Saturday, 21 July 2018

எண்ணம் போல் வாழ்கை


அந்த சுவாமிஜியிடம் பிரசாதம் வாங்கிச் சாப்பிட்டால் தீராத நோயெல்லாம் தீரும் என்றார்கள்.  பிரசாதம் வாங்க கூட்டம் அலைமோதியது.

கூட்டத்தின் கடைசியில் வந்த இளைஞன் சுவாமிஜியிடம் கேட்டான்.  "வந்திருப்பவர்கள் அனைவருக்கும் ஒரே நோய் இருந்திருக்காது.  வேறு வேறு நோய்கள்தான் இருந்திருக்கும்.  அப்படியிருக்க நீங்கள் கொடுக்கும் ஒரே பிரசாதம் எப்படி எல்லா நோயையும் குணப்படுத்தியிருக்க முடியும்?"

சுவாமிஜி சிரித்திக்கொண்டே சொன்னார், "நோய் குணமானது நான் தந்த பிரசாதத்தினால் அல்ல.. பிரசாதம் சாபிட்டால் நோய் குணமாகும் என்ற அவர்களின் நம்பிக்கையினால்.  எண்ணம் போல் வாழ்கை!"

Translate