Thursday, 29 March 2018

சாதித்து காட்டிய ஜாம்ஷ்ட்ஜீ..


குஜராத்தைச் சேர்ந்த ஜாம்ஷெட்ஜீ சொந்த வேலை விஷயமாக பம்பாய்க்குச் சென்றார். அன்று பம்பாயின் பிரபலாமான வாட்சன் ஓட்டலுக்குச் சென்று தங்குவதற்கு அறை வேண்டுமென்றார். இங்கே ஆங்கிலேயர்கள் மட்டுமே தங்கலாம்; இந்தியர்களுக்கு இங்கு இடமில்லை என்றனர் நிவாகத்தினர்.

கோபமடைந்த ஜாம்ஷெட்ஜீ "இந்த இடத்திலேயே இந்த ஓட்டலைவிட பெரிய ஓட்டலை என்னால் கட்ட முடியும்" என்றார். அங்குள்ள ஆங்கிலேயர்கள் கேலியாகச் சிரித்தனர்.




சொன்னது போலவே வாட்சனுக்கு அருகிலேயே இடத்தை வாங்கி பிரமாண்டமான ஓட்டலைக் கட்டத் தொடங்கினார்.  நாலே கால் கோடி ரூபாயில் 1903-ல் ஓட்டலைக் கட்டி முடித்தார். அந்த ஓட்டலின் பெயர் தாஜ்மகால் பேலஸ்.


Translate