(வேலைக்குப் போய் திரும்பி வந்த அம்மாவும் அவளின் ஐந்து வயது மகளும்..)
"வேலைக்குப் போறப்ப நம்ம வீட்டு பீரோ சாவியை ஏன்ம்மா ஆயாகிட்ட கொடுத்துட்டு போகலை?"
.
.
.
"பீரோவுக்குள் விலை உயர்ந்த பொருள்கள்லாம் இருக்கே...எப்படி கொடுக்க முடியும்?"
.
.
.
"உன்னோட ATM ஏம்மா ஆயாகிட்ட கொடுக்க மாட்டேங்கற?"
.
.
.
"ஸ்ஸ்.. இது என்ன கேள்வி? இதெல்லாம் முக்கியமான பொருள். அதை எப்படி ஆயாகிட்டக் கொடுக்க முடியும்?"
.
.
.
"அப்ப என்னை மட்டும் ஏம்மா ஆயாகிட்ட விட்டுட்டுப் போற?"