தங்கத்தை லட்சுமி குடியிருப்பதாக நம்புவதால் அதை காலில் அணிய வேண்டாம் வேண்டாம் என்று கூறப்படுகிறது. இதில் விஞ்ஞானமும் அடங்கியிருக்கிறது. தங்கம் நிரந்தரமாக காலில் அணியும்போது வாதம் வர வாய்ப்பு உண்டு என்று மருத்துவத்துறை கண்டறிந்துள்ளது.
மேலும் விபூதி, சந்தனம், குங்குமம் போன்றவற்றை இடுப்புக் கீழே அணியக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவும் முற்றிலும் விஞ்ஞான அடிப்படையில் கூறப்பட்டதுதான்.
சந்தனம் பொதுவாக ஒரு குளிரச்செய்யும் பொருள். இதை இடுப்புக்கீழே மிகையாக பூசினால் அது இன விருத்தி செய்யும் திறனைப் பாதிக்கும் என்று சாஸ்திரம் சொல்கிறது.
பிரம்ம முகூர்த்தத்தில் சந்தனமும், விடியற்காலையில் குங்குமமும், மாலைப்பொழுதில் திருநீறும் அணிவது நரம்பு உறுதிக்கும், நோய் நிவாரணத்துக்கும் உத்தமம் என்று சூரிய ஒளியையும் மனித உடலையும் சம்பந்தப்படுத்தி செய்யப்படும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன.