Thursday, 29 March 2018

ஆசிரியரின் மதிப்பு!


டாக்டர் இராதாகிருஷ்ணன் ஜனாதிபதியாக இருந்தபோது அமெரிக்காவிற்கு அரசுப் பயணமாக சென்றிருந்தார்.

அமெரிக்க ஜனாதிபதி அவருக்கு வரவேற்பும் அளித்தார்.  மேலும் சிறு விமானத்தில் வெள்ளை மாளிகையின் மேல் பறந்து சுற்றிக் காண்பிக்கச் செய்தார்.

அமெரிக்கப் பாதுகாப்புச் சட்டப்படி வெள்ளை மாளிகையின் மீது உள்நாட்டு விமானங்கள் உட்பட எந்த விமானமும் பறக்கக் கூடாது. அவ்வாறிருந்தும் இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு மட்டும் ஏன் இந்தக் கெளரவம் அளிக்கப்பட்டது எனக் கேட்டபோது அமெரிக்க அரசு அளித்த பதில்..."அவர் இந்தியர் என்பதற்காகவோ, ஜனாதிபதி என்பதற்காகவோ அல்ல. அவர் ஒரு ஆசிரியர் என்பதற்காக."


Translate