Sunday, 15 March 2015

காய்களின் மகிமை


பாகற்காய் - முற்றாத பாகற்காயை மிக்ஸியில் போட்டு நன்றாக விழுது பதத்துக்கு அரைக்கவும்.



இந்த விழுதை ஓர் எலுமிச்சம்பழ அளவு எடுத்து வாயில் போட்டுக் கொண்டு சிறிதளவு வெந்நீரை அருந்தவும். இது போன்று உணவை சாப்பிட்ட அரைமணி நேரத்துக்கு பின், தொடர்ந்து 40 நாள் சாப்பிட்டு வர சர்க்கரை வியாதி முழுமையாகக் குணமாகும்.

முருங்கைக் கீரை - முருங்கை இலைச்சாறை தினசரி 50 மில்லி அளவுக்குச் சாப்பிட சர்க்கரை நோய்க்கு சிறந்த மருந்தாகும்.

முருங்கை கீரையைப் பொரித்து வேர்க்கடலையை தூள் செய்து சேர்த்துச் சாப்பிட மலச்சிக்கல் நீங்கும்.

முருங்கைத் துளிரும் கல்யாண முருங்கைத் துளிரும் சம அளவு அரைத்து சாறு எடுத்துக் கொடுக்க கல்லீரல், மண்ணீரல் நோய் நீங்கும்.



முருங்கை ஈர்க்கை இடித்து சிறிது சீரகம் சேர்த்து ரசம் வைத்துக் கொடுக்க கால் வீக்கம் குறையும்.

முருங்கைக் கீரையை அரைத்து எலுமிச்சை அளவு தினம் உண்டு வர பித்த மயக்கம், மூர்ச்சை நீங்கும்.

Translate