Thursday, 29 March 2018

காலமும் கவிதையும்




மாணவர்கள் நடத்திய ஒரு தமிழ் மன்றத்தில் பேச கண்ணதாசன் அழைக்கப்பட்டிருந்தார். "காலமும் கவிதையும்" என்ற தலைப்பில் அவர் பேச இருந்தார். கடைசியாக ஒரு மாணவன் கவிதை வாசித்தார். யாருமே கை தட்டவில்லை.

இறுதியில் கண்ணதாசன் கவிதை வாசித்து முடித்தார்! அப்போது கைதட்டலால் அரங்கமே அதிர்ந்தது! கைதட்டல் ஓய்ந்தவுடன் கண்ணதாசன் அவையை நோக்கி, "இங்கு கடைசியாக வாசித்த மாணவரின் கவிதைக்கு யாருமே கை தட்டவில்லை...ஆனால் அது என் கவிதையை!... நான் வாசித்தது அந்த மாணவரின் கவிதையை!! இந்தக் காலத்தில் கவிதையின் தரத்தைவிட அது யாருடைய வாயிலிருந்து வருகிறது என்று பார்த்துத்தான் வரவேற்கிறார்கள்....இதுதான் "காலமும் கவிதையும்" என்பது"...என்று முடித்தார்.

Translate