Thursday, 29 March 2018

கிடைப்பது கிடைக்காம இருக்காது..கிடைக்காம இருக்கறது கிடைக்காது..


நமக்கு வர வேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செலும்போது நம் மனம் துடிக்கும் துடிப்பை அவ்வுளவு எளிதில் வார்த்தைகளால் விவரித்து விட முடியாது. அப்படிப்பட்ட தருணங்களில் இந்த பதிவை படியுங்கள். உங்களுக்கு வர வேண்டிய நல்ல பெயர் உங்களுக்கு வருதோ இல்லையோ உங்கள் மனதுக்கு பக்குவம் நிச்சயம் வரும்.

ஒரு கட்டடம் கட்டும் போது, சவுக்கு மரத்தை முக்கியமா வெச்சு சாரம் கட்டி, குறுக்கு பலகைகள் போட்டு, அதன் மேல் பல சித்தாள்கள் நின்னு, கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் பல மாதங்களுக்குப் பிறகு, அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு, கீழே இறங்கும்போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள்.

கட்டடம் முடிந்து கிரஹப் பிரவேசத்தன்று எந்த கட்டடம் கட்டுவதற்கு முக்கிய காரணாமாக இருந்த அந்த சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னல் எங்கயோ மறைத்து வைத்துவிட்டு, வேறெங்கயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிரஹப் பிரவேசத்தை நடத்தி அனைவரையும் வரவேற்பாற்கள். அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும்.

இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா? அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும். ஆடுமாடுகள் மேயும், குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள். பிறகு குப்பை வண்டியில் போய்ச் சேரும்.

மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை. அடுத்த கட்டடம் கட்டுவதற்கு தயார் நிலையில் என்றைக்கும் சிரித்துக்கொண்டே இருக்கும்.

எனவே நீங்கள் வாழையாக இல்லாமல் சவுக்கு மரமாக இருங்கள். கிடைப்பது கிடைக்காம இருக்காது..கிடைக்காம இருக்கறது கிடைக்காது..

Translate