மிகுந்த வயதான ஒரு சந்நியாசி தன் இறுதி நேரத்தில் தன்னுடைய சீடர்களுக்கு வாழ்க்கைத் தத்துவம் ஒன்றை புரிய வைக்க நினைத்தார்.
எல்லோரையும் அழைத்து உட்கார வைத்து தனது பொக்கை வாயைத் திறந்து காண்பித்தார்.
அவ்வுளவுதான் "இதுதான் வாழ்க்கைத் தத்துவம்" என்று சொல்லி அனைவரையும் போகச் சொல்லிவிட்டார்.
சீடர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஒரே ஒரு சீடன் மட்டும் வாய்க்குள் அப்படியென்ன வாழ்க்கைத் தத்துவம் இருந்துவிடப் போகிறது என்று குழம்பினான். மெதுவாக குருவிடமே கேட்டான்.
குரு அவனிடம், "என் வாய்க்குள் என்ன இருந்தது?" என்று கேட்டார்.
சீடன், "நாக்கும், உள் நாக்கும்" என்றான்.
குரு : பல் ஏதாவது இருந்ததா?
சீடன் : இல்லை
குரு : அதுதான் வாழ்க்கை! வன்மையானது அழியும்; மென்மையானது வாழும்!