Thursday, 12 July 2018

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை


பெரும்பாலான காடுகளில் குரங்கு இருக்கும் இடத்தின் அருகில்தான் மான்கள் இரை தேடச்செல்லும்.  இதற்கு காரணம், குரங்குகள் உயரமான மரங்களில் இருப்பதால்.  மான்களை வேட்டையாட வரும் சிங்கம், புலி போன்றவைகள் வரும்போது உயரமான மரத்தில் இருப்பதினால் குரங்குகள் க்ரீச் க்ரீசென்று சத்தமிடும்.  வரப்போகும் ஆபத்தை முன் கூட்டியே மான்களுக்கு உணர்த்திவிடுவதால் அவை ஓடி விடும்.




இதே போன்று ஆப்ரிக்க காடுகளில் நெருப்புக்கோழிகளும் வரிக்குதிரைகளும் ஒன்றாக இருக்கும்.  நெருப்புக்கோழிகள் மிக உயரமாக இருப்பதாலும், கூர்மையான கண் பார்வை கொண்டதாலும் வரப்போகும் ஆபத்தை வரிக்குதிரைகளுக்கு முன் கூட்டியே உணர்த்திவிடுகின்றன.



எனவே கூடி வாழ்ந்தால்.. கோடி நன்மை :-)

Translate