய வாரியம்தான் ரிசர்வ் வங்கியை இயக்குகிறது. இயக்குந‌ர்களின் பதவிக் காலம் நான்கு ஆண்டுகள்.

இந்தியாவின் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவது, ஜி.டி.பி மற்றும் பணவீக்கத்தைக் கண்காணிப்பது, மக்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்கச்செய்வது, வாடிக்கையாளர் களுக்கு பேங்கிங் ஓம்புட்ஸ்மேன் போன்ற சேவைகளை வழங்குவது எனப் பல முக்கியப் பணிகளைச் செய்துவருகிறது.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது, வங்கிக் கடன்களைக் கட்டுப்படுத்துவது, வங்கிகளின் வட்டி விகிதங்களை நிர்ணயிப்பது, இந்திய ரூபாய் நோட்டுகளின் வடிவமைப்பைத் தீர்மானித்து, மத்திய அரசிடம் கொடுத்து ஒப்புதல் வாங்கிய பின் அச்சிடுவது, இந்தியாவில் எந்த ரூபாய் நோட்டு செல்லும், செல்லாது என்று தீர்மானிப்பது போன்ற நாட்டின் நிதி சம்பந்தப்பட்ட சிக்கலான சேவைகளைச் செய்துவருகிறது.

புதிய வங்கிகளுக்கு அனுமதி வழங்குவது, இந்தியாவில் ஒட்டுமொத்த கடன் அளவு மற்றும் அதற்கான வட்டி விகிதங்களை நிர்ணயிப்பது, கே.ஒய்.சி விவரங்களைச் சரிபார்ப்பது மற்றும் நெறிப்படுத்துவது, வெளிநாட்டு வர்த்தகங்கள், அந்நியச் செலாவணிகள் போன்றவற்றையும் கவனிக்கிறது.

இரண்டு நாடுகள், ஒரு வங்கி 1937-ல் பர்மா, தனிநாடு ஆன போதிலும், 1947 ஏப்ரல் வரை, நம்முடைய ரிசர்வ் வங்கிதான் அவர்களுக்கும் மத்திய வங்கியாக இருந்தது.  இடையில் 1942 முதல் 1945 வரை மூன்று ஆண்டுகள் மட்டும் பர்மா, ஜப்பானின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. அந்த சமயம் நீங்கலாக, 7 ஆண்டுகளுக்கு ரிசர்வ் வங்கிதான் அவர்களுக்கு மத்திய வங்கி.

1947 ஆகஸ்ட் 14-ல் உதயமான பாகிஸ்தானுக்கு 1948 ஜூன் மாதம் `பாகிஸ்தான் ஸ்டேட் வங்கி' உருவாகும் வரை, இந்திய ரிசர்வ் வங்கிதான் மத்திய வங்கியாக விளங்கியது.

Translate