Sunday, 15 March 2015

தமிழாக்கம்!

Whistle Blower இடித்துரைப்பாளர்
Double Agent இரண்டக உளவாளி
Internship பணிமானவர்
Secularism மதத்தலையீட்டின்மை
Observer நோக்காளர்
Risk நேரிடர்
Nota வேண்டா
Sources ஆதார வாயில்கள்
Sweep அலைப்பெருக்கு
Competition Commission of India இந்தியப் போட்டிமுறை ஆணையம்
Twitter சுட்டுரை
Chat சொல்லாடல்
Anti-biotic நச்சுயிர்க்கொல்லி
Survival பிழைத்தல்
Real Estate இடைநிலைப் பயன்மாற்றம்
Clinic மருத்துவக் கைமனை
Mindfulness மனவிழிப்பு
Affordability தகுநிலை
Busy முடுக்கடி
Seriousness தொடர்வினை
Transaction கொடுகொள்
Benami பதிலி
Work from Home உள்ளகப்பணி
Home sick வீட்டேக்கம்
Interaction கலந்து வினையாடல்
Payment கொடுக்கல்
Cyber-crime மின்னூடக் குற்றம்
Liaison இணக்கத் தொடர்பு, இணக்கத் தொடர்பாளர்
Representative சார்ந்தாற்றுநர்
Upset நிலைகுலை, நிலைகுலைதல்
Selfie கைப்படம்
Spam பதடி
Spam mail பதடி அஞ்சல்
Voice Mail பேச்சுக்குரல் அஞ்சல்
Whats App கட்செவி அஞ்சல்
Master plan செயலுறுதித் திட்டம்
Think tank கருத்தூற்றுக்களம்
Tick சரிகுறி
Over take முந்தி மேற்செல்
Smart Phone அறிதிறன்பேசி
E-Book Reader மின்நூல் தூக்கி
Copy Editor பதிப்பாக்குநர்
Back-up வைப்புநகல்
Pink Slip பணிவிரட்டோலை
Access பெறுவாயில்
Upward Mobility மேல்நிலைப் பெயர்ச்சி
Wi-Fi கைமெய்
Vertical நிற்கை நிலை
Hang தொங்கல்
Hot Spot இணையப் பற்றுக்கோடு
Return Gifts எதிர்சீர்

காய்களின் மகிமை


பாகற்காய் - முற்றாத பாகற்காயை மிக்ஸியில் போட்டு நன்றாக விழுது பதத்துக்கு அரைக்கவும்.



இந்த விழுதை ஓர் எலுமிச்சம்பழ அளவு எடுத்து வாயில் போட்டுக் கொண்டு சிறிதளவு வெந்நீரை அருந்தவும். இது போன்று உணவை சாப்பிட்ட அரைமணி நேரத்துக்கு பின், தொடர்ந்து 40 நாள் சாப்பிட்டு வர சர்க்கரை வியாதி முழுமையாகக் குணமாகும்.

முருங்கைக் கீரை - முருங்கை இலைச்சாறை தினசரி 50 மில்லி அளவுக்குச் சாப்பிட சர்க்கரை நோய்க்கு சிறந்த மருந்தாகும்.

முருங்கை கீரையைப் பொரித்து வேர்க்கடலையை தூள் செய்து சேர்த்துச் சாப்பிட மலச்சிக்கல் நீங்கும்.

முருங்கைத் துளிரும் கல்யாண முருங்கைத் துளிரும் சம அளவு அரைத்து சாறு எடுத்துக் கொடுக்க கல்லீரல், மண்ணீரல் நோய் நீங்கும்.



முருங்கை ஈர்க்கை இடித்து சிறிது சீரகம் சேர்த்து ரசம் வைத்துக் கொடுக்க கால் வீக்கம் குறையும்.

முருங்கைக் கீரையை அரைத்து எலுமிச்சை அளவு தினம் உண்டு வர பித்த மயக்கம், மூர்ச்சை நீங்கும்.

எப்படி பேச வேண்டும்?


கோபமாகப் பேசினால் குணத்தை இழப்பாய்!
அதிகமாகப் பேசினால் அமைதியை இழப்பாய்!
வெட்டியாகப் பேசினால் வேலையை இழப்பாய்!
வேகமாகப் பேசினால் அர்த்தத்தை இழப்பாய்!
ஆணவமாகப் பேசினால் அன்பை இழப்பாய்!
பொய்யாகப் பேசினால் நற்பெயரை இழப்பாய்!
சிந்தித்துப் பேசினால் சிறப்பொடு இருப்பாய்!!

வெள்ளி கறுத்துப் போகாமல் இருக்க!


  • வெள்ளிப் பாத்திரங்களோடு கூடவே சிறு கற்பூரக்கட்டிகளைப் போட்டு வைத்தால் பாத்திரம் கறுத்துப் போகாது.

  • வெள்ளிப் பாத்திரங்களை டிஷ்யூ பேப்பரில் சுற்றி மரப் பொட்டியில் வைத்தாலும் கறுத்துப் போகாது.

  • உருளைக்கிழங்கு தோல், விபூதி கொண்டு வெள்ளிச் சாமான்களைத் தேய்த்தால் கறுப்பு காணாமல் போகும்.

  • கொதிக்கும் தண்ணீரில் அரைத்தேக்கரண்டி ஆப்பசோடா, அலுமினிய ஃபாயில் பேப்பர்களைப் போடவும். இதில் கறுத்த வெள்ளிப் பாத்திரங்களை போட்டு ஐந்து நிமிடங்களுக்குப் பின் எடுத்தால் பாத்திரம் பளபளவென இருக்கும்.

  • வெள்ளி நகைகள் வைக்கும் பெட்டியில் ஒரு சாக்பீஸ் போட்டு வைத்தால் நகைகள் கறுகாமலிருக்கும்.

  • வெள்ளிப் பாத்திரங்களை காற்று படாமல் பிளாஸ்டிக் கவர்களுக்குள் போட்டு கட்டி வைத்தால் புதிது போல் இருக்கும்.

  • வெள்ளிப் பாத்திரங்களை ஒருநாள் முழுவதும் மோரில் ஊறவைத்து கழுவினால் புதியது போல பளிச்சிடும்.

Saturday, 14 March 2015

தெரிந்து கொள்ளுங்கள்!


'மொபெட்' என்பது ஆங்கிலத்தில் 'மோட்டரிஸ்ட் பெடலிங்' என்பதன் சுருக்கம்.




'பாப்புலர் மியூஸிக்' என்பதன் சுருக்கமே 'பாப் மியூஸிக்'.



பதினான்கு இரவுகள் - 'ஃபோர்ட்டீன் நைட்ஸ்' என்பதே 'ஃபோர்ட்நைட்' என்பதன் சுருக்கம்.




நல்லெண்ணெய், நெய் - இவைகளை 'அக்மார்க்' இருக்கிறதா என்று பார்த்து வாங்குகிறோமே..., 'அக்ரிகல்சுரல் மார்க்கெடிங்' என்பதன் சுருக்கமே அது.



'டிராயிங் ரூம்' என வரவேற்ப்பு அறையை சொல்கிறோம் அல்லவா. அது 'வித்டிராயிங் ரூம்'. அதாவது விருந்து உண்டபின் வந்தவர்கள் அமர்ந்து பின்னர் செல்வதை அவ்வாறு கூறனர். பின்னர் 'வித்' என்ற முன் சேர்க்கை காணாமல் போய் 'டிராயிங் ரூம்' என்றாகிவிட்டது.


Monday, 9 March 2015

ருத்திராட்சம்



ருத்திராட்சம் வெறும் நாகரீகத்திற்காக அணிகிற அணிகலன் அல்ல. எங்கெல்லாம் ருத்திராட்சம்  வணங்கப் படுகின்றதோ அங்கெல்லாம் திருமகள் உறைகிறாள். ருத்திராட்ச்சத்தை அணிவதால் ஒருவர் அகால மரணத்திலிருந்து தப்பலாம். ருத்திராட்சம் குண்டலினியை (ஆதம இன்ப முனை) எழுப்புவதில் துணை புரிகின்றது. இவ்வுலகப்பேறு, விண்ணுலகப்பேறு ஆகியவற்றை அடைவதில் ருத்திராட்சம் உதவுகின்றது. இது முழுக் குடும்பத்தையும் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் வாழச் செய்யும். ருத்திராட்சம் ஓர் ஆபூர்வமான மூலிகைப் பொருள் என்பது ஆராய்ச்சியாளர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு விஷயமாகும். ருத்திராட்சம் அதனுடைய உயிரியல் மருத்துவப் (Bio-medical) பண்புகளுக்கும், மன அழுத்தம், அதி உயர்ந்த இரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் தன்மைக்கும் பெயர் போனது. உருத்திராக்கம் சுய ஆற்றலையும், சுய அன்பையும் மேம்படுத்த உதவும். அணிவோரின் உள் ஒளியை இது மேலோங்கச் செய்கிறது. இது பெரியம்மை, காக்காய் வலிப்பு, கக்குவான் போன்ற பல்வேறு அபாயகரமான நோய்களைக் குணப்படுத்த வல்லது. குறிப்பிட்ட முறையில், மருத்துவ விதி முறைகளைக்கேற்பக் கையாளப்பட்டால் இது மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த புண்களையும் கூடக் குணப்படுத்தும். இது அணிவோருக்கு மன அமைதியையும், மன ஊக்கத்தையும், புத்திக் கூர்மையும் அளிக்கிறது. 38 வகையான உருத்திராக்கத்தில், 21 வகை மிக பிரசித்தம். முகத்தைப் பொறுத்தே ஒரு முகம், இரு முகம் என்று வரிசைப் படுத்தப்படுகிறது. ஒவ்வொரு முகத்திற்கும் ஒவ்வொரு பலன் உண்டு.



ஒரு முகம்மந்திரம் - ஓம் நமச்சிவாய, ஓம் ஹரீம் நமஹ

ஒரு முகமுடைய ருத்திராட்சம் சூரியனால் ஆளப்படுகிறது. இந்த ருத்திராட்சம் ஏனைய எல்லா முகங்களையுடைய ருத்திராட்சகங்களுக்கும் அரசனாகையால்,இது தூய உணர்வைக் (Pure consciousness) குறிக்கிறது. அணிபவருக்குப் போகமும் மோட்சமும் கிட்டும். இவர் ராஜா ஜனகர் போன்று வாழ்வர். இவர் வேண்டும் போது எல்லா சுகங்களையும் அனுபவிப்பர். எனினும் பற்றற்றவராய் இருப்பர். ஒரு முகத்து உருத்திராக்கம், நோய்களைச் சரியாகக் கண்டறிவதற்கும், அறுவை சிகிச்சையில் வெற்றி பெறுவதற்கும் உதவுவதால் மருத்துவர்களுக்கு இது மிகவும் உகந்ததாகும்.

இரண்டு முகம்மந்திரம் - ஸ்ரீ கௌரி சங்கராய நமஹ, ஓம் நமஹ

இரு முகமுடைய ருத்திராட்சத்தை ஆளும் கோள் சந்திரன். இது பகவான் சிவனும், தேவி பார்வதியும் (சக்தி) இணைந்த உருவமான அர்த்த நாரீஸ்வரரைக் குறிக்கிறது. (மாதொரு பாகன்) இந்த ருத்திராட்சம் அணிவோருக்கு 'ஒற்றுமை' (unity) உணர்வை அளிக்கும். இந்த ஒற்றுமை குரு-சிஷ்யன், பெற்றோர்-குழந்தைகள், கணவன்-மனைவி, நண்பர்களிடையே உள்ள தொடர்பைக் குறிக்கலாம். ஒருமைத் தன்மையை நிலை பெறச் செய்வது இதன் தனித்தன்மையாகும்.

மூன்று முகம்மந்திரம் - ஓம் கிளீம் நமஹ

இந்த மும்முகமுள்ள ருத்திராட்சத்தை ஆளும் கோள் செவ்வாய்.இது தீக்கடவுளை குறிக்கிறது. எல்லாப் பொருட்களையும் உண்ட பின்னரும் தீ தூய்மையாக இருப்பது போல் மூன்று முகமுள்ள உருத்திராக்கத்தை அணியவரும் அருள் கிட்டிய போது, தனது வாழ்க்கையில் பாவங்களில், தவறுகளிலிருந்து விடுபட்டுத் தூய நிலையை அடைகின்றார். இந்த மூன்று முக ருத்திராட்சம் தாழ்வு மனப்பான்மை (Inferiority Complex) உள்ளார்ந்த பயம் (Subjective fear) குற்ற உணர்வு (Guilt) மனச்சோர்வு போன்றவற்றால் துன்பப்படுபவர்களுக்கும் உகந்ததாகும்.

நான்கு முகம்மந்திரம - ஓம் ஹரீம் நமஹ

இந்த நான்கு முகமுள்ள ருத்திராட்சத்தை ஆளும் கோள் புதன். இது பிரம்மனைக் குறிக்கிறது. அணிவோருக்கு அருள் கிடைத்த போது ஆக்க சக்தி கிட்டுகிறது. மாணவர்கள், அறிவியலாளர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கு நற்பயன் அளிக்க வல்லது. ஞாபகசக்தி, கூர்ந்த மதி புத்தி சாதுர்யம் ஆகியவற்றை மேம்படுத்துகிறது. நான்முக ருத்திராட்சகங்கள் மூன்றினை வலது கையில் கட்டினால் அவர் முன் யாரும் எதிர்த்து நிற்க முடியாது.

ஐந்து முகம்மந்திரம் - ஓம் ஹரீம் நமஹ

ஐந்து முகங்களுடைய ருத்திராட்சத்தின் ஆளும் கோள் வியாழன். இது மங்களகரத்தின் குறியீடான சிவனை குறிக்கும். இந்த ஐந்து முகமுடைய உருத்திராக்க மாலை அணிதோருக்கு உடல் நலம், அமைதி ஆகியன கிட்டும். இது ஒருவரின் இரத்த அழுத்தம், இதய நோய்கள் ஆகியவற்றைக் கண்காணிக்கிறது. இந்த ருத்திராட்ச மாலையை ஜபம் செய்வதற்கும் பயன்படுத்துவர். இந்த மாலையை அணிவோருடைய மனம் அமைதியாக இருக்கும். அத்துடன் இதை அணிபவர்களுக்கு அகால மரணம் ஏற்படாது என்பதில் சந்தேகம் ஏதுவுமில்லை.

ஆறு முகம்மந்திரம் -ஸ்வாமி கார்த்திகேயாய நமஹ

இந்த ஆறு முக ருத்திராட்சத்தை ஆளும் கோள் வெள்ளி. இந்த உருத்திராக்கம் சிவனின் இரண்டாவது மகனான கார்த்திகேயக் கடவுளைக் குறிக்கும். இதை அணிந்து வேண்டியோருக்கு அறிவு, மேம்படுத்தப்பட்ட புத்தி, மனத்திட்பம், திடமான மனம் ஆகியவை அருளப்படும். இந்த ஆறு முக ருத்திராட்சம், மேலாளர்கள், வணிகர்கள், நிர்வாகிகள், பத்திரிகையாளர்கள், ஆகியோருக்கு உகந்தது. இது ஒருவரின் பிறப்புறுப்புகளை ஆள்கிறது.

ஏழு முகம்மந்திரம் - ஓம் மஹா லட்சிம்யை நமஹ ஓஅம் ஹீம் நமக

இந்த ஏழு முக ருத்திராட்சத்தை ஆளும் கோள் சனி. இது தேவி திருமகளைக் குறிக்கும். இதை அணிவோருக்கு நல்ல உடல் நலம் அருள் பாலிக்கப்படும். உடல் தொடர்பான துன்பங்கள், நிதித் தொல்லைகள், மனத் துன்பங்கள் ஆகியவற்றால் வருத்த முற்றிருப்போர் இந்த ருத்திராட்சத்தை அணிதல் வேண்டும். இந்த ஏழு முக உருத்திராக்கத்தை ஒருவர் அணிவதால் அவருக்கு வணிகம், பணி ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்படுத்துவதுடன் அவர் மகிழ்வாகக் கழிக்க முடிகிறது.

எட்டு முகம்மந்திரம் - ஒம் ஹீம் நமஹ, ஓம் கணேஷாய நமஹ

இந்த எட்டு முகமுடைய ருத்திராட்சத்தின் ஆளும் கோள் இராகு. இது பகவான் கணேசரைக் குறிக்கிறது. இது முயற்சிகளிலும் தடைகளை நீக்கி வெற்றியைத் தருகிறது. அணிவோருக்கு ரித்திகள் (Riddhis), சித்திகள் (Siddhies) ஆகிய எல்லாப் பேறுகளையும் அளிக்கும். இதை அணிவோரின் எதிரிகள் அழிந்து போவார்கள். அதாவது இவர்கள் எதிரிகளின் மனத்தையும், நோக்கங்களையும் இந்த உருத்திராக்கம் மாற்றி விடும்.

ஒன்பது முகம்மந்திரம் - நவ துர்க்காயை நமஹ, ஓம் ஹரீம் ஹும் நமஹ

இந்த ஒன்பது முக ருத்திராட்சத்தை ஆளும் கோள் கேது. இது தேவி துர்க்கையைக் (சக்தி) குறிக்கிறது. இதை அணிந்து வணங்குபவர்களுக்கு அன்னைக் கடவுள் வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்வதற்கு அதிக சக்தி, ஆற்றல், செயல் திறம், அச்சமின்மை ஆகியவற்றை அளிப்பாள்.

பத்து முகம்மந்திரம் - ஸ்ரீ நாராணாய நமஹ,ஓம் ஹ்ரீம் நமஹ

இந்த பத்து முகமுள்ள ருத்திராட்சத்திற்கு ஆளும் கோள் என்று ஒன்றுமில்லை. கோள்களினால் ஏற்படும் தீய பலன்களையும் இது சாந்தப்படுத்தும். பத்துத் திசைகளினதும், பத்து அவதாரங்களிலும் செல்வாக்கு இந்தப் பத்துமுக ருத்திராட்சத்தில் உண்டு. ஒருவரின் உடலுக்கு இது கேடயம் போல் செயல்பட்டு, எல்லாத் தீய சக்திகளையும் விரட்டுகிறது. இதை அணிந்து வணங்குவோர்களுடைய குடும்பம் பரம்பரை பரம்பரையாகச் செழிப்புற்று வாழும்.

பதினோரு முகம்மந்திரம் - ஒம் ஸ்ரீ ருத்திர நமஹ, ஒம் ஹரீம் நும் நமஹ

இது பகவான் அனுமானைக் குறிக்கும். இது வணங்கி வேண்டியோருக்கு அறிவு, நேர்மையான நீதி ஆற்றல் மிக்க சொல்லாட்சி, துணிவுள்ள வாழ்க்கை, வெற்றி ஆகியனவற்றை அருளும். எல்லாவற்றிற்கும் மேலாக, விபத்தினால் மரணம் ஏற்படுவதை இது தடுக்கும். இதை அணிவோர் அச்சமற்றவராக ஆவார். தியானத்திற்கும் இது உதவும்.

பன்னிரண்டு முகம்மந்திரம் - சூர்யாய நமஹ ஓம் க்ரோன் க்ஷோண் ரவுண் நமஹ

இது சூரியக் கடவுளைக் குறிக்கும். இதை அணிவோர் அளவற்ற நிர்வாகத் திறனைப் பெறுவர். அத்துடன் சூரியனின் குணங்களையும் பெறுவர். இக்குணங்களால் ஒருவர் என்றும் பிரகாசிக்கும் ஒளியுடனும், பலத்துடன், பிறரை ஆட்சி செய்து வருவர். இந்தப் பன்னிரண்டு முக ருத்திராட்சம் மந்திரிகள், அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள், வணிகர்கள், நிர்வாகிகள் போன்றோருக்கு உகந்தது. இது வியக்கத்தக்க வகையில் பயனளிக்க வல்லது.

பதின்மூன்று முகம்மந்திரம் - ஓம் ஹரீம் நமஹ

இது இந்திரனைக் குறிக்கும். தொழுது வேண்டியவர்களுக்கு மனிதன் விரும்பத்தக்க எல்லா சுகங்களையும் இது அளிக்கும். செல்வம், மாட்சிமை ஆகியவற்றை அளிப்பதுடன் உலகத்து ஆசைகள் அனைத்தும் இது நிறைவேற்றும். அத்துடன் அஷ்டமா சித்திகளையும் இது அளிக்க வல்லது. இதை அணிவோரை காமக்கடவுள் விரும்புவர். மகிழ்ச்சி அடைந்த காமக்கடவுள், அணிவோருக்கு உலகத்து ஆசைகள் எல்லாவற்றையும் நிறைவேற்றுவார்.

பதினான்கு முகம்மந்திரம் - ஓம் நமஹ சிவாய

இந்தப் பதினான்கு முகமுடைய ருத்திராட்சமே அதி உயர்ந்த விலை மதிப்பற்ற தெய்வீக மணியாகும். அதுவே தேவ மணியுமாகும். இந்த உருத்திராக்கம் அணிவோருடைய ஆறாவது புலனை விழிக்கச் செய்கிறது. அதனால் அவர் எதிர்கால நிகழ்வுகளை முன் கூட்டியே அறிகின்றார். இதை அணிவோர் தாம் எடுத்த முடிவுகளில் ஒரு போதும் தோல்வியடைவதில்லை. இதை அணிவோர் இடர்கள், துன்பங்கள், கவலைகள் எல்லாவற்றையும் கடந்து விட முடிகிறது.மேலும், அணிவோருக்குப் பாதுகாப்பையும் எல்லாச் செல்வங்களையும் இது கொடுக்கிறது.

பதினைந்து முதல் இருபத்தொன்று வரை உள்ள முகங்கள் பண்டையக் கால முனிவர்கள் இந்த ருத்திராட்ச மணிகளை பூஜை மேடையில் வைக்கும்படியும் அதன் வழி முழுக் குடும்பத்திற்கும் செழிப்பைக் கொடுக்கின்றன. பகவான் ருத்திராட்சத்தின் அருளைப் பெறும்படியும் அறிவுரை கூறியுள்ளனர்.இப்படி ஒவ்வொரு முகத்திற்கும் ஒவ்வொரு பலன் உண்டு.

கௌரி சங்கர்மந்திரம் - ஓம் கெளரி சங்கராய நமஹ

இயல்பாகவே ஒன்றாக இணைந்த இரு ருத்திராட்சங்களை கௌரி சங்கர் என அழைக்கப் படுகின்றன. இது சிவனும் பார்வதியும் சேர்ந்த உருவானதாகக் கொள்ளப் படுகின்றது. இது கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ள உதவுகிறது. எனவே இந்த ருத்திராட்சம் குடும்பத்தில் அமைதியும் சுகமும் விளங்க வைக்கும் சிறந்த பொருளாக கருதப்படுகிறது. கௌரி சங்கர் ருத்திராட்சத்தை ஒருவர் வழிப்படும் இடத்தில் வைத்துத் தொழுது வந்தால் அவருக்கு ஏற்படும் துன்பம், வேதனை, உலகியல் தடைகள் எல்லாம் அழிகின்றன. குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் மேலோங்குகின்றன. 

ருத்திராட்சத்தை 3, 4, 5, 6, எண்ணிகையில் வளையமாகக் கோர்த்து அணிவர். கழுத்தில் அணியும் மாலைகள் 27, 54, 108 என்ற கணக்கில் இருக்கும். கழுத்தில், கையில் அணியும் உருத்திராக்கம் அங்குபங்சர் போல் செயல்பட்டு பயன் அளிக்கும்.

மணி அளவு - பெரும்பாலும் இப்போது பலரும் மிகச் சிறிய அளவுடைய மணிகளையே விரும்பிப் பூணுகிறார்கள். எனினும் உருத்திராக்க விசிட்டம் என்னும் நூலில் எந்த அளவு உருத்திராக்க மணி சிறப்புடையது என்று கூறப் பெற்றுள்ளது.

நெல்லிக்கனி அளவுள்ள மணி உத்தமமானது.

இலந்தைக் கனிஅளவுள்ளது மத்திமம்.

கடலை அளவுடையது அதமம்.

செபமாலைக்குரிய மணிகள்இரண்டு முகமுடையதும் மூன்று முகமுடையதும் செபமாலைக்கு உரியது அன்று; பத்து முகமும் பதின்மூன்று முகமும் பழுதுடையது; மற்றனைத்தும் உத்தமம்.


அளவு


ஒரு குருவைப் பிரசங்கம் செய்ய அழைத்திருந்தார்கள். அவரை அழைத்து வர குதிரைக்காரன் ஒருவன் போயிருந்தான். அன்று பலத்த மழை. பிரசங்கத்தை கேட்க ஒருவரும் இல்லை.

"என்னப்பா, பிரசங்கத்தை கேட்க உன் ஒருவனை தவிர யாருமே இல்லைய..என்ன செய்யலாம்?" என்று குதிரைக்காரனிடம் கேட்டார் குரு .

"அய்யா நான் அதிகம் படிக்காதவன்.  நான் 30 குதிரைகள் வளர்க்கிறேன். நான் குதிரைக்கு புல் வைக்கப் போகும்போது, எல்லாக் குதிரையும் வெளியே போய் ஒரே ஒரு குதிரை மட்டுமே இருந்தாலும், அந்த ஒண்ணுக்கு மட்டும் புல் வெச்சுடுவேன்" என்றான்.




உடனே குரு கொஞ்சம் கூட தாமதிக்காமல் பிரசங்கத்தை ஆரம்பித்தார். பாவம், புண்ணியம், மந்திரம், தந்திரம், துவைதம், அத்வைதம் என்று நிறைய விஷயங்க்களைப் பிரசங்கம் செய்துவிட்டு குதிரைக்காரனிடம் "என் பிரசங்கம் எப்படி இருந்துச்சுப்பா?" என்றார்.



குதிரைக்காரன் சொன்னான், "அய்யா நான் குதிரைக்குப் புல் வைக்கும்போது ஒரு குதிரைக்கு வேண்டிய புல்லை மட்டும்தான் வைப்பேன். 30 குதிரைக்கு வைக்க வேண்டிய புல்லை ஒரு குதிரைக்கு வைக்கவே மாட்டேன்."


நாடாளுமன்றம்





நாடாளுமன்றத்தில் நட்சத்திரக் குறியிட்ட கேள்விகள், நட்சத்திரக் குறியிடாத கேள்விகள் என் இருவகை உண்டு.

நட்சத்திரக் குறியிட்ட கேள்விகளுக்கு வாய்மொழியாகப் பதில் அளிக்கப்படும்.

நட்சத்திரக் குறியிடாத கேள்விகளுக்கு எழுத்து மூலமாகப் பதிலளிக்கப்படும்.

Thursday, 5 March 2015

பனங்கருப்பட்டி



இந்தியாவில் வேறெந்த மாநிலங்களை விடவும் பனைமரங்கள் தமிழகத்தில் மிகுதி. இதன் தேவை இன்றி யமையாததாகவே இருக்கிறது. பனையின் பயன்பாடு ஓலை, நுங்கு, பதனீர், பனைவெல்லம் என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இவற்றில் முக்கிய பங்கு கருப்பட்டிக்கு உண்டு.

சீனி நமக்கு எவ்வளவு பகையோ அதற்கு நேர் மாறாக கருப்பட்டி நம் நெருங்கிய நண்பன். பனங்கருப்பட்டி யின் மருத்துவ பயன்கள் அளவில்லாதது.



பனங்கருப்பட்டியில் மருத்துவ பயன்கள் சர்க்கரையை விட பல நூறு மடங்கு மிகுதியாக இருக்கின்றன என்றாலும், அதனை நாடுபவர்கள் குறைவே. ஆனால், வெள்ளை சர்க்கரையை சாப்பிடும்போது, எவ்வித சத்தும் இல்லாத வெள்ளை சர்க்கரையை ஜீரணிக்கவே உடலில் ஏற்கனவே உள்ள விட்டமின் பி, கால்சியம் போன்ற சத்துக்கள் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. மேலும், தொடர்ந்து சர்க்கரை உண்பதால் ஈரலில் கடுமையான அழுத்தம் ஏற்பட்டு, ஈரலில் கொழுப்பு தேங்கி, அது 'இன்சுலின்' சுரப்பில் பாதித்து "சர்க்கரை நோய்"க்கு வழிவகுக்கிறது. 

அதேநேரம், சர்க்கரை உற்பத்தியின் போது கலக்கப்படும் பல்வேறு கெமிக்கல்கள், இதய நோயின் தாக் கத்தை அதிகரிக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. மேலும், கேன்சர், கர்ப்பப்பை, கிட்னி, கணையம் என உடலின் முக்கிய உறுப்புகள் அனைத்தையும் ஒன்றுவிடாமல்  கிளீன் போல்ட் ஆக்கி விடுகிறது. இதற் கும் மேலாக இந்த கெமிக்கல்கள் நம் மூளையை சிறிது சிறிதாக பாதிக்க துவங்குகிறது. நம் மரபணுவையும் பாதித்து அடுத்த தலைமுறையை இயற்கையிலேயே நோயுடைய தலைமுறையாக்குகிறது. இது மட்டுமா இன்னும் பெயர் கண்டறியாத நோய்கள் பல.

இப்படி சர்க்கரை மற்றும் பல நோய்களின் தாக்கத்தில் இருந்து விடுபட நமக்கு கிடைத்த அருமருந்து தான் கருப்பட்டி. சர்க்கரைக்கு மாற்றாக சரியாக கருப்பட்டியை பயன்படுத்தினாலே இன்று உள்ள பெரும்பாலான நோய்கள் இல்லாமலும் அதற்கான மருத்துவ செலவுகள் மற்றும் மருந்துகள் அவசியமில்லாமலே போகும்.

"உணவே மருந்து" என்னும் நியதிப்படி, கால சூழலுக்கு ஏற்றார்போல உடலுக்கு தேவையானதை தேவைப் படும் நேரத்தில் வழங்குகிறது கருப்பட்டி. உடல் இயக்கத்தை சீரான சமநிலைக்கும் கொண்டு வருகிறது. 

பனங்கருப்பட்டியில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. 

விட்டமின்-பி, மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ள கருப்பட்டி நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.

பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத் தால் கருப்பை ஆரோக்கியமாக இருக்கும். நார்ச்சத்தும் இதில் அதிகம்.

குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித் தொல்லை நீங்கும்.

கருப்பட்டி மற்றும் பனங்கல்கண்டில் எண்ணற்ற விட்டமின்களும், மினரல் சத்துக்களும் உள்ளன. கருப் பட்டி இயற்கையாகவே உடலை குளிர்ச்சியடையச் செய்யும். அதில் உள்ள 'கிளைசீமி இன்டெக்ஸ்' உடலில் கலக்கும் சர்க்கரை அளவை, வெள்ளை சர்க்கரையை விட பாதிக்கும் கீழாக குறைக்கிறது.

சர்க்கரைக்குப் பதிலாக கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதி கமாக இருக்கிறது.கருப்பட்டி பணியாரம் குழந்தைகளுக்கு ஏற்றது. கருப்பட்டியை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்புகின்றனர்.

பழந்தமிழர் வாழ்வில் முக்கிய பங்கு வகித்த கருப்பட்டி இன்று தமிழர்களால் முற்றிலும் புறக்கணிக்கப் பட்டுவிட்டது அல்லது மறக்கப்பட்டு வருகிறது என்பது கசக்கும் உண்மைதான்.

Tuesday, 3 March 2015

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்?


இந்த செய்தி பல பேருக்கு தெரிந்திருக்கும் தெரியாதோர்க்கு, தமிழக கலாச்சாரங்களில் முக்கியமானது சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது.

இப்போதெல்லாம் டைனிங் டேபிள் வீட்டுக்கு வாங்குவது ஒரு அத்தியாவசிய தேவை போல் ஆகிவிட்டது. விருந்தினர்களை அதில் உட்காரவைத்து பரிமாறுவதுதான் நாகரீகம் சௌகரியம் என ஆகிவிட்டது ...

முன்பெல்லாம் வாழை இலையில் தரையில் பரிமாறுவதுதான் கெளரவம்..ஆனால் இப்போது டைனிங் டேபிள்....இது சரியா தவறா ?!

முதலில் முன்னோர்கள் இப்படி சம்மணமிட்டு சாப்பிட்டதின் நோக்கமென்ன?

சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும். சாப்பிடும் பொழுது காலைத்தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது.

எனவே ஜீரணம் தாமதமாகிறது.

காலை மடக்கி சுக ஆசனத்தில் அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட, சாப்பாடு ஜீரணமாகிவிடும்.



ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.

எனவே தான் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும் படி வலியுறுத்த பட்டது.

HOW TO DETECT A HIDDEN CAMERA IN TRIAL ROOM?



When you stay in a hotel, how do you know there is no room pinhole camera ?

When travel or take a business trip, you will stay at a hotel, but you do not know that you could unknowingly be photographed.

Remember when staying in a hotel, you can use this method to check your room :

When you have entered into your room, turn off the lights, and close the curtains,open your phone camera, do not turn the flashlight on.

Turn around the room with your cell phone, when a red dot is found, that means that a hidden web camera is installed.
If no red dots, the room is ok.

இலக்குதான் முக்கியம்...


"குருவே என்னால் வாழ்கையில் முன்னேற முடியவில்லை.'' என்று சலிப்புடன் சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு.

"வருத்தப்படாதே,

என்ன பிரச்சனை?" என்று கேட்டார் குரு.

"என்னைப் பற்றி குறை கூறுபவர்கள் அதிகரித்து விட்டார்கள். அவர்களை எப்படி சமாளிப்பது என்று எனக்குத் தெரியவில்லை. என்றான் வந்தவன்.
வந்தவனின் பிரச்சனை குருவுக்குப் புரிந்தது.

அவனுக்கு ஒரு சம்பவத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.



"அமெரிக்காவில் பரப்பரப்பான நகரில் ஒரு டாக்ஸியில் இந்தியர் ஒருவர் பயணித்துக் கொண்டிருந்தார். காலை நேரம். நிறைய போக்குவரத்து. சிரமப்பட்டுதான் வண்டி ஓட்ட வேண்டியிருந்தது.

பல இடங்களில் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதுவது போல் வந்தன. ஆனால் டாக்சி ஓட்டுனர் கொஞ்சமும் பதட்டப்படவில்லை.

இப்படி சுமூகமாக பயணித்துக் கொண்டிருந்தபோது ஒரு திருப்பத்தில் இன்னொரு கார் ஒன்று குறுக்கே வந்துவிட்டது.

இரு கார்களும் மோதுவது போல் சென்று மெல்லிய இடைவெளியில் இடிக்காமல் தப்பின. தவறு எதிரில் வந்தவனுடையதுதான்.

இருந்தாலும் ஆத்திரத்தில் டாக்சி ஓட்டுநரைத் திட்டினான்.
ஆனால் ஆச்சர்யம்!

பதிலுக்கு டாக்ஸி ஓட்டுனர் அவனை திட்டவில்லை. அவனைப் பொருட்படுத்தாமல் வண்டியை செலுத்தினார்.

இதே போல் இன்னொரு சம்பவம். அதிலும் டாக்ஸி ஓட்டுனர், பொறுமை இழக்கவில்லை. ஆத்திரப்படவில்லை. நிதானமாக இருந்தார். இதையெல்லாம் பார்த்த இந்தியருக்கு வியப்பு. இறங்க வேண்டிய இடம் வந்தபோது ஓட்டுனரிடம் கேட்டார்.

"எப்படி இவ்வளவு பொறுமையாய், யாருடைய திட்டுக்கும் பொருட்படுத்தாமல் வண்டி ஒட்டுகிறீர்கள்?"

அதற்கு அந்த டாக்ஸி ஓட்டுனர், "என்னுடைய இலக்கு உங்களை நீங்கள் சேரவேண்டிய இடத்தில் சேர்ப்பது. வீதியில் போவோர் அள்ளிக் கொட்டும்
குப்பைகளையெல்லாம் என் மனதில் சேர்த்துக்கொள்ளவில்லை.  அதையெல்லாம் பொருட்படுத்தி ஆத்திரப்பட்டு பதில் சொல்லிக்கொண்டிருந்தால் நாம் போய் சேர வேண்டிய இடத்தை அடைய முடியாது."

இந்தச் சம்பவத்தை குரு சொன்னதும் தான் செய்ய வேண்டியது என்ன என்பது வந்தவனுக்கு புரிந்தது. 

ஆமாம், நண்பர்களே, நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர இடையில் வரும்,
கொஞ்ச நஞ்ச இடைஞ்சல்கள் அல்ல..

D E V E L O P M E N T ?


Sunday, 1 March 2015

Professor Vs Engineer



An Engineer failed in Exam & decided to make a deal with Professor.

Engineer: Sir, Can I ask u one question

Professor: Yes.

Engineer: If u can answer dis question, i will accept my final marks, if u can't, u have to give me "A".

Professor agreed.

Engineer asked: "What is legal but not logical, logical but not legal & neither legal nor logical?"

Professor thought about it for hrs & pondered no answer. He had to finally give up as he really did not know. He gave the engineer his "A". Then he asked Engineer for the answer.

Engineer answered: Sir, u are 65, married to 28 yrs old woman, this is legal but not logical. 

Ur wife, is having an affair with a 23 year old boy, dis is logical but not legal.

Ur wife's boyfriend has failed in his exam & yet u have given him an "A", this is neither logical nor legal.

Professor Shocked!!

Working Men Vs Home Maker


A man was sick and tired of going to work every da,. while his wife stayed home. He wanted her to see what he went through -

So he prayed: 'Dear Lord: I go to work every day and put in 8 hours while my wife merely stays at home. I want her to know what I go through. So, please allow her body to switch with mine for a day.

God, in his infinite wisdom, granted the man's wish. The next morning, sure enough, the man awoke as a woman...he arose, cooked breakfast for his mate, awakened the kids, set out their school clothes, fed them breakfast, packed their lunches, drove them to school, came home and picked up the dry cleaning, took it to the cleaners and stopped at the bank to make a deposit, went grocery shopping, then drove home to put away the groceries.

Then it was already 1 PM and he hurried to make the beds, do the laundry, vacuum, dust, sweep and mop the kitchen floor, ran to the school to pick up the kids and got into an argument with them on the way home, set out milk and cookies and got the kids to do their homework. Then set up the ironing board and watched TV while he did the ironing.

At 4:30 he began peeling potatoes and washing vegetables for salad, breaded the pork chops and snapped fresh beans for supper. After supper, he cleaned the kitchen, ran the dishwasher, folded laundry, bathed the kids and put them to bed. 

At 9 PM exhausted and, though his daily chores weren't finished, he went to bed where he was expected to make love, which he managed to get through without complaint.

The next morning, he awoke and immediately knelt by the bed and said : -
"Lord, I don't know what I was thinking. I was so wrong to envy my wife's being able to stay home all day! Please, Oh! Please, let us trade back.. Amen!"

The Lord, in his infinite wisdom, replied:

"My son, I feel you have learned your lesson and I will be here to change things back to the way they were. But you'll have to wait nine months, though. You got pregnant last night"

Translate