இந்திய ரூபாய் நோட்டுக்கள் நாசிக் நகரத்தில் அச்சிடப் படுகிறது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்திய நாணயங்கள் எங்கே தயாரிக்கப்படுகின்றன? இந்திய நாணயங்கள் இந்தியாவில் நான்கு இடங்களில் தயாரிக்கப்படுகின்றன. தில்லி, மும்பை கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களே அவை. நாம் புழங்கும் நாணயங்களில் அவற்றின் குறியீடுகள் உள்ளன எனபது உங்களுக்கு தெரியுமா?
நாணயங்களின் அடியில் தயாரிக்கப்பட்ட ஆண்டு குறிப்பிட்டிருக்கும் அல்லவா?... அதன் அடியில் ஒரு குறியும் இடம் பெற்றிருக்கும். அந்தக் குறியை வைத்து அந்த நாணயம் எந்த ஊரில் தயாரிக்கப்பட்டது என்பதை அறிய முடியும்.
நாணயத்தில் உள்ள ஆண்டுக்கு கீழே ஒரு புள்ளிக் குறி இருந்தால் அது டெல்லியிலும், டைமண்ட் குறி இருந்தால் அது மும்பையிலும், நட்ச்சத்திரக் குறி இருந்தால் அது ஹைதராபாத்திலும், எந்தக் குறியீடும் இல்லாமலிருந்தால் அது கொல்கத்தாவிலும் தயாரிக்கப்பட்டது என்று அர்த்தம்.