வெள்ளி கறுத்துப் போகாமல் இருக்க!
- வெள்ளிப் பாத்திரங்களோடு கூடவே சிறு கற்பூரக்கட்டிகளைப் போட்டு வைத்தால் பாத்திரம் கறுத்துப் போகாது.
- வெள்ளிப் பாத்திரங்களை டிஷ்யூ பேப்பரில் சுற்றி மரப் பொட்டியில் வைத்தாலும் கறுத்துப் போகாது.
- உருளைக்கிழங்கு தோல், விபூதி கொண்டு வெள்ளிச் சாமான்களைத் தேய்த்தால் கறுப்பு காணாமல் போகும்.
- கொதிக்கும் தண்ணீரில் அரைத்தேக்கரண்டி ஆப்பசோடா, அலுமினிய ஃபாயில் பேப்பர்களைப் போடவும். இதில் கறுத்த வெள்ளிப் பாத்திரங்களை போட்டு ஐந்து நிமிடங்களுக்குப் பின் எடுத்தால் பாத்திரம் பளபளவென இருக்கும்.
- வெள்ளி நகைகள் வைக்கும் பெட்டியில் ஒரு சாக்பீஸ் போட்டு வைத்தால் நகைகள் கறுகாமலிருக்கும்.
- வெள்ளிப் பாத்திரங்களை காற்று படாமல் பிளாஸ்டிக் கவர்களுக்குள் போட்டு கட்டி வைத்தால் புதிது போல் இருக்கும்.
- வெள்ளிப் பாத்திரங்களை ஒருநாள் முழுவதும் மோரில் ஊறவைத்து கழுவினால் புதியது போல பளிச்சிடும்.