Thursday, 29 March 2018

அனைவரும் அம்மணமாக திரியும் ஊரில் நாம் மட்டும் கோவணம் கட்டுவானேன்?


ஒரு பிரபல அரசியல் தலைவர் தன் மீது சுமத்தப்பட்ட சொத்துகுவிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் தண்டனைக்கு உள்ளாக்கபடுகிறார். வழக்கு போட்டவருக்கு உள் நோக்கம் இருக்கலாம், அந்த பிரபல தலைவருக்கு எதராக நீதிமன்றத்தில் வாதாடிய வக்கீலுக்கு கூட உள் நோக்கம் இருக்கலாம். அனால் தீர்ப்பு சொன்ன நீதிபதிக்கு உள்நோக்கம் கற்ப்பிப்பதோ சம்பந்தப்பட்ட அந்த மாநிலத்துக்கே உள்நோக்கம் கற்ப்பிப்பதோ அறிவீனம்.


குறிப்பிட்ட அந்த தலைவர் தன் மீது போடப்பட்ட வழக்கிற்கு அடிப்படை முகாந்திரமே இல்லை, அது 'அத்தனையுமே' ஜோடிக்கபட்டது, தன் அரசியல் எதிரிகள் தன்னை தேர்தலில் எதிர்நோக்க திராணியில்லாமல் குறுக்கு வழியில் தன்னை புதை குழியில் தள்ள போடப்பட்ட வழக்கு என்று தன் மனசாட்சி படி கூற முடியுமா என்பது கேள்விக்குறியே? அதுமட்டுமல்லாமல் தன் மீது போடப்பட்ட வழகிற்க்கான அடிப்படை முகாந்திரம் உள்ளது என்பது நாடே அறந்த ஒன்று.


குற்றம் சாட்டப்பட்டவரே கூட சட்டத்தின்படி தாங்கள் செய்தது தவறு இல்லை என்ற கூற்றை முன்வைக்கின்றனரே தவிர அந்த குற்றச்சாட்டு போலி என்று கூறவில்லை. இது இப்படி இருக்க நீதிமன்றத்தால் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்ட ஒருவருக்கு "ஆதரவாக" ஒரு மாநிலத்தில் உள்ள "பெரும்பாலானோர்" போராடுவது வேதனை அளிப்பதை விட வெட்கப்பட வேண்டிய ஒன்று.


சம்பந்தப்பட்ட அந்த கட்சி, தன் தலைவருக்காக போராடுவது என்பது புரிந்துக்கொள்ள கூடிய ஒன்று. ஆனால் மாநில அளவில் நடக்கும் (தாமாக முன் வந்து) போராட்டத்தை பார்க்கும்போது அந்த தலைவருக்கே தான் செய்தது தவறில்லை போலும் என்ற எண்ணத்தையும் எதிர் காலத்தில் இது போன்ற தவறுகளை மறுபடி செய்தாலும் தனக்காக போராட மக்கள் கூட்டம் இருக்கும் என்ற அசாத்திய தைரியத்தையே வழங்கும்.


தண்டனைக்கு எதிராக குரல் கொடுக்கும் வெவ்வேறு பிரிவினரும் அந்த தலைவர் செய்த "நல்ல காரியங்களை" மட்டுமே பட்டியளிடுகின்றனரே தவிர ஒருவர் கூட அந்த தலைவர் அப்படிப்பட்ட குற்றத்தை செய்து இருக்கமாட்டார் என்று கூற முடியவில்லை. மாறாக மற்ற தலைவர்கள் செய்த இமாலய குற்றத்திற்கு முன் இது ஒன்றுமே இல்லை என்றே தங்களை சமாதானப்படுத்திகொள்கின்றனர்.


நேரடியாக போராட்ட களத்தில் இறங்கவில்லை என்றாலும் கூட உள்ளதை உள்ளபடி சொல்லும் பத்திரிகைகள் என்று மக்களால் அனுசரிக்கப்படும் சில பத்திரிகைகள் கூட அந்த தலைவருக்கு வழங்கப்பட்ட தண்டனை அதிகம் என்றும், அவரை சக மனிதானாக மட்டுமே பார்க்க கூடாது என்றும் சமூகத்தில் அவருக்கு இருக்கும் அந்தஸ்த்தையும் பார்க்க வேண்டும் என்று கட்டுரை வெளியிட்டு இருப்பது அரசியல் நிற்பந்தமா அல்லது அனைவரும் அம்மணமாக திரியும் ஊரில் நாம் மட்டும் கோவணம் கட்டுவானேன் என்ற எண்ணமா என்று புரியவில்லை.

Translate