Thursday, 29 March 2018

பால்... பால்...




  • பால் வாங்கியவுடன் காய்ச்சிவிட வேண்டும்
  • காய்ச்சிய பாலை சில மணி நேரம் கழித்து பயன் பெற வேண்டும் என்றால், மீண்டும் காய்ச்ச வேண்டும்
  • ஃபிரிஜ்ஜில் வைக்க வேண்டும் என்றால் நன்றாக ஆறிய பிறகே வைக்க வேண்டும்
  • பாலை நன்றாக காய்ச்சி ஆற விட்டால் அதன் ஆடை மஞ்சள் நிறமாக இருந்தால் அது பசும்பால்
  • பாலை நன்றாக காய்ச்சி ஆற விட்டால் அதன் ஆடை வெள்ளையாக நிறமாக இருந்தால் அது எருமை பால்
  • பாலை உறை ஊற்றும்போது அதனுடன் சிறிது சர்க்கரை போட்டு வைத்தால் மூன்று நாட்கள் வரை தயிர் புளிக்காமல் இருக்கும்
  • குளிர்காலத்தில் பாலை உரை ஊற்றினால் சரியான தயிர் கிடைக்காது. ஆனால் பாலைக் காய்ச்சி அது வெது வெதுப்பாக இருக்கும்போது வழக்கத்தைவிட இரண்டு மடங்கு உறை மோரை ஊற்றினால் நல்ல தயிர் கிடைக்கும்
  • சுத்தமாக கழுவ முடியாத வாய் குறுகலான பாத்திரத்தில் பாலை வைக்ககூடாது



Translate