ஒரு அறிவியல் ஆய்வகத்தில் வேளையில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானி தன் மேலதிகாரியிடம் தன் பிள்ளைகளை மாலை 5 மணிக்கு கண்காட்சிக்கு அழைத்துச் செல்ல இருப்பதால் தனக்கு மாலை வீடு செல்ல அனுமதி வேண்டினார். மேலதிகாரியும் அனுமதி தந்தார்.
வேலையில் அதிக ஆர்வம் காரணாமாக மும்முரமாய் பணியாற்றிய விஞ்ஞானி, திடீரென்று கடிகாரத்தை பார்த்தபோது மணி எட்டு. பிள்ளைகள் ஏமாற்றம் அடைந்து இருப்பார்கள் என்று எண்ணி தயக்கத்துடன் வீட்டுக்கு போனார். வீட்டில் மனைவி மட்டுமே இருந்தார். "குழந்தைகள் எங்கே" என்று மனைவியிடம் கேட்டார்.
"சரியாக 5 மணிக்கு குழந்தைகள் கண்காட்சியை பார்க்க போய்விட்டார்களே. உங்கள் மேலதிகாரிதான் வந்து அழைத்துப் போனார்." என்றால் மனைவி.
தான் வேளையில் மூழ்கி விட்டதைக் கவனித்த மேலதிகாரி அந்த விஞ்ஞானியை தொந்தரவு செய்யவில்லை. குழந்தைகளின் கனவையும் நிராசையாக்க விரும்பவில்லை. ஆகையால் தானே சென்று குழந்தைகளை கண்காட்சிக்கு அழைத்துச் சென்றார்.
அது சரி. அந்த மேலதிகாரி யார் என்று யோசிக்கிறீர்களா? அவதான் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்.
