சொல்லுதல் - சுருக்கமாய்ச் கூறுதல்
பேசுதல் - நெடுநேரம் உரையாடுதல்
கூறுதல் - கூறுபடுத்திச் சொல்லுதல்
சாற்றுதல் - பலரறியக் கூறல்
பன்னுதல் - திரும்பத் திரும்பச் சொல்லுதல்
கொஞ்சுதல் - செல்லமாகச் சொல்லுதல்
பிதற்றுதல் - பித்தனைப் போல் சொல்லுதல்
ஓதுதல் - காதில் மேல்லிதாகச் சொல்லுதல்
ஊறுதல் - ஒன்றுக்கொன்று மாற்றி சொல்லுதல்
கழற்றுதல் - கடிந்து சொல்லுதல்
விளம்புதல் - பலர் அறியச் சொல்லுதல்
செப்புதல் - விடை சொல்லுதல்
மொழிதல் - திருத்தமாகச் சொல்லுதல்
இயம்புதல் - இனிமையாகக் கூறல்
வற்புறுத்தல் - அழுத்தமாகக் கூறல்